தேர்தலின் போது அரசு வாகனங்களில் பணம்! செல்போன் ஒட்டுகேட்பு வழக்கில் கைதான காவல் அதிகாரி திடுக் தகவல்
ஐதராபாத்: தெலுங்கானாவில் தொலைபேசி ஒட்டுகேட்பு விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஒட்டுகேட்பு வழக்கில் கைதான சீனியர் காவல்துறை அதிகாரி ராதாகிருஷ்ண ராவ், வெளியிட்ட தகவல் தற்போது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக ரேவந்த் ரெட்டி உள்ளார். தெலுங்கானா மாநிலம் உருவானது முதல் அங்கு ஆட்சியில் இருந்த அதாவது, 10 வருடங்களாக ஆட்சியில் இருந்த சந்திரசேகர் ராவ் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது தோல்வியை தழுவினார்.

தெலுங்கானாவில் சந்திர சேகர் ராவ் ஆட்சியின் போது, காவல்துறையினர் பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோரின் தொலைபேசி அழைப்புகளை ஒட்டுக்கேட்கப்பட்டதாக குற்றசாட்டு எழுந்தது. இந்த ஒட்டுக் கேட்பில் கிடைக்கும் தகவல் மூலம் ஆளும் பாரதிய ராஷ்டிர சமிதி கட்சிக்கு நிதி வழங்க தொழிலதிபர்கள் அச்சுறுத்தப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில், எதிர்கட்சித் தலைவர்களின் தொலைபேசி அழைப்புகளை ஒட்டுக்கேட்டதாக குற்றம் சாட்டப்பட்டு, சஸ்பெண்ட் செய்யப்பட்ட முன்னாள் காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ண ராவை போலீசார் அண்மையில் கைது செய்யப்பட்டார். பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலையத்தில், ராதாகிருஷ்ண ராவிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில், தொலைபேசி வாயிலாக ஒட்டுக்கேட்டது மற்றும் ஆதாரங்களை அழித்ததை ஒப்புக்கொண்டார்.

நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் இந்த ஒட்டுக் கேட்பு விவகாரம் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, கடந்த 2018 மற்றும் 2023 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது, அரசு வாகனங்களில் பணம் எடுத்து செல்லப்பட்டதாக அதிரச்சிகர தகவலை வெளியிட்டுள்ளார். ராதாகிருஷ்ண ராவிடம் நடைபெற்ற விசாரணை தொடர்பாக போலீசார் தாக்கல் செய்த ரிமாண்ட் ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளது.
அதாவது, பிரனீத் ராவ், புஜங்க ராவ், திருபதன்னா மற்றும் வேணுகோபால் ராவ் ஆகிய அதிகாரிகள் அப்போதைய உளவுத்துறை தலைமை அதிகாரி பிரபாகர் ராவ்வுடன் இணைந்து, இந்த சதிசெயலில் ஈடுபட்டதாகவும் பாரதிய ராஷ்டிர சமிதி ஆட்சி நீடிப்பதற்காக இந்த வேலையை செய்ததாகவும் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications