தெலுங்கானாவில் கொடூரம்.. ஆடு திருடியதாக கூறி தலித் இளைஞர்களை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு தாக்குதல்
ஐதராபாத்: தெலுங்கனாவில் ஆடு திருடியதாக சந்தேகத்தின் பேரில் தலித் இளைஞர் ஒருவரையும் அவரது நண்பரையும் தலைகீழாக கட்டி தொங்க விட்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் நெஞ்சை பதற வைக்கும் வகையில் அமைந்துள்ளது.
நமது நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளை கடந்து விட்டது. ஆனால் இன்றும் கூட இங்குச் சாதிய கொடூரங்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. மனித குலத்திற்கே அவமானம் ஏற்படுத்தும் விதமாக நடைபெறும் இத்தகைய கொடூரங்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. ஆனாலும் கூட ஆங்காங்கே சாதிய நோக்குடன் ஒடுக்கப்பட்டோருக்கு எதிரான வன்முறைகளுக்கு இன்னும் முற்றுப்புள்ளி வைத்தபாடில்லை.

இந்த நிலையில் தான் தெலுங்கானாவில் தலித் சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் இருவரை ஆடு திருடியதாக கூறி கொடூரமாக கூறி அடித்து துன்புறுத்தபட்ட சம்பவம் நடிபெற்றுள்ளது. மனிதன்மையற்ற முறையில் நடைபெற்ற இந்த கொடூர சம்பவம் குறித்த விவரம் வருமாறு:- தெலுங்கனாவில் உள்ள மஞ்சோரியா பகுதியில் ராமுலு என்பவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். சுமார் 20 க்கும் மேற்பட்ட ஆடுகளை இவர் வளர்த்து வருகிறார்.
இவரது மந்தையில் ஒரு ஆடு காணாமல் போனதாக சொல்லப்படுகிறது. அப்போது அங்கு மாடு மேய்த்து வந்து கொண்டு இருந்த தேஜா மற்றும் அவரது தலித் நண்பர் சிலுமுலா கிரன் ஆகிய இருவரையும் ராமுலு அழைத்துள்ளார். தனது மந்தையில் காணாமல் போன ஆடுகளை இவர்கள் தான் திருடியிருக்க வேண்டும் என்ற சந்தேகத்தின் பேரில் இருவரிடம் விசாரித்துள்ளார். ஆனால், அவர்கள் மறுத்ததாக தெரிகிறது.
இதனால், கோபம் அடைந்த ராமுலு தனது விட்டின் பின்புறம் உள்ள மாட்டுக்கொட்டைகைக்கு அழைத்து சென்று தலைகீழாக கட்டி தொங்க விட்டு கொடூரமாக தாக்கியுள்ளார். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி நெஞ்சை பதற வைக்கும் விதமாக அமைந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆட்டின் உரிமையாளர் ராமுலு அவரது மனைவி ஸ்வரூபா மற்றும் மகன் ஸ்ரீனிவாஸ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் மூன்று பேரையும் கைது செய்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற பெல்லம்பல்லி ஏசிபி சதையா மற்றும் எஸ்.எஸ்.ஐ சந்திரகுமார் ஆகிய இரு காவல் அதிகாரிகளும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். எஸ்.சி/எஸ்.டி சட்டத்தின் கீழ் ராமுலு மற்றும் அவரது மனைவி, மகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மூன்று பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு நீதிமன்றக்காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications