வீடு வீடாக விளையாட சென்றார்.. தெலுங்கானாவில் பெண் ஆடிய ஷாக்கிங் கொரோனா கேம்.. சூப்பர் ஸ்பிரெட்டர்!

தெலுங்கானாவில் வீடு வீடாக கேம் விளையாட சென்ற பெண் ஒருவர் மூலம் 31 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கானாவில் வீடு வீடாக கேம் விளையாட சென்ற பெண் ஒருவர் மூலம் 31 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கானாவில் கொரோனா நாளுக்கு நாள் தீவிரம் அடைய தொடங்கி உள்ளது. அங்கு கொரோனா காரணமாக 943 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மொத்தம் அங்கு 194 பேர் குணமடைந்து உள்ளனர். மேலும் 725 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதுவரை மொத்தம் 18 பேர் தெலுங்கானாவில் பலியாகி உள்ளனர். தெலுங்கானாவில் இறப்பு விகிதம் அதிகமாகி வருகிறது. ஹைதராபாத்தில் மட்டும் 513 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். தெலுங்கானாவில் கொரோனா காரணமாக விதிமுறைகள் தீவிரமாக்கப்பட்டு உள்ளது.

சூர்யபேட் மாவட்டம்

சூர்யபேட் மாவட்டம்

இந்த நிலையில் தெலுங்கானாவில் பெண் ஒருவர் மூலமாக சூர்யபேட் என்ற மாவட்டத்தில் பலருக்கு கொரோனா பரவி உள்ளது. சூர்யபேட் பகுதியை சேர்ந்த இந்த பெண்ணின் உறவினர் ஒருவர் கடந்த மாதம் டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்துள்ளார். டெல்லி மாநாட்டிற்கு இவர் சென்று வந்து சில நாட்களில் இவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இவர் குடும்பத்தில் இருந்த இன்னும் சிலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

கொரோனா பெண்

கொரோனா பெண்

அந்த குடும்பத்திற்கு தூரத்து உறவினரான இந்த பெண் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார். இந்த நிலையில் கடந்த வாரம் இவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பது போர் அடிக்கிறது என்று அருகில் இருந்த வீடுகளுக்கு சென்றுள்ளார். அந்த வீட்டில் இருக்கும் பெண்களுடன் பல்லாங்குழி விளையாடி உள்ளார். ஆனால் இவர் ஆடிய பல்லாங்குழி மொத்தமாக அந்த தெருவில் இருந்த எல்லோரின் வாழ்க்கையிலும் விளையாடி உள்ளது.

பல்லாங்குழி விளையாடினர்

பல்லாங்குழி விளையாடினர்

அந்த வாரம் முழுக்க அந்த தெருவில் இருக்கும் பலரின் வீட்டில் இருக்கும் பெண்களுடன் இவர் பல்லாங்குழி விளையாடி உள்ளார். இந்த நிலையில் 4 நாட்களுக்கு முன் அந்த பெண்ணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த பெண் யார் வீட்டிற்கு எல்லாம் சென்று பல்லாங்குழி விளையாடினார் என்று காண்டாக்ட் டிரேசிங் செய்யப்பட்டது. மொத்தம் 7 வீடுகளில் அந்த பெண் இப்படி விளையாடி இருக்கிறார்.

31 பேருக்கு கொரோனா

31 பேருக்கு கொரோனா

முடிவில் மொத்தம் அந்த பெண் 23 பெண்களை சந்தித்துள்ளார். இதன் மூலம் 20 பெண்களுக்கு கொரோனா பரவி உள்ளது. அவர்களின் வீட்டில் இருக்கும் மேலும் 11 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. மொத்தம் 31 பேருக்கு அந்த பெண் மூலம் கொரோனா பரவி உள்ளது. அந்த பெண்ணை சூர்யபேட் மாவட்டத்தின் சூப்பர் ஸ்பிரேட்டர் என்று அழைக்கிறார்கள். அவர் மீது வழக்கு பதிய வேண்டும் என்று அதே பகுதியை சேர்ந்த சிலர் கோரிக்கை வைத்துள்ளனர்.

பெரிய குழப்பம்

பெரிய குழப்பம்

இதனால் அந்த தெருவில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதே பெண் வேண்டும் என்றே கொரோனாவை பரப்பும் வகையில் இப்படி செய்துள்ளார் என்று புகார்கள் எழ தொடங்கி உள்ளது. இதுபோக இன்னும் பல அதே தெருவில் தனிமைப்படுத்தப்பட்டள்ளனர். இன்னும் பலருக்கு அந்த தெருவில் இந்த பெண் மூலம் கொரோனா பரவி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. சூர்யபேட் மாவட்டத்தில் மொத்தமாக 83 பேருக்கு கொரோனா உள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+