"லாட்ஜ்" கிட்டதான் இருக்கு.. பஸ் ஸ்டாண்டில் வந்த சத்தம்.. ஆசையா பின்னாடியே போன நபர்.. "லட்டு" போச்சே

இளைஞரை ஏமாற்றி மொத்தம் 6 லட்சம் பணம், நகைகளை ஏமாற்றி உள்ளார் இளம்பெண்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: லாட்ஜூக்கு போகலாமா? என்று ஒரு இளம்பெண் அழைக்கவும், அவர் பின்னாடியே போனார் அந்த பக்தர்.. பிறகு என்ன நடந்தது?

கடந்த வாரம் ஆந்திராவில் ஒரு சம்பவம் நடந்தது.. அந்த 35 வயதான அந்த இளைஞர் பெயர் ரிஷி... மனைவியுடன் ஒரு வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்தார்..

ஒருநாள் ஹவுஸ்ஓனருக்கு ரிஷி போன் செய்து, "பிரசவத்திற்காக மனைவியை சொந்த ஊருக்கு அழைத்து செல்கிறேன்.. கொஞ்ச நாளில் திரும்பி விடுவேன்" என்று சொல்லிவிட்டு போனார்..

துர்நாற்றம்

துர்நாற்றம்

ஆனால், ஒரு வருஷம் ஆகியும், ரிஷி திரும்பி வரவில்லை.. இந்த வருடமாகவே வாடகையும் தரவில்லை.. ஆனால், பூட்டு போட்ட வாடகை வீட்டின் கரண்ட் பில் மட்டும் மாதாமாதம் அதிகமாகி கொண்டே வந்தது.. பூட்டிய வீட்டில் எப்படி இந்த அளவுக்கு கரண்ட்பில் வரும் என்று ஹவுஸ் ஓனருக்கு சந்தேகம் இருந்து கொண்டே வந்தது.. ரொம்ப நாளாகவே வீடு பூட்டியே இருப்பதால், அதை சுத்தம் செய்து, வேறு யாருக்காவது வாடகைக்கு விடலாம் என்று நினைத்து கதவை திறந்தால், குப்பென்று துர்நாற்றம் வந்தது.

தண்ணீர் டிரம்

தண்ணீர் டிரம்

அப்போதுதான், அங்கிருந்த ஒரு தண்ணீர் டிரம்மில் பெண் ஒருவரின் எலும்புக்கூடு சடலம் இருப்பது பார்த்து அதிர்ந்து போனார்.. உடனே போலீஸ் வந்து விசாரித்தது.. கடைசியில் பார்த்தால், அந்த பெண்ணை கொலை செய்ததே ரிஷிதானாம்.. ஒருநாள் பஸ் ஸ்டாண்டில் நின்றுகொண்டிருந்தபோது, 25 வயதுள்ள இளம்பெண், ரிஷி பக்கத்தில் வந்து நின்றுள்ளார்.. வலிய வந்து நெருங்கி பேசியுள்ளார்.. கொஞ்ச நேரத்திலேயே 2 பேரின் செல்போன் நம்பரும் பரிமாறி கொள்ளப்பட்டது..

பஸ் ஸ்டாண்டு

பஸ் ஸ்டாண்டு

2 நாள் கழித்து, ரிஷி வீட்டுக்கு அந்த பெண் வந்துள்ளார்.. இருவரும் ஜாலியாக இருந்துள்ளனர்.. பிறகு, செலவுக்கு அந்த பெண் பணம் கேட்டுள்ளார்.. அவ்வளவு பணம் கையில் இல்லை என்று ரிஷி சொல்லவும், அந்த பெண், "நாம் இருவரும் நைட் உல்லாசமாக இருந்த வீடியோவை வெளியிட போகிறேன்" என்று மிரட்டியிருக்கிறார்.. இதனால் ஏற்பட்ட தகராறில், அந்த பெண்ணை கொன்று, சடலத்தை வீட்டில் உள்ள தண்ணீர் டிரம்மில் வைத்து மூடிவிட்டு தப்பியுள்ளார்... இந்த பதற்றத்தில் வீட்டில் லைட், ஃபேன் எதையும் அணைக்காமல் ரிஷி ஓடியுள்ளது தெரியவந்தது. இப்போது ஜெயிலில் உள்ளார்..

கரண்ட் பில்

கரண்ட் பில்

இதே போல சம்பவம், இதே ஆந்திரா பஸ் ஸ்டாண்டில் நடந்துள்ளது.. உலகப்புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாக திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு, தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.. அந்தவகையில், ஐதராபாத்தை சேர்ந்த ஒருவர், ஏழுமலையானை தரிசிக்க சென்றுள்ளார்.. பிறகு, அங்கிருந்து பஸ்ஸில் ஸ்ரீகாளஹஸ்தி கோயிலுக்கு சென்றுள்ளார்... அந்த பஸ்ஸில் ஒரு இளம்பெண் இருந்துள்ளார்.. இந்த இளைஞர் தனியாக வந்திருப்பதை பார்த்ததுமே, அவருக்கு பக்கத்தில் வந்து உட்கார்ந்துள்ளார்.

லாட்ஜூக்குள்

லாட்ஜூக்குள்

இளைஞரிடம் அந்த பெண்ணே நைசாக பேச்சு தந்துள்ளார்.. ஆரம்பத்தில் அந்த இளைஞர், ஒன்றிரண்டு பதில்களை மட்டும் சொல்லி உள்ளார். ஆனால், இந்தபெண் வலிய வலிய வந்து பேசவும், வேற வழியில்லாமல் பேச ஆரம்பித்துவிட்டார்.. கடைசியில் இருவரும் தங்களது குடும்ப விஷயங்களை பரிமாறி கொள்ளும் அளவுக்கு வந்துவிட்டனர்.. இவ்வளவும் பஸ்ஸிலேயே நடந்துள்ளது.. காளஹஸ்தி பஸ் ஸ்டாண்ட்டுக்கு பஸ் வந்து நின்றது.. அப்போது அந்த பெண் இளைஞரிடம், இங்கே எங்காவது கொஞ்ச நேரம் லாட்ஜில் ரெஸ்ட் எடுத்துவிட்டு, அதற்கு பிறகு கோயிலுக்கு போகலாமா? என்று கேட்டுள்ளார்..

லட்டு பிரசாதம்

லட்டு பிரசாதம்

அந்த இளம்பெண் ஆசையாக அழைத்ததால், இவரும் ஓகே சொல்லி உள்ளார்.. 2 பேரும், அருகில் இருந்த லாட்ஜ் ஒன்றுக்கு சென்று ரூம் எடுத்து தங்கியுள்ளனர். அப்போது, தன்னுடைய ஹேண்ட் பேக்கில் இருந்து, பிரசாதம் எடுத்தார் இளம்பெண்.. ஏற்கனவே சென்ற கோயிலில் தந்ததாக சொல்லி, அதை இளைஞருக்கு தந்தார்.. அவரும் அந்த லட்டுவை வாங்கி சாப்பிட்டார்.. கொஞ்ச நேரத்தில் மயங்கி விழுந்தார்.. பிறகு கண்விழித்து பார்த்தால், தன்னிடம் இருந்த 6 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை அந்த இளம்பெண் திருடிச்சென்றது தெரியவந்தது..

லாட்ஜினில்

லாட்ஜினில்

உடனே காளஹஸ்தி ஸ்டேஷனில் புகார் தந்தார்.. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து லாட்ஜில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அந்த இளம்பெண்ணை தேடி வருகின்றனர். கோயிலுக்கு போனோமா வந்தோமா என்றில்லாமல், லாட்ஜூக்கு போனால் இதுதான் கதி போலும்.. முன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் பேச்சு தர வேண்டாம் என்று போலீஸ் எவ்வளவோ சொன்னாலும், 'சபலம்' யாரை விட்டது?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+