Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆஸ்திரேலியா துப்பாக்கி சூடு.. 15 பேர் உயிரை பறித்த நபர் ஹைதராபாத்தை சேர்ந்தவர்! வெளியான புது தகவல்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஆஸ்திரேலியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மிக மோசமான ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது. யூத பண்டிகைக்காகத் திரண்டிருந்த மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். இதற்கிடையே இந்தக் கொடூரத்தை அரங்கேறிய இரு பயங்கரவாதிகளில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்பது இப்போது தெரிய வந்துள்ளது. இந்தியாவைச் சேர்ந்த அந்த நபர், தனது மகனுடன் சேர்ந்த இந்த மோசமான தாக்குதலை நடத்தியுள்ளான்.

கடந்த ஞாயிறு அன்று ஆஸ்திரேலியாவில் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடந்தது. அன்றைய தினம் யூத பண்டிகைக்காக சிட்னியில் உள்ள பாண்டி கடற்கரையில் யூதர்கள் கூடியிருந்தனர். அப்போது அங்கு வந்த இருவர் திடீரெனத் தங்கள் துப்பாக்கியால் மக்களை நோக்கிச் சுட ஆரம்பித்தனர். இதில் 15 பேர் உயிரிழந்தனர். கடந்த 30 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் நடந்த மிக மோசமான பயங்கரவாதத் தாக்குதலாக இது கருதப்படுகிறது..

Australia world India

இந்தியாவைச் சேர்ந்தவர்

இதற்கிடையே இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்ட சஜித் அக்ரம் இந்தியாவைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. அவர் முதலில் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் எனத் தகவல் பரவிய நிலையில், அவர் இந்தியாவில் வசித்தவர் என்பது இப்போது தெரிய வந்துள்ளது.

சஜித் அக்ரம், தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தைச் சேர்ந்தவராம். இந்தத் தகவலை தெலுங்கானா போலீசார் உறுதி செய்துள்ளனர். 1998ல் இவர் ஆஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்துள்ளார். அதன் பிறகு 27 ஆண்டுகளில் ஆறு முறை மட்டுமே இந்தியாவுக்கு வந்துள்ளார். 1998 வரை அவர் இந்தியாவில் வசித்த நிலையில், அப்போது வரை அவர் மீது எந்தவொரு குற்ற வழக்குகளும் என்பதையும் ஹைதராபாத் போலீசார் உறுதி செய்துள்ளனர்.

என்ன நடந்தது

சஜித் தனது மகன் நவீத் அக்ரமுடன் சேர்ந்து, ஹனுக்கா பண்டிகை கொண்டாடிய யூதர்களைக் குறிவைத்து ஆஸ்திரேலியாவில் தாக்குதல் நடத்தினர். இந்தக் கொடூரத்தில் 15 பேர் கொல்லப்பட்டனர். சஜித் இந்திய பாஸ்போர்ட் வைத்துள்ளார். அதேநேரம் அவரது மகன் ஆஸ்திரேலியாவில் பிறந்தவர் என்பதால் அவருக்கு ஆஸ்திரேலியக் குடியுரிமை இருந்துள்ளது. இச்சம்பவத்தில் போலீஸ் கொடுத்த பதிலடியில் சஜித் உயிரிழந்தார்.. நவீத் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சஜித் பல ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் இருந்து சென்றுவிட்ட நிலையில், அவர் தீவிரவாதத்தை நோக்கிச் சென்றதற்கும் இந்தியாவுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என ஹைதராபாத் போலீசார் கூறியுள்ளனர்.

தொடர்பு இல்லை

சஜித் அக்ரம் கிறிஸ்துவப் பெண்ணை மணந்ததால் அவரது குடும்பத்தினர் யாரும் அவருடன் பேசுவதில்லையாம். பல ஆண்டுகளாகவே குடும்பத்தினர் அவரது குடும்பத்தினர் அல்லது உறவினர்கள் யாரும் சஜித் அக்ரம் உடன் தொடர்பில் இல்லையாம். ஐரோப்பியக் கிறிஸ்தவப் பெண் வெனெரா க்ரோசோவை மணந்த இவருக்கு நவீத் தவிர ஒரு மகளும் உண்டு என சொல்லப்படுகிறது. இதில் சஜித் அக்ரம் இந்திய பாஸ்போர்ட் வைத்துள்ளார். அதேநேரம் ஆஸ்திரேலியாவில் பிறந்த அவரது இரு குழந்தைகளும் ஆஸ்திரேலியக் குடிமக்கள் ஆவர்.

சகோதரர் பகீர்

ஐதராபாத்தில் வசிக்கும் சஜித் சகோதரர் நியூஸ் மினிட் தளத்திற்கு இது குறித்துக் கூறுகையில், "25 ஆண்டுகளுக்கு முன் சஜித் படிப்பதற்காக ஆஸ்திரேலியா சென்றார். அப்போது கிறிஸ்தவப் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதனால் குடும்பத்தினர் யாரும் அவருடன் பேசுவதில்லை. ஒல்ட் ஹைதராபாத்தில் தான் எங்கள் குடும்பத்தினர் வசிக்கிறோம். ஆனால், அவர் எங்களுடன் பேசவில்லை. 2009ல் தந்தை இறந்தபோதும் சஜித் இந்தியாவுக்கு வரவில்லை. 80 வயதான தாய்க்கு உடல்நிலை சரியில்லை. அது குறித்து விசாரித்தது கூட இல்லை" என்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+