மறைந்த கணவருக்கு கோவில் கட்டி வழிபடும் பாசக்கார மனைவி.. ஆந்திராவில் நெகிழ்ச்சி
இறந்து போன கணவனுக்கு கோவில் கட்டி வழிபடுகிறார் மனைவி
ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தில் ஒரு பெண் தன் கணவருக்கு கோயில் கட்டி அவரது உருவச் சிலைக்கு பூஜை செய்து வழிபட்டு வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது..!
பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்தவர் பத்மாவதி.. இவர் மிகவும் பாரம்பரியமும், பழமையும் மிகுந்த குடும்பத்தை சேர்ந்தவர்... இவரது கணவர் பெயர் அங்கிரெட்டி.. இந்த தம்பதிக்கு சிவசங்கர் ரெட்டி என்ற ஒரு மகன் இருக்கிறார்..

4 வருடங்களுக்கு முன் நடந்த விபத்தில் சிக்கி அங்கிரெட்டி உயிரிழந்துவிட்டார்.. கணவர் உயிரிழந்த சோகம் தாங்க முடியாமல் பத்மாவதி கலங்கி வந்துள்ளார்.. எந்நேரமும் கணவனின் நினைவிலேயே இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், ஒருநாள் பத்மாவதியின் கனவில் வந்த அங்கிரெட்டி, தனக்கு ஒரு கோவிலை கட்டும்படி சொன்னாராம்.. அதனாலேயே இந்த கோவிலை கட்டியதாக பத்மாவதி சொல்கிறார்.. இந்த கோவிலில் கணவருக்கு பளிங்குனால் ஆன உருவ சிலையையும் நிறுவி உள்ளார்...
அந்த சிலையை வைத்து பூஜைகள் செய்து வழிபட்டும் வருகிறார். இந்தக் கோவிலை கட்டுவதற்கு பத்மாவதியின் மகன் மற்றும் அங்கிரெட்டியின் நண்பர் திருப்பதி ரெட்டி ஆகியோர் பண உதவி செய்ததாக கூறப்படுகிறது...
கணவரின் பிறந்த நாள், நினைவு நாள் மற்றும் பவுர்ணமி ஆகிய தினங்களில் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கி வருகிறார் பத்மாவதி... மறைந்த கணவரின் நினைவாக மனைவி ஒருவர் கோவில் கட்டி வழிபாடு நடத்தி வரும் சம்பவம் ஆந்திராவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications