சென்னை மழை போல தெலுங்கானா தேர்தலில் கரைபுரண்டோடிய 'சரக்கு வெள்ளம்'! 3மாநிலங்களில் இருந்து இறக்குமதி!
ஹைதராபாத்: தெலுங்கானா சட்டசபை தேர்தல் வாக்குப் பதிவு இன்று நடைபெற்று வருகிறது. தெலுங்கானா தேர்தல் சரித்திரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வரலாறு காணாத வகையில் மதுபான விநியோகம் கரைபுரண்டோடியதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
தெலுங்கானாவின் 119 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. தெலுங்கானாவில் ஆளும் பிஆர்எஸ் கட்சிக்கும் காங்கிரஸுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. 2009-ம் ஆண்டுக்குப் பிறகு தெலுங்கு பேசும் மாநிலம் ஒன்றில் ஆட்சியை எப்படியாவது கைப்பற்றிவிட முடியும் என்பது காங்கிரஸ் நம்பிக்கை. தெலுங்கானாவின் அசைக்க முடியாது என 3-வது முறையாக வெல்வோம் என காத்திருக்கிறது பிஆர்எஸ். தெலுங்கானாவில் இன்று பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

தெலுங்கானா தேர்தலில் பெருமளவு பணம், மதுபானம் விநியோகம் வெள்ளம் போல கரைபுரண்டோடியது. அதுவும் இந்த முறை ஆந்திரா, ஒடிஷா, சத்தீஸ்கர் என 3 மாநிலங்களில் இருந்தும் மதுபானங்கள் பெருமளவு எல்லை கிராமங்கள் குவிக்கப்பட்டு அங்கிருந்து அனைத்து தொகுதிகளுக்கும் சப்ளை செய்யப்பட்டதாம்.
ஆந்திராவை ஒப்பிடுகையில் தெலுங்கானாவில் மதுபான விலை குறைவாகத்தான் இருந்தது. ஆனால் தேர்தல் நேரத்தில் தெலுங்கானாவில் மதுபான விலை கிடுகிடுவென உயர்த்தப்பட்டது. இதனால் 'ஆந்திரா' சரக்குகள் எல்லை கிராமங்களில் குவிக்கப்பட்டு அங்கிருந்து தொகுதிகளுக்குள் சப்ளை செய்யப்பட்டதாம். செக்போஸ்ட் இல்லாத புதிய புதிய வழிகளை இதற்காக அரசியல் கட்சிகள் ' உருவாக்கி' மதுபானங்களை பிரதான பரிசுபொருளாக தேர்தல் களத்தில் இறக்கிவிட்டனவாம்.

ஒடிஷா, சத்தீஸ்கர் மாநில பழங்குடி மக்களின் உள்ளூர் சரக்குகளும் கள்ள சாராயமும் தெலுங்கானாவில் போட்டி போட்டு களமிறக்கப்பட்டிருக்கிறதாம். தெலுங்கானா தேர்தலில் பகிரங்கமாகவே வாக்காளர்களுக்கு மதுவிநியோகம், இறைச்சி விநியோகம் கொடி கட்டிப் பறக்கிறது என்கின்றன ஊடக செய்திகள்.
-
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை












Click it and Unblock the Notifications