ஒருவழியா நல்ல செய்தி.. சந்திரபாபு நாயுடுவுக்கு 4 வாரங்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி ஐகோர்ட் உத்தரவு!
ஹைதராபாத்: ஊழல் வழக்கில் சிக்கி தற்போது சிறையில் உள்ள ஆந்திர பிரதேச முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஆந்திர முதல்வராக இருந்தபோது, திறன் மேம்பாட்டு நிதியில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதில், தனியார் நிறுவனங்களை அனுமதிப்பதற்காக ரூ.371 கோடி ரூபாய் சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டதாக 2021ல் ஊழல் தடுப்பு வாரியம் சார்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக சந்திரபாபு நாயுடுவை ஆந்திர மாநில சிஐடி போலீசார் கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி கைது செய்தனர். இதையடுத்து, நீதிமன்ற காவலில் அவர் ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர் அவரை விசாரணை செய்ய போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதனையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் 23, 24-ஆம் தேதிகளில் அவரிடம் சிஐடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டனர். சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்ற காவல் இரு முறை நீட்டிக்கப்பட்டது. இதனையடுத்து ஜாமீன் மனு தொடர்பான விசாரணையின்போது சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்ற காவலை அக்டோபர் 19ஆம் தேதி வரை நீட்டித்து விஜயவாடா நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே, சந்திரபாபு நாயுடு மீது அமராவதி உள்வட்ட சாலை வழக்கு, ஃபைபர் நெட் வழக்கு, அங்கள்ளு பகுதியில் போலீஸ் விதிகளை மீறி பொதுக்கூட்டம் நடத்திய வழக்கு என மேலும் 3 வழக்குகளை ஆந்திர அரசு பதிவு செய்தது. இந்த 3 வழக்குகளில் முன் ஜாமீன் கோரி சந்திரபாபு தாக்கல் செய்த மனுவை விசாரித்த ஆந்திர மாநில உயர் நீதிமன்றம், அங்கள்ளு போலீஸ் வழக்கு, அமராவதி உள்வட்ட சாலை வழக்கு ஆகியவற்றில் சந்திரபாபு நாயுடுவுக்கு முன் ஜாமீன் வழங்கியது.
இந்த நிலையில், திறன் மேம்பாட்டு நிதியில் முறைகேடு நடந்த வழக்கில் சந்திரபாபு நாயுடுவுக்கு நான்கு வாரங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி ஆந்திரா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு மருத்துவக் காரணங்களால் அவருக்கு நிபந்தனைகளுடன் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக, திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் தன் மீதான எஃப்ஐஆரை ரத்து செய்ய மறுத்த ஆந்திர உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சந்திரபாபு நாயுடு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதேபோல், ஃபைபர்நெட் முறைகேடு வழக்கில் அவருக்கு முன் ஜாமீன் மறுத்த ஆந்திர உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மற்றொரு மேல்முறையீட்டு மனுவையும் உச்ச நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications