Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தெலுங்கானா தேர்தல்! கச்சிதமாகக் காய் நகர்த்தும் காங்கிரஸ்! கிரிக்கெட் பிரபலத்தை வைத்து மெகா பிளான்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடக்க உள்ள நிலையில், அதற்குக் காங்கிரஸ் இப்போது முதலே வலுவான வியூகங்களைத் தயாரிக்கத் தொடங்கிவிட்டது.

தெலுங்கானா மாநிலத்தைப் பொறுத்தவரை அங்கு இப்போது கேசிஆர் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கானாவைத் தனியாகப் பிரிக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்தவர் கேசிஆர்.

 Congress to make Mohammad Azharuddin to contest in Telangana polls

தெலுங்கானா தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்டது முதலே கேசிஆர் தான் ஆட்சியில் இருக்கிறார். கடந்த 2018இல் அங்கு நடந்த தேர்தலில் கேசிஆர் கட்சி மொத்தமுள்ள 119 இடங்களில் 88ஐ அப்படியே கைப்பற்றியது.

தெலுங்கானா: அந்த தேர்தலில் இரண்டாம் இடம் பிடித்த காங்கிரஸ் கட்சியால் வெறும் 19 இடங்கள் மட்டுமே வெல்ல முடிந்தது. இருப்பினும், இப்போது அங்குள்ள கேசிஆர் அரசின் மீது பொதுமக்கள் அதிருப்தி அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த சூழலைப் பயன்படுத்தி அங்கே கம்பேக் கொடுக்கும் முயற்சியில் காங்கிரஸ் இறங்கியுள்ளது. சில வாரங்களுக்கு முன்புதான் ராகுல் காந்தி அங்கு நேரடியாக மெகா பேரணியிலும் கலந்து கொண்டார்.

மேலும், கேசிஆர் கட்சியில் இருந்தும் பல டாப் தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமாகி வருகின்றனர். இதனால் காங்கிரஸ் இந்தாண்டு இறுதியில் நடக்கும் தெலுங்கானா தேர்தலை மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. இதனிடையே தெலுங்கானா மாநில காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவரும், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருமான முகமது அசாருதீன் இந்தத் தேர்தலில் களமிறங்க உள்ளார்.

 Congress to make Mohammad Azharuddin to contest in Telangana polls

காங்கிரஸ் பிளான்: காங்கிரஸ் கட்சி கடந்த மாதம் தான் தெலுங்கானாவில் 29 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலத் தேர்தல் குழுவை அமைத்தது.. அதன் தலைவராக மாநிலக் கட்சித் தலைவர் ரேவந்த் ரெட்டி நியமிக்கப்பட்டார். இந்த ஆண்டு இறுதியில் தெலுங்கானாவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு இப்போதே காங்கிரஸ் பணிகளை ஆரம்பித்துவிட்டது. இந்தச் சூழலில் தான் முகமது அசாருதீன் இந்தக் கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "தெலுங்கானாவில் இப்போது காங்கிரஸ் நல்ல நிலையில் இருக்கிறது.. மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான ஒரே போக்கைப் பார்க்க முடிகிறது. இந்த தேர்தலில் நாங்கள் கடுமையாக இறங்கி வேலை செய்ய வேண்டும்.. அப்படி வேலை செய்தால் இந்தாண்டு நடக்கும் தேர்தலில் நிச்சயம் விரும்பிய முடிவு நமக்குக் கிடைக்கும்.

போட்டி எங்கே: எத்தனை இடங்களில் வெல்ல வேண்டும் என்று இப்போது நாங்கள் எந்தவொரு இலக்கையும் நிர்ணயம் செய்யவில்லை.. தேர்தலுக்கு முன்பு இங்கு யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்... ஆனால், நாங்கள் இதுவரை எந்தவொரு இலக்கை நிர்ணயிக்கவில்லை.தேர்தலுக்குப் பிறகுதான் எத்தனை தொகுதிகள் என்பது தெரியும். நான் ஹைதராபாத்தில் போட்டியிடுவேன்" என்று அவர் தெரிவித்தார்.

 Congress to make Mohammad Azharuddin to contest in Telangana polls

ஹைதராபாத்தைச் சேர்ந்த அசாருதீன், கடந்த 2009ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலுக்குக் கொஞ்சக் காலத்திற்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதன் பிறகு 2009 மக்களவைத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் மொராதாபாத்தில் இருந்து வெற்றி பெற்றார்.

அவர் 2014 மக்களவைத் தேர்தலில் ராஜஸ்தானில் உள்ள சவாய் மாதோபூரில் போட்டியிட்டார். இருப்பினும், இந்த முறை அவரால் வெல்ல முடியவில்லை.. 2019 தேர்தலில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படாத நிலையில், 2018 இல் தெலுங்கானா காங்கிரஸின் செயல் தலைவராக அவர் நியமிக்கப்பட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+