மிசோரம்: தொங்கு சட்டபை கன்ஃபார்ம்! பாஜக கூட்டணியில் இணைந்ததால் ஆட்சியை 'பலி' கொடுக்கும் எம்என்எஃப்!
ஐஸ்வால்: மிசோரம் சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, வடகிழக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஆளும் மிசோ தேசிய முன்னணி (எம்.என்.எஃப் MNF) ஆட்சியைப் பறிகொடுக்கும் என்கிறது டெமாக்கரசி டைம்ஸ் நெட்வொர்க் எக்ஸிட் போல் முடிவுகள்.
மிசோரம் மாநிலத்தில் பாஜக கூட்டணி கட்சியான எம்.என்.எஃப் MNF ஆட்சியில் உள்ளார். முதல்வராக ஜோரம்தங்கா பதவி வகித்து வருகிறார். 40 தொகுதிகளைக் கொண்ட மிசோரமில் பெரும்பான்மைக்கு தேவை 21 இடங்கள்.

மிசோரம் மாநில மக்களும் மணிப்பூர் குக்கி-ஜோ பழங்குடிகளும் தொப்புள் கொடி உறவுகள். மணிப்பூர் வன்முறையில் பாதிக்கப்பட்டவர்கள் குக்கி பழங்குடிகள். ஆனால் மணிப்பூர் வன்முறையை மத்தியில் ஆளும் பாஜக அரசு அடக்கவில்லை என்பது பொதுவான குற்றச்சாட்டு. இதனால் மணிப்பூரில் மட்டுமல்ல மிசோரமில் பாஜகவுக்கு கடும் எதிர்ப்பு இருந்தது.
மிசோரம் மக்களின் கடும் எதிர்ப்பை புரிந்து கொண்டதால், பிரதமர் மோடியுடன் ஒரே மேடையில் தேர்தல் பிரசாரம் செய்யப் போவதில்லை என முதல்வர் ஜோரம்தங்கா அறிவித்தார். மிசோரம் தேர்தலில் பாஜகவிடம் இருந்து விலகி இருப்பதாகவே எம்.என்.எஃப் வெளிப்படுத்தியது.
மிசோரம் சட்டசபை தேர்தல் நவம்பர் 7-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. மிசோரம் சட்டசபை தேர்தலுக்கு முந்தைய அனைத்து கருத்து கணிப்புகளும் ஆளும் எம்.என்.எஃப் ஆட்சியை பறிகொடுக்கும்; மிசோரமில் தொங்கு சட்டசபைதான் அமையும் என்றே கூறி வந்தன. தற்போதைய தேர்தலுக்கு பிந்தைய எக்ஸிட் போல் முடிவுகளும் மிசோரமில் தொங்கு சட்டசபைதான் உருவாகும் என தெரிவித்துள்ளன. பாஜகவுடனான எம்.என்.எஃப் முறியாத உறவுதான் அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது என்பதையே எக்ஸிட் போல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

மிசோரம் சட்டசபை தேர்தல் முடிவுகள் எப்படி இருக்குன் என்பது குறித்த டெமாக்கரசி டைம்ஸ் நெட்வொர்க் எக்ஸிட் போல் முடிவுகள்
ஜோரம் மக்கள் இயக்கம் -ZPM 16 முதல் 24 இடங்கள்
எம்.என்.எஃப் MNF 11 முதல் 18 இடங்கள்
காங்கிரஸ் 3 முதல் 9 இடங்கள்
பாஜக 0 முதல் 2 இடங்கள்
இதர கட்சிகள்- 0 முதல் 1 இடம்
2018 மிசோரம் சட்டசபை தேர்தலில் கட்சிகள் வென்ற இடங்கள்:
எம்.என்.எஃப் -26 இடங்கள்
ஜோரம் மக்கள் இயக்கம்- 8 இடங்கள்
காங்கிரஸ்- 5 இடங்கள்
பாஜக- 1
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications