ஸ்வீட் வாங்க போன மாப்பிள்ளை.. முதலிரவில் புதுப்பெண் செய்த காரியம்.. கல்யாணே வீடே நடுங்கிப்போச்சு
ஹைதராபாத்: உற்சாகம் களை கட்டியிருந்த திருமண வீட்டில் மணப்பெண் செய்த திடீர் காரியம் திருமணை வீட்டை மட்டுமின்றி ஆந்திராவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பெற்றோர்கள், உற்றார் உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் இனிதே திருமணம் நடந்து முடிந்த நிலையில், மணப்பெண்ணின் அந்த ஒரு முடிவு திருமண வீட்டை மீளா துயரில் ஆழ்த்திவிட்டது.
திருமண வீட்டில் உற்றார், உறவினர்கள் எல்லாரும் வருகை தந்து மணமக்களை மனதார வாழ்த்திவிட்டுச் சென்ற சில மணி நேரங்களில், திருமண வீடு துக்க வீடாக மாறிய துயர சம்பவம் ஆந்திராவில் நடைபெற்றுள்ளது. முதலிரவுக்கு ஏற்பாடு செய்த நேரத்தில் புதுப்பெண் எடுத்த முடிவால் மொத்த திருமண வீடே மீளாத துயரில் உறைந்துவிட்டது. அப்படி என்னதான் நடந்தது? என்பது குறித்த விவரம் வருமாறு:-

சிறப்பாக நடந்து முடிந்த திருமணம்
ஆந்திர மாநிலம் ஸ்ரீசத்யசாயி மாவட்டத்தில் உள்ள சோமந்தூர்பள்ளி என்ற இடத்தைச் சேர்ந்தவர் ஹர்ஷிதா (வயது 22). இவருக்கும், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நாகேந்திரா என்பவருக்கும் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு நடைபெற்றது. திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்று வந்தது. திருமண வீட்டிற்கே உள்ள உற்சாகத்துடன் காலையில் அனைத்து சடங்கு சம்பிரதாயங்களுடன் இனிதே திருமணம் நடைபெற்றது.
திருமண வீட்டிற்கு வந்த உறவினர்களும் மணமக்களை வாழ்த்திவிட்டுச் சென்றனர். வந்திருந்த உற்றார், உறவினர்களுக்கு உணவு விருந்தும் வழக்கம் போல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஊரே வாய்பிளக்கும் வகையில் சிறப்பான ஏற்பாடுகளுடன் திருமணம் முடிந்த நிலையில், இல்லற வாழ்வை ஆரம்பிக்க புதுமணத் தம்பதிகள் தயாராகினர். சோமந்தூர்பள்ளியில் உள்ள மணமகள் வீட்டில் வைத்து முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது.
ஸ்வீட் வாங்க போன மாப்பிள்ளை
இதற்கான ஏற்பாடுகளை உறவினர்கள் செய்திருந்த நிலையில், கல்யாண மாப்பிள்ளை நாகேந்திரா ஸ்வீட் வாங்குவதற்காக வெளியே கடைக்குச் சென்றார். சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த கல்யாண மாப்பிள்ளை தனது மனைவியைத் தேடினார். இதற்கிடையே, வீட்டில் உள்ள அறையில் ஹர்ஷிதா இருப்பதை அறிந்து கொண்ட உறவினர்கள் கதவைத் தட்டினர். ஆனால், நீண்ட நேரம் ஆகியும் ஹர்ஷிதாவிடமிருந்து பதில் வரவில்லை.
இதனால், பதறிப்போன உறவினர்கள் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர். அப்போது, அறையில் இருந்த மின் விசிறியில் கயிற்றைக் கட்டி ஹர்ஷிதா தூக்கில் தொங்குவதைக் கண்டனர். உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஹர்ஷிதாவின் உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
தாலிக் கயிற்றின் மஞ்சள் ஈரம் கூட காயவில்லை
இந்தக் காட்சிகள் அங்கிருந்தவர்களின் கண்களையும் குளமாக்கின. திருமணம் முடிந்து தாலிக் கயிற்றின் மஞ்சள் ஈரம் கூட காயாத நிலையில், புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாகப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஹர்ஷிதாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் பிறகே ஹர்ஷிதா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர். ஹர்ஷிதாவின் பெற்றோர் மற்றும் மணமகன் நாகேந்திரா குடும்பத்தினரிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications