"கை மாறிய" மனைவி.. "அது" வேற 2 பேருக்கும் நடுவுல.. குழம்பை அள்ளி அள்ளி ஊற்றிய "சிபிஐ" ஜோதி.. கொடுமை

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி கைதாகி உள்ளார்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: விதவிதமாக சமைத்து போட்டு, கணவனை கொன்றுவிட்டார் மனைவி.. இப்போது ஒரு உயிர் பறிபோன நிலையில், இது தொடர்பாக 2 பேர் கைதாகி ஜெயிலில் உள்ளனர்.

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் ஜோதி... இவரது கணவர் பெயர் பைடி ராஜு.. 35 வயதாகிறது.. இவர்களுக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆகின்றன. 2 குழந்தைகள் இருக்கிறார்கள்.

ராஜு டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்தார்... திருமணத்திற்கு முன்பு ஜோதிக்கும், ஸ்ரீனிவாசன் என்பவருக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது... இதனால் கல்யாணம் ஆனபிறகும், ஸ்ரீனிவாசனை பிரிய ஜோதிக்கு மனசு வரவில்லை.. அதனால், தொடர்ந்து காதலனுடன் பழகி வந்துள்ளார்.

உல்லாசம்

உல்லாசம்

ஒருகட்டத்தில் இருவராலும் தினமும் சந்திக்காமல் இருக்க முடியவில்லை.. அதனால், வீட்டை விட்டு வெளியே சென்று, ஸ்ரீனிவாசனை சந்தித்து விட்டு வந்தார் ஜோதி. பொதுவெளியில் சந்தித்து பேசினாலும் அவர்களால் உல்லாசமாக இருக்க முடியவில்லை.. இதன்காரணமாக, இருவரும் தினமும் சந்தித்து கொள்வதற்காக, விசாகப்பட்டினத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளனர்.. விசாகப்பட்டினத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில், தூய்மை பணியாளர் வேலை தனக்கு கிடைத்துள்ளதாக கணவர் ராஜுவிடம் சொல்லி உள்ளார் ஜோதி.. தினமும் சிபிஐ அலுவலகத்தில் வேலைக்கு போவதாக சொல்லிவிட்டு, கள்ளக்காதலன் வீட்டிற்கு சென்றுள்ளார்..

சிபிஐ ஆபீஸ்

சிபிஐ ஆபீஸ்

சரியாக ஆபீஸ் டியூட்டி காலை 10 முதல் மாலை 6 மணி வரை இந்த வீட்டில் இருந்துவிட்டு, அதற்கு பிறகு, கிளம்பி தன்னுடைய வீட்டுக்கு செல்வாராம் ஜோதி. இப்படியே 6 மாதங்கள் ஜோதி, "சிபிஐ ஆபீசுக்கு" போய் வந்துள்ளார்.. தன்னுடைய காதலனுடனேயே தங்கி இருந்து வந்தார்... ஒருநாள் இந்த விஷயம் கணவர் ராஜுக்கு தெரிந்துவிட்டது.. இவர்களின் கள்ளக்காதலை கண்டித்தார். ஆனால், ஜோதி கேட்கவில்லை.. தம்பதிக்குள் தகராறு வெடித்தது.. ஒருகட்டத்தில், கணவரை தீர்த்துக்கட்டவும் ஜோதி துணிந்துவிட்டார்.. சம்பவத்தன்று வகை வகையாக சமையல் செய்தார். அந்த குழம்புகளில் அதிக அளவு தூக்க மாத்திரையை கலந்து, கணவருக்கு அள்ளி அள்ளி சாப்பாடு போட்டார்..

நெறிபட்ட கழுத்து

நெறிபட்ட கழுத்து

தூக்க மாத்திரை சாப்பாட்டை சாப்பிட்ட ராஜு, அடுத்த சில நிமிடங்களிலேயே தூங்கிவிட்டார்.. உடனே ஸ்ரீனிவாசனுக்கு போனை போட்டு, வீட்டுக்கு வரவழைத்தார் ஜோதி.. பின்னர் 2 பேரும் சேர்ந்து ராஜுவை கொன்றுள்ளனர்.. காலை ஒருவர்பிடிக்க, கழுத்தை ஒருவர் நெறிக்க, துடிதுடித்தபடியே ராஜு உயிர் பிரிந்துள்ளது.. இதையடுத்து, 108 ஆம்புலன்ஸ்க்கு ஜோதி போன் செய்து, பதறி பேசினார்.. கணவருக்கு திடீரென உடம்பு சரியில்லாமல் போய்விட்டது, ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கண்ணீருடன் கேட்டுள்ளார்.. கொஞ்ச நேரத்திற்கெல்லாம் 108 ஆம்புலன்ஸ் வந்துவிட்டது..

மயானம்

மயானம்

ஆனால், ராஜுவை பார்த்ததுமே, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக சொன்னார்கள். இதற்கு பிறகு, கள்ளக்காதல் ஜோடி ராஜுவின் உடலை, சுடுகாட்டுக்கு எடுத்து சென்று பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளது.. அதற்கு பிறகு, போலீசுக்கு போன ஜோதி, தன்னுடைய கணவரை காணவில்லை என்று புகார் தந்தார். போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியபோதுதான், சிபிஐ ஆபீசில் ஜோதி வேலை செய்யவில்லை என்பது வெட்டவெளிச்சமானது. அதற்கு பிறகுதான், ஜோதியை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்துள்ளனர். கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவரை கொலை செய்து எரித்ததை ஒப்புக்கொண்டார்...

கன்ஃபார்ம்

கன்ஃபார்ம்

ராஜுவின் கழுத்தை இருவரும் நெரித்து கொன்றதுமே, ராஜுவின் உயிர் போய்விட்தாம்.. ஆனாலும் அதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே, ஆம்புலன்சுக்கு போன் செய்துள்ளார்கள்.. ராஜு இறந்துவிட்டதை ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கன்பார்ம் செய்தபிறகுதான், ஜோதிக்கு நிம்மதியாகி உள்ளது.. அதற்கு பிறகுதான் அவசரஅவசரமாக மயானத்துக்கு சடலத்தை பைக்கில் வைத்து எடுத்து சென்றுள்ளார்கள்.. ஸ்ரீனிவாசன் பைக் ஓட்ட, பின்னாடி ஜோதி உட்கார்ந்து கொள்ள, நடுவில் சடலத்தை வைத்து சுடுகாட்டுக்கு கொண்டு போயுள்ளனர்.. இப்போது, ஜோதியும், ஸ்ரீனிவாசனும் ஜெயிலில் கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+