ஹைதராபாத்தில் பலருக்கும் நோட்டீஸ்.. முதல்வர் ரேவந்த் ரெட்டியின் சகோதரர் வீட்டையும் இடிக்க உத்தரவு
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள துர்கம் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைக்கு மத்தியில் முதல்வர் ரேவந்த் ரெட்டியின் சகோதரர் வீட்டை இடிப்பதற்கான நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நாகர்ஜூனாவை தொடர்ந்து ஒவைசி முதல் முன்னாள் அமைச்சர்கள் வரை பலர் ஆக்கிரமித்த புகாரில் சிக்கியுள்ளனர். அந்த கட்டிடங்களை இடிக்க ஹைதராபாத் மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
ஐடி துறையில் முன்னணியில் உள்ள ஹைதராபாத் மாநகரம் ஆக்கிரமிப்பு புகாரில் தற்போது சிக்கி தவிக்கிறது. எப்போதுமே ஒரு பெரியநகரம் தனது வளர்ச்சிக்காக பல விஷயங்களை இழக்கும். சென்னை தனது ஐடி துறை வளர்ச்சிக்காக உலகின் அற்புதமான நன்னீர் சதுப்புநிலமான பள்ளிக்கரணை ஏரியின் பல பகுதிகளை இழந்தது. பல்லாவரம் ஏரியை இழந்தது. வேளச்சேரி ஏரி, பெருங்குடி ஏரி என பல ஏரிகளை இழந்துள்ளது. அதேபோல் தான் ஐடி நகரமாக ஹைதராபாத்தும் ஏரிக்களை இழந்துள்ளது. அங்குள்ள துர்கம் செருவு என்ற ஏரி கடந்த 20 ஆண்டுகளில் அதிக அளவு ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகி உள்ளது. அதனை அகற்றும் நடவடிக்கையில் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு இறங்கி உள்ளது.

அதன்படி, ஹைதராபாத் ஏரியில் ஆக்கிரமிப்பில் இருந்ததாக கூறி நடிகர் நாகர்ஜூனாவின் என் கன்விக்சன் கட்டிடத்தை ஹைத்ரா அதிகாரிகள் அதிரடியாக இடித்து தள்ளினார்கள். அதனை தொடர்ந்து ஏஐஎம்ஐஎம் தள தலைவர் அக்பருதீன் ஓவைசியின் சாலார்-இ-மில்லத் கல்வி அறக்கட்டளை நடத்தும் பாத்திமா ஒவைசி கல்லூரி, பிஆர்எஸ் எம்எல்ஏ பல்லா ராஜேஷ்வர் ரெட்டிக்கு சொந்தமான அனுராக் கல்வி நிறுவனங்கள் மற்றும் முன்னாள் அமைச்சர் மற்றும் மல்லா ரெட்டியின் குடும்பம் நடத்தும் கல்வி நிறுவனங்கள் ஆகியவை இடிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் துர்கம் செருவு ஏரியைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான முக்கியமான நடவடிக்கையாக, முதல்வர் ஏ ரேவந்த் ரெட்டியின் சகோதரர் திருப்பதி ரெட்டியின் வீடு மற்றும் அலுவலகம் உட்பட பல முக்கிய கட்டிடங்களை இடிக்கப் போவதாக தெலுங்கானா அரசு புதன்கிழமை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மடப்பூர் அமர் கூட்டுறவுச் சங்கத்தில் உள்ள சொத்துக்களான இவை அனைத்தும், துர்கம் செருவு ஏரி பகுதியில் அமைந்துள்ளது. இந்த ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் 30 நாட்களுக்குள் அகற்றப்பட வேண்டும் என்று நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

ரங்காரெட்டி (ஹைதராபாத் மாநகரின் ஒரு பகுதியை இப்படி அழைப்பார்கள்) மாவட்ட கலெக்டர், செரிலிங்கம்பள்ளி துணை ஆட்சியர் தலைமையிலான வருவாய்த் துறை அதிகாரிகள், செருவை ஒட்டியுள்ள நெக்டர்ஸ் காலனி, டாக்டர்கள் காலனி, கவுரி மலை, அமர் சொசைட்டி ஆகியவற்றில் வசிப்பவர்களுக்கும் இதேபோல் ஆக்கிரமிப்பு நோட்டீஸ் வழங்கி உள்ளார்கள்.
வால்டா சட்டத்தின் பிரிவு 23(1)ன் கீழ் வெளியிடப்பட்ட இந்த நோட்டீசில், ஏரியின் அனுமதிக்கப்பட்ட வரம்புகளுக்கு அப்பால் ஆக்கிரமித்துள்ள கட்டமைப்புகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தானாக முன்வந்து இடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மீறினால் அதிகாரிகள் தாங்களாகவே இடிக்கும் பணியை மேற்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை அன்று ஒரு நாளில் மட்டும் நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு ஆக்கிரமிப்பு தொடர்பாக நோட்டீஸ் வழங்கப்பட்டதால், பாதிக்கப்பட்ட காலனிகளில் குடியிருப்பவர்கள் மற்றும் வணிகர்கள் கவலையில் இருக்கிறார்கள்.

துர்கம் செருவு ஏரியை ஹைதராபாத் மக்கள் 'ரகசிய ஏரி' என்று குறிப்பிடப்படுகிறார்கள். ஹைதராபாத்தின் மேற்குப் பகுதியில் உள்ள இந்த ஏரி தான் அந்த பகுதியின் அடையாளமாகும். பல ஆண்டுகளாக அந்த ஏரி ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி வந்ததால், அதன் பரப்பளவு வெகுவாகக் குறைந்துவிடட்து. முதலில் 100 ஏக்கர் பரப்பளவில் பரவியிருந்த அந்த ஏரி, சமீபத்திய அளவீடுகள் ஏரி இப்போது 84 ஏக்கர் பரப்பளவில் மட்டுமே இருக்கிறது.
10 வருடங்களுக்கு முன்பே இந்த ஏரி பகுதி நீர்நிலை பகுதியாக (NDZ) அறிவிக்கப்பட்ட போதிலும், அப்பகுதியைப் பாதுகாப்பதற்கான இறுதி அறிவிப்பு ஒருபோதும் வெளியிடப்படவில்லை. இதனால் பலரும் ஏரியை ஆக்கிரமித்து விட்டார்கள். நீதிபதிகள், அரசியல் தலைவர்கள், பொறியாளர்கள், ஓய்வு பெற்ற அதிகாரிகள் என செல்வாக்கு மிக்கவர்கள் ஏரியைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புப் பகுதிகளில் குடியிருப்புகள் கட்டியுள்ளார்கள். தற்போது அரசு எடுத்து வரும் இந்த நடவடிக்கை என்பது, ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்கும் முயற்சியாகவும், ஏரியை மேலும் ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்கும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications