உதட்டோடு உதடு "முத்தம்".. கோர பிடியில் வீழ்ந்த பிரவீன்.. வேலைக்காரருடன் சிக்கிய மனைவி.. ஐயோ பயங்கரம்
ஹைதராபாத்: ஆந்திராவில் நடந்த கொடூரத்தின் அதிர்ச்சி இன்னமும் நீங்கவில்லை.. வீட்டு வேலைக்காரருடன் கைதாகியிருக்கிறார் இளம்பெண் ஒருவர். என்ன நடந்தது?
ஆந்திர மாநிலம் பெத்தப்பள்ளி மாவட்டத்தை சேர்ந்தவர் கோச்சேரா பிரவீன்.. 42 வயதாகிறது.. ரியல் எஸ்டேட் அதிபரான இவர், காண்ட்ராக்டராகவும் உள்ளார்.. இவரது மனைவி பெயர் லலிதா.. 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

கடந்த 9ம் தேதி, பிரவீன் மது அருந்திவிட்டு தூங்க சென்றுள்ளார்.. மறுநாள் காலையில் எழுப்ப சென்றால், அவர் இறந்துகிடந்ததாகவும், மாரடைப்பால் உயிர் பிரிந்துவிட்டதாகவும் உறவினர்களுக்கெல்லாம் போனை போட்டு லலிதா கதறி அழுதார்.
மர்மங்கள்: இதைக்கேட்டதும் பிரவீனின் அம்மா உட்பட சொந்தக்காரர்கள் எல்லாருமே அதிர்ச்சியடைந்தார்கள்.. பதறியடித்து கொண்டுவந்து சடலத்தை பார்த்து கண்ணீர் விட்டு அழுதனர். ஆனால், தன்னுடைய மகன் மாரடைப்பில் இறக்கவில்லை என்றும், ஏதோ மர்மமாக உள்ளதால், உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் போலீசில் புகார் தந்தார்.
இதையடுத்து போலீசாரும், சந்தேக மரணம் என்ற வழக்கை பதிவு செய்து விசாரணையையும் துவங்கினார்கள்.. அப்போது, லலிதாவின் நடவடிக்கையில் நிறைய மாற்றங்கள் தென்பட்டதை பார்த்து சந்தேகப்பட்டனர். எனவே, அவரை கஸ்டடியில் எடுத்து விசாரணைக்கு உட்படுத்தினார்கள்.. ஆரம்பத்தில் உண்மையை சொல்ல மறுத்தவர், கிடுக்கிப்பிடி விசாரணையில் மொத்தத்தையும் வாக்குமூலமாக சொல்லிவிட்டார்.
வெளியூர் பயணம்: பிரவீன் பிசினஸ்மேனாக இருப்பதால், வேலை விஷயமாக அடிக்கடி வெளியூர் சென்றுவிடுவாராம்.. என்னதான் பணிநிமித்தம் என்றாலும், இத்தனை முறை வெளியூர்களுக்கு போவதா? என்று லலிதாவுக்கு சந்தேகம் வந்துள்ளது. அதனால், பிரவீனை ரகசியமாக கண்காணித்தபோது, இன்னொரு பெண்ணுடன் உறவில் இருப்பது தெரியவந்துள்ளது..
இதுகுறித்து நேரடியாகவே பிரவீனிடம் கேட்டு, தகராறு செய்துள்ளார் லலிதா.. எனினும், உச்சக்கட்ட ஆத்திரத்துக்கு போன லலிதா, பிரவீனை கொன்றுவிடுவது என்று முடிவு செய்தார்.
இதற்காக, தன்னுடைய வீட்டில் வேலை பார்த்துவரும் சுரேஷ் என்பவரின் உதவியையும் லலிதா நாடினார்.. தன்னுடைய கொலைக்கு உதவி செய்தால், பிளாட் வாங்கி லலிதா வாக்குறுதி தரவும், சுரேஷும் சம்மதம் சொன்னார்.. பின்னர், சுரேஷூம் லலிதாவும் சேர்ந்து, பிரவீனை கொல்வதற்காக பிளான் செய்தார்கள்.. அதன்படி, பாம்பை ஏவிவிட்டு கொல்லலாம் என்று முடிவெடுத்தனர்.. இதற்காக, தன்னுடைய 34 சவரன் நகைகளை, சுரேஷுக்கு தந்தார் லலிதா.
மலைப்பாம்பு: அதன்படி, கடந்த 9ம் தேதி இரவு, பிரவீன் குடிபோதையில் தூங்கிக்கொண்டிருந்தபோது, சுரேஷையும், அவரது கூட்டாளிகளையும் வீட்டுக்குள் வரவழைத்தார் லலிதா.. பிரவீன் தூங்கி கொண்டிருந்த ரூமில், அவர்களை அழைத்து சென்றுவிட்டுவிட்டு, இன்னொரு ரூமுக்கு போய்விட்டார் லலிதா. மலைப்பாம்புடன் ரூமில் நுழைந்த சுரேஷ், பிரவீனை தலைகாணியை வைத்து அழுத்தினர்... இதில், பிரவீன் மயங்கிவிட்டார்.. பிறகு, கையோடு எடுத்து சென்ற, பாம்பை எடுத்து, பிரவீனை கடிக்க வைத்தனர்..
பாம்பு விஷம், பிரவீன் உடம்பில் ஏறி, அவர் இறந்துவிட்டதை உறுதிசெய்தபிறகு, சுரேஷ் தரப்பினர் அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டனர். இரவு முழுவதும் இன்னொரு ரூமில் இருந்த லலிதா, மறுநாள் காலை கணவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக ஒப்பாரி வைத்து, அனைவரையும் நம்ப வைத்துள்ளார். இவ்வளவும் வாக்குமூலத்தில் தெரியவந்ததையடுத்து, லலிதா & சுரேஷ் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
முதன்முதலில், பிரவீன் மரணத்தில் சந்தேகம் வந்தது, அவரது அம்மாவுக்குதானாம்.. சடலத்தை பார்த்தபோது, பிரவீனின் உதட்டருகில் ரத்தக்கசிவு இருந்துள்ளது.. அதுமட்டுமல்ல, இறுதிச்சடங்கிற்கு தயாராகி கொண்டிருக்கும்போது, பிரவீன் உடல் ப்ளூ கலராக மாறிவிட்டதாம்.. இதற்கு பிறகுதான் போலீசுக்கு சென்றுள்ளார்.
கொலையாளிகள்: பிரவீனின் கழுத்தை நெறித்ததுமே, நாகப்பாம்பை அவரது உதட்டுக்கு அருகே கொண்டு சென்று கடிக்க வைத்துள்ளனர்.. அப்போதுதான், உடனே உயிர் போகும் என்பதால், உதட்டிலேயே கடிக்க வைத்துள்ளனர். அடுத்த செகண்டே நுரை தள்ளியுள்ளது.. பிறகு, பிரவீன் கழுத்தில் இருந்த தங்கசெயினையும் கொலையாளிகள் கழட்டி சென்றிருக்கிறார்கள்.
இப்படித்தான், வரதட்சணை கொடுமைக்காக, கேரளாவில் பாம்பை ஏவிவிட்டு, உத்ரா என்ற பெண்ணை, கொடூரமாக கொன்றார் அவரது கணவர்.. அந்த பெண்ணுக்கு வாய் பேச முடியாது.. 2 முறை தப்பித்துவிட்ட நிலையில், 3வது முறையும் பாம்பை ஏவி கொன்ற கணவனை பார்த்து இந்த நாடே அதிர்ந்தது. இப்போது, கணவன் மீது மனைவி பாம்பு ஏவி கொன்றுள்ளார்.
பொதுவாக, பாம்புகள் மனிதர்களை பழிவாங்கும் என்பார்கள்.. ஆனால், அடையாளம் வைத்துக்கொண்டு, பழி வாங்கும் அளவுக்கெல்லாம், பாம்புகளுக்கு மூளை இல்லை, பார்வை திறனும் குறைவு..
வாயில்லா ஜீவன்: உண்மையை சொல்லப்போனால், மனிதர்களை பார்த்ததுமே, தங்களுக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று பயந்து, அவைகள் வேகமாக ஓடி ஒளிந்துகொள்ளவே நினைக்கின்றன. எனவே, மனிதர்களை பழிவாங்குவதற்காக உயிர்களை கொல்வது, பாம்புகள் கிடையாது.. ஆறறிவு உள்ள இந்த மனிதப்பிறவியேதான்...!!












Click it and Unblock the Notifications