சிங்கமாவது புலியாவது.. ஜெகன் பாஜகவின் பூனை.. அண்ணன் என்றும் பாராமல் வெளுத்து வாங்கும் YS ஷர்மிளா!
ஹைதராபாத்: அண்மையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து ஆந்திர மாநில காங். தலைவரான ஒய்.எஸ். ஷர்மிளா, தனது அண்ணன் ஜெகன் மோகன் ரெட்டியை வெளுத்து வாங்கி வருகிறார்.
லோக்சபா தேர்தலையொட்டி, நாடு முழுவதும் அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கிறது. ஆந்திராவிலும் தேர்தல் களம் பரபரக்கிறது. அங்கு நாடாளுமன்றத் தேர்தலோடு, சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ளது. தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு டெல்லியில் கடந்த வியாழக்கிழமை அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். இந்த நிலையில், அடுத்தநாளே ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

கடந்த முறை, நாடாளுமன்றத் தேர்தலில், ஆந்திராவில் பாஜக தனித்து தேர்தலைச் சந்தித்தது. ஓர் இடத்தில் கூட அக்கட்சி வெற்றி பெறவில்லை. இந்நிலையில், ஆந்திராவில் ஆளுங்கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மற்றும் பிரதான எதிர்க்கட்சியான் தெலுங்கு தேசம் ஆகிய இரண்டும் பாஜகவுடன் கூட்டணி வைக்க தீவிரம் காட்டி வருகின்றன.
அண்மையில், ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கையும், ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியின் தலைவருமான ஒய்.எஸ்.ஷர்மிளா, காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவரை, ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராக நியமித்தது காங்கிரஸ் தலைமை. தொடர்ந்து, மாநிலம் முழுவதும் பயணித்து, பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார் ஷர்மிளா.
காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டங்களில் பங்கேற்று, பாஜகவையும், மாநிலத்தில் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியையும் சரமாரியாக தாக்கிப் பேசி வருகிறார் ஷர்மிளா. குறிப்பாக, தனது அண்ணனும், ஆந்திர மாநில முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டியை வெளுத்து வாங்கி வருகிறார் ஷர்மிளா.
நேற்று அல்லூரி சீதா ராம ராஜு மாவட்டம், பாடேரு தொகுதி சிந்தபல்லியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ஷர்மிளா, "முதல்வர் ஜெகன், பாஜகவின் அடிமையாகவே மாறிவிட்டார். சிங்கம், புலி என தன்னைப் பற்றிக் கூறிக் கொள்ளும் அவர், உண்மையிலே பாஜக முன் ஒரு பூனை போல் ஆகிவிட்டார். கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு, ஆந்திராவுக்கு கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சி, பாஜக இடையே முக்கோண காதல் கதை உருவாகியுள்ளது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி ஆகிய இரண்டுமே பாஜகவின் கைப்பாவைகளாக மாறிவிட்டன. டெல்லிக்கு சந்திரபாபு சென்றார். அவரை தொடர்ந்து ஜெகன்மோகன் செல்கிறார். பாஜக இங்கு ஒரு சீட்டில் கூட வெல்லவில்லை என்றாலும் ஆள்வது பாஜக தான்.
ஒய்.எஸ்.ஆர்.சி.பி.யும், தெலுங்கு தேசம் கட்சியும் பாஜகவைக் கேள்வி கேட்கும் நிலையில் இல்லை. மாநிலத்திலும், மத்தியிலும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்தான் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து, போலாவரம் அணை கட்டும் பணிகள், ஆந்திர மாநிலத்தின் தலைநகர் பிரச்சனை போன்றவை நிரந்தரமாக தீர்க்கப்படும்.
தேர்தலின் போது கொடுக்கப்படும் பணம் மணல் கொள்ளை, மதுபான மாஃபியா, பாக்ஸைட் போன்றவற்றால் சட்டவிரோதமாக சம்பாதித்தது. நன்றாக யோசித்து வாக்களியுங்கள். அல்லூரி சீதாராம ராஜு எனும் சுதந்திர போராட்ட வீரர், ஆங்கிலேயர்களை எப்படி விரட்டி அடித்தாரோ, அதுபோல், இந்த சர்வாதிகார ஆட்சியையும் ஓட ஓட விரட்டி அடியுங்கள்" எனப் பேசியுள்ளார் ஷர்மிளா.
மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகளும், ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கையுமான ஷர்மிளாவின் குற்றச்சாட்டுகளை ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் எதிர்கொள்ள முடியாமலும், ஷர்மிளாவை விமர்சிக்க முடியாமலும் திணறி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications