Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நெஞ்சே பதறுதே.. விடிகாலையில் கதறிய மனைவி.. அதுக்குன்னு பாறாங்கல்லில் இப்படியா.. கொடூர "அப்பாக்கள்"

பாறாங்கல்லில் அடித்து 2 மாத குழந்தையை கொன்றுள்ளார் பெற்ற தந்தை ஒருவர்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஒரே நாளில் 2 பதைபதைப்பு சம்பவங்கள் நடந்துள்ளன.. இந்த கொடூர தந்தைகளின் செயல்பாடுகளை பார்த்து பொதுமக்கள் அதிர்ந்து போயுள்ளனர்.

ஆந்திர மாநிலம் காளஹஸ்தி வாட்டர் ஹவுஸ் நகரை சேர்ந்தவர் முனிராஜா.. 22 வயதாகிறது.. இவர் ஒரு கூலி தொழிலாளி... மனைவி பெயர் சுவாதி.. இவருக்கு 19 வயதாகிறது..

இவர்களுக்கு நிகில் என்ற 3 மாத ஆண் குழந்தை இருந்தது... ஆனால், சுவாதியின் நடத்தையில் முனிராஜாவுக்கு அடிக்கடி சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது.. அதனால், சுவாதியிடம் தினமும் தகராறு செய்து கொண்டே வந்தார்..

 காய்ச்சல்

காய்ச்சல்

இந்த நிலையில் நிக்கிலுக்கு கடந்த 4 நாட்களாக உடல்நிலை சரி இல்லாமல் இருந்தது. அதனால், குழந்தையை டாக்டரிடம் அழைத்துச் செல்ல வேண்டும் என்று சுவாதி, முனிராஜாவிடம் சொல்லி உள்ளார்.. ஆனால், முனிராஜா குழந்தையை டாக்டரிடம் தூக்கி செல்லாமல் வேண்டுமென்றே காலம் கடத்தி வந்துள்ளார்.. இரவு நேரத்தில் குழந்தைக்கு காய்ச்சல் அதிகமாகிவிட்டதால், சுவாதி பதறிப்போய் உள்ளார்.. குழந்தையை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லாததால்தான் உடல்நிலை இப்படி மோசமாகி வருவதாக சுவாதி அழுதுகொண்டே சொன்னார்.

பாறாங்கல்

பாறாங்கல்

இது இவர்களுக்குள் மறுபடியும் தகராறாக உருவெடுத்தது.. இந்த குழந்தை உயிருடன் இருந்தால்தானே, ஆஸ்பத்திரிக்கு தூக்கிக்கொண்டு போக சொல்கிறாய்? என்று ஆவேசமாக கூறிய முனிராஜ், தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை 2 கால்களையும் பிடித்து வெளியே தூக்கி வந்தார்.. அங்கிருந்த ஒரு பாறையில் குழந்தையின் காலை பிடித்து ஓங்கி ஓங்கி அடித்தார். இதில் குழந்தையின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.... இதனை கண்ட சுவாதி கதறி துடித்தார்.

 செக்கிங்

செக்கிங்

ஆனால், அதற்குள் முனிராஜா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். சுவாதி குழந்தையை தூக்கிக் கொண்டு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். ஆஸ்பத்திரியில் குழந்தையை பரிசோதித்த டாக்டர், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக சொன்னார்கள்.. இதனை கேட்ட சுவாதி, அங்கேயே மயக்கம் போட்டு கீழே விழுந்தார். இதையடுத்து டாக்டர்கள் சுவாதிக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்..

 குளிக்க போனார்

குளிக்க போனார்

இதுகுறித்து தகவல் அறிந்த காளஹஸ்தி போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள முனிராஜை தேடி வருகின்றனர். அதேபோல நம் நாங்குநேரியிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. 2 வயது ஆண் குழந்தையை தன் கணவரிடம் தந்துவிட்டு, குளிக்க சென்றார்.. திரும்பி வந்து பார்த்தபோது, அழுதுகொண்டே இருந்தது.. எதனால் குழந்தை அழுகிறான் என்று கணவரிடம் கேட்டதற்கு, எறும்பு பொடியை பாலில் கலந்து கொடுத்து விட்டதாக கூறியுள்ளார்..

மாமியார்

மாமியார்

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அபிஷா உடனடியாக குழந்தையை சிகிச்சைக்காக முனைஞ்சிபட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்.. அந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது.. இந்த கொடூரம் எதற்காக தெரியுமா? தன்னுடைய வயதான அம்மாவுக்கு, மனைவி உதவி, ஒத்தாசைகள் செய்தாராம்.. இது மகனுக்கு பிடிக்கவில்லை.. என் அம்மாவுக்கு ஏன் உதவி செய்றே? என்று தகராறு மனைவியிடம் தகராறு செய்து வந்த நிலையில், இப்படி அந்த குழந்தையை செய்துவிட்டாராம்.. கொடுமை..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+