Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"அலறவிட்ட காங்கிரஸ்.. அதிர்ந்த போலீஸ்.." ஹைதராபாத்தில் நீட் தேர்வுக்கு எதிராக மிக பெரிய போராட்டம்!

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: இந்தாண்டு நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகத் தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டு இருக்கின்றனர். நீட் தேர்வில் நடந்துள்ள முறைகேடுகள் காரணமாக அதை ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையே நீட் தேர்வுக்கு எதிராக இன்று ஹைதராபாத்தில் காங்கிரஸ் மிகப் பெரிய போராட்டத்தை நடத்தியது.

நமது நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மூலமாகவே நடந்து வருகிறது.. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் நீட் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

NEET Congress Hyderabad

இருந்த போதிலும் நீட் மூலமாகவே மருத்துவ படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை தொடர்ந்து நடந்து வருகிறது. இத்தனை ஆண்டுகளில் நீட் தேர்வில் பெரிய பிரச்சினை எதுவும் ஏற்படவில்லை.

நீட்: ஆனால், இந்தாண்டு நீட் தேர்வு முழுக்க பிரச்சினை தான். முதலில் நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 14ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று கூறியிருந்தார்கள். இருப்பினும், திடீரென முன்கூட்டியே லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியான ஜூன் 4ஆம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியானது. இதுவே முதல் சர்ச்சை..

அடுத்து இதுவரை இல்லாத அளவுக்கு அதிகப்படியான மாணவர்கள் நீட் தேர்வில் முழு மார்க் பெற்றிருந்தனர். கடந்தாண்டுகளில் 10க்கும் குறைவானவர்கள் மட்டுமே நீட் தேர்வில் முழு மதிப்பெண்களைப் பெற்று இருந்தனர். அதேநேரம் இந்தாண்டு 67 மாணவர்கள் 720க்கு 720 என்று முழு மார்க் பெற்றனர். ஒரே ஆண்டில் இத்தனை பேர் முழு மார்க் பெற்றது விவாதத்தைக் கிளப்பியது.

கருணை மதிப்பெண்: அடுத்தாக நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது அடுத்த சர்ச்சையானது. அதாவது இந்தாண்டு ஒரு கேள்விக்கு இரண்டு சரியான விடை இருந்ததாகக் கூறப்பட்டது. இதனால் 2 பதில் அளித்தவர்களுக்கும் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. இப்படி மொத்தம் சுமார் 1500 பேருக்குக் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. இது பெரிய சர்ச்சையான நிலையில், கருணை மதிப்பெண்களை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது. அவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்பட்ட நிலையில், அதில் பல மாணவர்கள் ஆப்சென்ட் ஆனார்கள்.

இவை எல்லாம் ஒரு பக்கம் இருக்க நீட் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்தது பெரிய பிரச்சினையாக மாறியது. அதாவது பீகார் மாநிலத்தில் சிலருக்கு நீட் வினாத்தாள் முன்கூட்டியே கிடைத்தாக கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. முதற்கட்ட விசாரணையில் சிலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகிறது.

கைது: நீட் வினாத்தாளை முன்கூட்டியே வாங்கியதாக இதுவரை 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேநேரம் குறைந்தது 30 மாணவர்கள் இதுபோல நீட் வினாத்தாளை முன்கூட்டியே வாங்கி இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. அவர்களைக் கண்டறியும் முயற்சியிலும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இப்படி இந்தாண்டு நீட் தேர்வில் ஏகப்பட்ட சர்ச்சைகள் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் இதைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது. நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுக்க மாணவர்களின் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்லி ஜந்தர் மந்தரில் பெற்றோர்கள் மாணவர்களுடன் இணைந்து போராட்டம் நடத்தினர். இதுபோல தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன.

போராட்டம்: அதேபோல தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு மாணவர் காங்கிரஸ் போராட்டம் நடத்தினர். மேலும், மகிளா காங்கிரஸ் சார்பிலும் ஹைதராபாத்தில் மிகப் பெரியளவில் போராட்டங்கள் நடந்துள்ளனர். நீட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதால் அதை ரத்து செய்ய வேண்டும் என்றும் இதன் பின்னணியில் இருப்போரைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+