தெலுங்கானாவில் பரபரப்பு.. தேர்தல் பிரச்சாரத்திற்கு நடுவே.. மயங்கி விழுந்த கேசிஆர் மகள் கே கவிதா
ஹைதராபாத்: தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கே கவிதா திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானாவில் இப்போது கே சந்திரசேகர ராவ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.. அங்கே இன்னும் சில வாரங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இப்போது அங்கே பிஆர்எஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. தேர்தல் நெருங்க நெருங்க பிஆர்எஸ் கட்சி தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகிறது.
தெலுங்கானா தேர்தல்: அதன்படி தெலுங்கானா மாநிலம் இட்டிக்யாலில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கே கவிதா தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக அவர் மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கே கவிதா அங்கே திறந்த வாகனத்தில் நின்று பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். மைக்கில் பேசிக் கொண்டிருந்த அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக கவிதா திரும்பி கீழே விழு போனார். அங்கே இருந்தவர்கள் அவரை தாங்கி பிடித்தனர். இதனால் பதறிய பிஆர்எஸ் நிர்வாகிகள் அவரை சூழ்ந்து கொண்டனர்.
நீர்ச்சத்து குறைபாடு: இது தொடர்பாக கவிதா தரப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாகச் சற்று உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகவும், சிறிது நேரம் பிரேக் எடுத்துக் கொண்டு கவிதா, மீண்டும் வழக்கம் போல் பிரச்சாரத்தைத் தொடங்கியதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தைப் பொறுத்தவரை அங்கே ஒரே கட்டமாக வரும் நவம்பர் 30ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தொடர்ந்து வரும் டிச. 3ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
தெலுங்கானாவைப் பொறுத்தவரை இப்போது அங்கே பிஆர்எஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறது. அங்கே இதற்கு முன்பு 2018இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில், கேசிஆர் கட்சி 47.4 சதவீத வாக்குகளைப் பெற்று, அங்குள்ள 119 இடங்களில் 88 இடங்களைக் கைப்பற்றியது. தொடர்ந்து காங்கிரஸ் கட்சி 28% வாக்குகளை மட்டுமே பெற்று 19 இடங்களில் மட்டுமே வென்றது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications