மொத்தமாக தெலுங்கானாவை தட்டி தூக்கும் காங்கிரஸ்.. லேட்டஸ்ட் கருத்துக்கணிப்பில் பரபர! BRS நிலைமை அடடா!
ஹைதராபாத்: சமீபத்திய கருத்துக் கணிப்பின்படி, தெலுங்கானாவில் மொத்தமுள்ள 119 இடங்களில் காங்கிரஸ் கட்சி 69 முதல் 72 இடங்களில் வெற்றி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் வரும் நவம்பர் 30ஆம் தேதி அன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. டிசம்பர் 3ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும். சந்திரசேகர் ராவ் தலைமையிலான பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சி ஆட்சி அங்கு நடைபெற்று வருகிறது. பிஆர்எஸ், காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் இடையே தெலுங்கானாவில் மும்முனை போட்டி நிலவி வருகிறது.

பிஆர்எஸ், தெலுங்கானாவின் 119 இடங்களிலும் போட்டியிடுகிறது, அதே நேரத்தில் காங்கிரஸ் அதன் கூட்டணிக் கட்சியான சிபிஐக்கு ஒரு இடத்தை ஒதுக்கியுள்ளது. பாஜக 111 இடங்களில் போட்டியிடுகிறது, மீதமுள்ள 8 தொகுதிகளில் அதன் கூட்டணிக் கட்சியான ஜனசேனா கட்சி போட்டியிடுகிறது. அசாதுதீன் ஓவைசியின் AIMIM ஒன்பது இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது, மற்ற இடங்களில் கேசிஆரின் பி.ஆர்.எஸ் கட்சிக்கு ஆதரவை அறிவித்துள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் கடந்த 2014ஆம் ஆண்டில் 21 இடங்களையும், 2018ஆம் ஆண்டில் வெறும் 19 இடங்களையும் காங்கிரஸ் கட்சி பெற்றிருந்த நிலையில் தற்போது வெளியாகும் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் காங்கிரஸ் கட்சி அங்கு ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கேசிஆரை ஆட்சியில் இருந்து காங்கிரஸ் கட்சி அகற்றும் என கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகின்றன.
மக்களின் வாக்குகளைக் கவரும் வகையில் பல்வேறு வாக்குறுதிகளையும் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. அதில், மகாலட்சுமி திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.2,500 நிதி உதவி வழங்கப்படும். கேஸ் சிலிண்டர் ரூ.500-க்கு விற்கப்படும். அரசுப் பேருந்துகளில் மாநிலம் முழுவதும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம், விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ. 15 ஆயிரம் நிதி உதவி ஆண்டுதோறும் வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி வாக்குறுதிகளை அள்ளித் தெளித்துள்ளது.
இந்நிலையில், லோக்போல் மெகா சர்வே முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தக் கருத்துக் கணிப்பின்படி, மொத்தமுள்ள 119 இடங்களில் காங்கிரஸ் 69 முதல் 72 இடங்களைப் பெறும். ஆளும் பிஆர்எஸ் 36 முதல் 39 இடங்களை கைப்பற்றும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சி 2 முதல் 3 இடங்களைப் பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் அசாதுதீன் ஓவைசியின் AIMIM கட்சி 5 முதல் 6 இடங்களைத் தக்கவைத்துக் கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லோக்போல் கருத்துக்கணிப்பின்படி, மொத்த வாக்குகளில் காங்கிரஸ் 43-46%க்கும் அதிகமாகப் பெறும். பி.ஆர்.எஸ் கட்சி 38-41% வாக்குகளைப் பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பாஜக 7-10% மற்றும் AIMIM கட்சி 4-6% மொத்த வாக்குகளைப் பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications