"ப்ளூ பிலிம்மில் நடித்ததாக சொன்னீங்களே.. இப்பதான் ஹாப்பி".. கதறி அழுத சந்திரபாபு... விளாசிய ரோஜா!
ஹைதராபாத்: ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு செய்தியாளர் சந்திப்பில் கதறி அழுத சம்பவம் பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் நடிகையும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏவுமான ரோஜா, சந்திரபாபு நாயுடு குறித்து கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார்.
இன்று ஆந்திர பிரதேச சட்டசபை கூட்டத்தில் வேளாண் விவாதத்தின் போது ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கும் தெலுங்கு தேசம் கட்சிக்கும் இடையில் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் அம்பாதி ராம்பாபு வைத்த சில விமர்சனங்களை அவையில் சலசலப்பை ஏற்படுத்தியது.
அவையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் அம்பாதி ராம்பாபு சர்ச்சைக்குரிய சில கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. முக்கியமாக சந்திரபாபு நாயுடு குறித்தும், அவரின் குடும்பம் குறித்தும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசின் சில எம்எல்ஏக்கள் கருத்து தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

அமளி
இதையடுத்து அவையில் பெரிய அமளி ஏற்பட்டது. எம்எல்ஏக்களுக்கு இடையே பெரிய கைகலப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் அவையில் எழுந்து நின்ற சந்திரபாபு நாயுடு.. இனி முதல்வரான பின்தான் மீண்டும் அவைக்கு வருவேன் என்று கூறிவிட்டு அவையில் இருந்து வெளியேறினார். பின்னர் வெளியே செய்தியாளர்களை சந்தித்த சந்திரபாபு நாயுடு கதறி அழுதார். என் குடும்பத்தை பற்றி தவறாக பேசுகிறார்கள். என் மனைவியை பற்றி தவறாக பேசுகிறார்கள்.

தவறு
என் மனைவி எப்போதும் அரசியல் பற்றி பேசியது இல்லை. ஆனால் அவரை பற்றி கூட இந்த அவையில் தவறாக பேசி உள்ளனர். இது அநாகரீகமான அவை. இனி இங்கு நான் ஒரு சாதாரண எம்எல்ஏவாக கால் வைக்க மாட்டேன், என்று கூறி செய்தியாளர் சந்திப்பிலேயே கதறி அழுதார். இந்த வீடியோ இணையம் முழுக்க வைரலாகி உள்ளது. இந்த நிலையில் நடிகையும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏவுமான ரோஜா, சந்திரபாபு நாயுடு குறித்து கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார்.

ரோஜா
சந்திரபாபு நாயுடு குறித்து பேசிய வீடியோ வெளியிட்டுள்ள ரோஜா, என்னை அவையில் இதைவிட மோசமாக நீங்கள் தானே நடத்தினீர்கள். இப்போது உங்களுக்கு அதே விஷயம் நடக்கும் போது கண்ணீர் விடுகிறீர்கள். இப்போதுதான் வலிக்கிறதா? இதுதான் விதி என்று உணர்ந்து கொள்ளுங்கள். விதி உங்களை சும்மா விடாது. அது மீண்டும் வந்து உங்களை தாக்கும்.

சிடி
அவையில் சிடி ஒன்றை எடுத்து வந்து அது ப்ளூ பிலிம். ரோஜா நடித்த படம் என்று சொன்னேர்களே நியாபகம் இருக்கிறதா? அப்போது உங்களுக்கு அது அநாகரீகமாக தெரியவில்லையா. உங்களுக்கு நடந்தால் ஒரு நியாயம், எங்களுக்கு நடந்தால் ஒரு நியாயமா?. உங்கள் வீட்டில் மட்டும்தான் பெண்கள் இருக்கிறார்களா? எனக்கு குடும்பம் இல்லையா? எனக்கு குழந்தைகள் இல்லையா?

விதி
இப்போதுதான் எனக்கு ஹாப்பியாக இருக்கிறது. நீங்கள் அதிகாரத்தில் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைத்தீர்களே.. இப்போது பேசுங்கள். உங்கள் பேச்சுக்களால் நான் மன ரீதியாக பாதிக்கப்பட்டேன். இப்போதுதான் எனக்கு சந்தோசமாக இருக்கிறது. நீங்கள் இனி அவைக்கு வரவே முடியாது. கடவுள் உங்களை அனுமதிக்கவே மாட்டார். பை பை பாபு.. என்று ரோஜா சந்திரபாபு நாயுடுவுக்கு கடுமையாக பதில் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications