அசிங்கம் அசிங்கம்.. "இது" காமமா? காதலா?.. யாரந்த பெண்? 2 பரிதாப ஆண்கள்.. அதுக்கு இப்படியா நடக்கணும்
ஹைதராபாத்: ஒரு சிறுமி, ஒரே நேரத்தில் 2 பேரை காதலித்துள்ளார்.. கடைசியில் வாழ்க்கையே சீரழிந்து சின்னாபின்னமாகிவிட்டது.. இந்த சம்பவம் நடந்து 2 நாட்களுக்கு மேலாகியும் ஆந்திராவில் இதன் பரபரப்பு இன்னமும் குறையவேயிலை.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் அந்த சிறுமி.. 12-ம் வகுப்பு படிக்கிறார்.. இவருக்கு 2 ஆண் நண்பர்கள் இருக்கிறார்கள்.. ஒருவர் பெயர் சாய்குமார் 23 வயதாகிறது.. இன்னொருவர் பெயர் சூரிய பிரகாஷ் 25 வயதாகிறது.

அதிக அன்பு: இவர்கள் இரண்டு பேரிரையுமே சிறுமி காதலித்து வந்துள்ளார்.. ஒருவருக்கு தெரியாமல், இன்னொருவரை காதலித்து வந்துள்ளார்... இதனால், அந்த 2 பேருமே, சிறுமி தன்னை மட்டுமே உயிருக்குடன் நேசிப்பதாக நினைத்துள்ளனர்.. சிறுமி மீதுள்ள காதலால், அளவுக்கு அதிகமான அன்பையும் கொட்டி பழகியும் வந்துள்ளனர்.
சாய்குமாரும், சூரிய பிரகாஷூம் நண்பர்கள் என்றாலும், சிறுமியை காதலிப்பதை ஒருவருக்கொருவர் சொல்லி கொள்ளவில்லை. இதுதான் சிறுமிக்கு ரொம்ப வசதியாகிவிட்டது.
இந்நிலையில். சில மாதங்களுக்கு முன்பு, அந்த மாணவி சாய்குமாரை ரகசியமாக கல்யாணம் செய்து கொண்டார்.. எதற்காக இப்படி திடுதிப்பென்று திருட்டு கல்யாணம் ஆனது என்று தெரியவில்லை. ஆனால், ஒரு ஆணுடன் திருமணமே ஆகிவிட்ட பிறகும்கூட, இன்னொரு காதலனான சூரிய பிரகாஷை காதலித்து வந்திருக்கிறார்.. தனக்கு திருமணமானதையும் மறைத்துவிட்டார்.

வீடியோக்கள்: இப்படிப்பட்ட சூழலில், சாய்குமாருக்கும், அந்த மாணவிக்கும் நடந்த கல்யாண வீடியோக்களும், போட்டோக்களும், திடீரென சோஷியல் மீடியாவில் வெளியாகிவிட்டன..
அதாவது, திருட்டு கல்யாணம் என்றால், கோயிலில் எங்காவது சென்று தாலி கட்டி கொள்வது வழக்கம். ஆனால், இவர்கள் 2 பேருமே ஹோட்டலில் ரூம் எடுத்து, அங்கே கல்யாணம் செய்துள்ளனர்.. ரூமிலேயே வைத்து தாலி கட்டியுள்ளார் சாய்குமார்..
தன்னுடைய காதலிக்கு நண்பன் சாய்குமார், தாலி கட்டும் வீடியோக்களை பார்த்து சூர்யாபிரகாஷ் பெருத்த அதிர்ச்சி அடைந்தார்.. இதனால், நேரடியாகவே அந்த சிறுமியிடம் இது பற்றி கேட்டார் சூர்யாபிரகாஷ்.. அப்பட்டமாக வீடியோ வந்துவிட்டதால், அந்த பெண்ணும் உண்மையை ஒப்புக்கொண்டார்.. இதனால் ஆத்திரம் அடைந்த சூர்யாபிரகாஷ, நேராக சாய்குமாரிடம் சென்றார்..

புட்டு புட்டு வைத்தார்: சிறுமி தன்னையும் காதலித்து நடித்தது பற்றி விலாவரியாக புட்டு புட்டு வைத்தார் சூர்யாபிரகாஷ்.. இதைக்கேட்டு, சாய்குமாருக்கு தலையே கிறுகிறுத்து போய்விட்டது. இப்போது இதற்கு ஒரு முடிவு எடுத்தாக வேண்டும் என்பதால், சூரிய பிரகாஷிடம் ஆலோசித்திருக்கிறார் சாய்குமார்.. பிறகு, 2 நண்பர்களும் சேர்ந்து, அந்த சிறுமியின் வீட்டுக்கு போனார்கள்.. அந்த பெண்ணின் வீட்டில், பெற்றோர்களும், குடும்ப உறுப்பினர்களும் இருந்தனர்..
எனினும், அனைவரது முன்னிலையிலும் சிறுமியிடம் இதுகுறித்து 2 காதலர்களும் கேள்வி எழுப்பினார்கள்.. இந்த முக்கோண காதல் விவகாரத்திற்கு, ஒரு முடிவை சொல்லுமாறும் கேட்டார்கள். இப்படி 2 பேருமே திடுதிப்பென்று வீட்டுக்குள் வந்து, கேள்வி எழுப்புவார்கள் என்று சிறுமி கொஞ்சமும் நினைக்கவில்லை. இதனால் அதிர்ச்சியும், அவமானமும் கலந்து கூனிக்குறுகி நின்றார்.
கலக்கம்: தினம் தினம் அவமானத்தில் புழுங்கி தவித்தார்.. 2 காதலின் குட்டு வெளிப்பட்டதுடன், வீடியோவும் கசிந்துவிட்டதே என்று மனம் கலங்கி போனார்.. கடைசியில் வீட்டில் யாருமில்லாத நேரத்தில், தூக்கு போட்டு தற்கொலையும் செய்து கொண்டார்.. இதையடுத்து, உயிரிழந்த பெண்ணின் தந்தை, போலீசுக்கு சென்று புகார் தந்தார்.. போலீசாரும் இதுகுறித்து விசாரணையை துவங்கினர்.
ஆனால், அதற்கு முன்பேயே சூரியபிரகாஷ் பயந்துவிட்டார்.. எங்கே தன்னை போலீஸார் கைது செய்து விடுவார்களோ? என்று நினைத்து, ஓடும் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்... இப்போது மிஞ்சியுள்ளது சாய்குமார் மட்டும்தான்.. மைனர் பெண்ணுக்கு தாலி கட்டிய சாய்குமார் மீது, வழக்கு பதிவு செய்த போலீஸார் கைது செய்து ஜெயிலில் தூக்கி வைத்துள்ளனர்.
விளையாட்டு வினை: இந்த பெண் விளையாட்டாக காதலித்தாரா? அல்லது வேண்டுமென்றே காதலித்தாரா? தெரியவில்லை.. 2 பேரை காதலிப்பதாக 12ம் வகுப்பு மாணவி நடித்து மோசடி செய்ததன் விளைவு, 2 உயிர்கள் பறிபோயிருக்கிறது. நிஜமாகவே காதலித்து, கல்யாணமும் செய்து, அந்த பெண்ணுடன் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்று கனவில் மிதந்த இன்னொரு நபரோ, கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.
"ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை" என்று நம்முடைய கவியரசர் கண்ணதாசன் அன்றே சொன்னது எத்துணை உண்மையான வரிகள்??!!!!












Click it and Unblock the Notifications