Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெட்ஷீட்டால் காதலியை போர்த்தி.. முந்திரி காட்டுக்கு பைக்கில் அழைத்து வந்து.. பெட்ரோல் தீர்ந்து.. ஓஹோ

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: காதலியின் உடம்பை பெட்ஷீட்டால் போர்த்தி பைக்கில் அழைத்து சென்றுள்ளார் இளைஞர்.. இதற்கு மற்றொரு நபரும் உதவியாக இருந்திருக்கிறார்.. மற்றொரு நபரும் பாதி வழியில் உதவியிருக்கிறார்.. இதையடுத்து போலீசாரின் விசாரணை தீவிரமானதையடுத்து, ஒருவர் மட்டுமே கைதாகி உள்ளார். மற்ற 2 பேரும் தலைமறைவாக உள்ளதால் அவர்களை வலைவீசி தேடிக் கொண்டிருக்கிறார்கள்.. ஆந்திர மாநிலத்தில் என்ன நடந்தது?

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ளது சலூரு மண்டலம் என்ற பகுதி.. இங்குள்ள வாணி வலசா என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஐஸ்வர்யா.. 20 வயதுள்ள இந்த பெண், அந்த பகுதியிலுள்ள ஒரு துணிக்கடையில் வேலை செய்து வந்தார்.

Andhra pradesh Bed sheet Bike

தத்தி வலசை என்ற கிராமத்தைச் சேர்ந்த ராம்பாபு என்பவர் இளம்பெண்ணை காதலித்தார்.. இவர் ஆக்சிஜன் சிலிண்டர் சப்ளை செய்யும் வாகனத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

பேச்சையெல்லாம் நம்பிய பெண்

ஆனால், ராம்பாபுவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது... ஆனால் தனக்கு திருமணமானதை மறைத்து ஐஸ்வர்யாவுடன் நெருங்கி பழகியிருக்கிறார்.. அவரையே திருமணமும் செய்து கொள்வதாக சத்தியம் செய்துள்ளார்..

இதை ஐஸ்வர்யாவும், முழுக்க முழுக்க நம்பியிருக்கிறார்.. இதற்கு பிறகு இருவரும் பல இடங்களில் சுற்றித்திரிந்து தனிமையில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர்.. ஒருகட்டத்தில், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி ஐஸ்வர்யா கூறியிருக்கிறார். ஆரம்பத்தில் மழுப்பலாக பேசி வந்த ராம்பாபு, ஐஸ்வர்யாவின் தொடர் வற்புறுத்தலால் எரிச்சலடைந்தார்..

முற்றிய வாக்குவாதம்

இந்நிலையில், கடந்த 27-ந் தேதி இருவரும் விசாகப்பட்டினம் சென்றிருக்கிறார்கள்.. அரிலோவா என்ற இடத்தில் தனிமையில் பேசியிருக்கிறார்கள்.. அப்போது தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி ஐஸ்வர்யா மீண்டும் சொன்னதால், ராம்பாவுக்கு ஆத்திரம் அதிகமாகிவிட்டது.. இதனால் இருவருக்கும் வாக்குவாதம் முற்றி, தகராறு வெடித்துள்ளது. அப்போது, ஆவேசமடைந்த ராம்பாபு ஐஸ்வர்யாவின் கழுத்தை கயிறால் இறுக்கினார். இதில் ஐஸ்வர்யா துடிதுடித்து இறந்துவிட்டார்..

இதனால், போலீசில் சிக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக, ஐஸ்வர்யா தற்கொலை செய்து கொண்டது போல நாடகம் ஆட ராம்பாபு முடிவு செய்தார். இதை தன்னுடைய நண்பரிடம் சொல்லி, உதவி கேட்டார்.. அந்த நண்பரும் சம்பவ இடத்துக்கு வந்தார்..

பெட்ஷீட்டால் போர்த்தினர்

பைக்கில் சடலத்தை கொண்டு செல்ல முடிவு செய்தனர். அதன்படி ஐஸ்வர்யாவின் உடலை பெட்ஷீட்டால் போர்த்திவிட்டனர்.. பிறகு பைக்கை ஸ்டார்ட் செய்து, நடுவில் சடலத்தை தூக்கி வைத்துக் கொண்டு இருவரும் கிளம்பினார்கள்..

ஹைவேஸில் சென்றால் போலீசில் சிக்கிக் கொள்வோம் என்பதால் கிராமப்பகுதி வழியாக, அதுவும் நள்ளிரவில் இளம்பெண் பிணத்துடன் சென்றனர்.. ஆனால், நடுவழியிலேயே பைக்கில் பெட்ரோல் தீர்ந்து நின்றுவிட்டது. இதனால், இன்னொரு நண்பரை, ஸ்பாட்டுக்கு வரவழைத்து, அந்த நண்பர் மூலம் பெட்ரோல் கொண்டு வந்து பைக்கில் நிரப்பினார்கள்..

முந்திரி தோட்டத்தில் இளம்பெண்

பிறகு 3 பேரும் சேர்ந்து இளம்பெண் உடலை 105 கிலோமீட்டர் கொண்டு சென்றனர். ஒரு முந்திரி தோட்டத்தில் ஐஸ்வர்யாவை தூக்கில் தொங்க விட்டு சென்று விட்டார்கள்.. மறுநாள் காலையில், முந்திரி தோட்டத்தில் சடலம் தூக்கில் தொங்குவதை கண்டு அந்தப் பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து, உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தியபோதுதான், ராம்பாபு ஐஸ்வர்யாவின் காதலர் என்பது தெரிய வந்தது. அவரை பிடித்து போலீசார், தங்கள் பாணியில் விசாரித்தபோதுதான், ஐஸ்வர்யாவை கொலை செய்து பைக்கில் கொண்டு வந்து தூக்கில் தொங்க விட்டதாக வாக்குமூலம் தந்தார்.. இப்போது ராம்பாபு கைதாகியிருக்கிறார்.

ஆனால் அவருக்கு பைக் தந்து உதவிய நண்பர், பெட்ரோல் தந்து உதவிய இன்னொரு நண்பர் என 2 பேருமே தலைமறைவாகி விட்டார்கள். அவர்களை தேடி கொண்டிருக்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+