ஆட்டுக்கறி.. "தர்மபத்தினி" ஷிவானியின் கடைசி நிமிட "சம்பவம்".. ஐயோ, அந்த நேரத்திலும் வீடியோ எடுத்தாரா?
ஹைதராபாத்: கடந்த 2 நாட்களாகவே, சோஷியல் மீடியா முழுவதும் ஷிவானி பற்றின பேச்சாகத்தான் இருக்கிறது.. யாரிந்த பெண் ஷிவானி?
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் ரமேஷ்.. 35 வயதாகிறது.. இவர் ஒரு போலீஸ்காரர்.. மனைவி பெயர் ஷிவானி.. 30 வயதாகிறது.. இந்த தம்பதிக்கு 8 மற்றும் 6 வயதில் 2 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.

மதுபோதை: இந்நிலையில், கடந்த 1ம் தேதி ரமேஷ் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக, குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தகவல் சென்றது.. வழக்கம்போல டியூட்டியில் இருந்து வீட்டுக்கு வந்து நிறைய தண்ணி அடித்துவிட்டார்.. போதை உச்சிக்கு ஏறிவிடவும், தள்ளாடியபடியே மயங்கி விழுந்தார்.. கொஞ்ச நேரத்தில் ஹார்ட் அட்டாக் வந்துவிட்டது என்று அனைவரிடமும் சொன்னார் ஷிவானி.
அத்துடன், அவசர அவசரமாக சடலத்தை புதைக்க ஏற்பாடும் செய்தார்.. இதனால் ரமேஷின் உறவினர்களுக்கு சந்தேகம் வந்தது.. மேலும், ரமேஷ் இறந்தது குறித்து அனைவருக்கும் போனை போட்டு சொன்னது, கால்டாக்சி டிரைவர் ராமாராவ் என்பதால் சந்தேகம் அதிகரித்து. இதை போலீசாரிடம் புகாராக சொல்லவும், நேரடியாகவே விசாரணையில், போலீசாரும் குதித்தனர்.
யாரந்த நபர்: முதல் விசாரணையே அந்த டாக்சி டிரைவர் ராமாராவ்தான்.. 33 வயதாகிறது.. இவர் ரமேஷின் நண்பராம்.. வீட்டுக்கு வந்துபோகும்போது, ஷிவானிக்கு பழக்கம் ஏற்பட்டது. இதுவே கள்ளக்காதலாக மாறி உள்ளது.. இந்த விஷயம் ரமேஷிற்கு தெரிய வந்ததால் ஷிவானியை கண்டித்துள்ளார்.. கள்ளக்காதலுக்கு கணவன் தடையாக இருப்பதால், அவரை கொலை செய்ய ஷிவானி முடிவு செய்துள்ளார்.
கடந்த 1ம் தேதி அளவுக்கு அதிகமான மதுவை ஊற்றி, கணவனுக்கு தந்து, அதற்கு பிறகு காதலனையும், அவரது நண்பர் நீலா என்பவரையும் வீட்டுக்கு வரவழைத்து, ஷிவானி தலையணையால் அமுக்கி கொன்றுள்ளார்.. மாரடைப்பால் இறந்துவிட்டதாகவும் நாடகமாடியிருக்கிறார். இவ்வளவும் விசாரணையில் தெரியவந்ததையடுத்து, ஷிவானி, ராமாராவ், நீலா 3 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஷிவானி வீடியோ: இப்படிப்பட்ட சூழலில்தான், ஷிவானி எடுத்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. கணவரை கொலை செய்வதற்கு முன்பு ஷிவானி இந்த வீடியோவை எடுத்திருக்கிறார்.
சம்பவத்தன்று, கணவருக்கு பிடித்த மட்டன் குழம்பு, மட்டன் தொக்கு இரண்டையுமே செய்து பரிமாறியிருக்கிறார் ஷிவானி.. அதற்கு பிறகுதான், அளவுக்கு அதிகமாக மதுவை ஊற்றி தந்து குடிக்க வைத்துள்ளார்.. போதை மண்டைக்கேறியதுமே, தன்னை புகழ்ந்து பேசும்படி கணவரிடம் சொன்னாராம் ஷிவானி.. அதைதான் வீடியோவாக எடுத்துள்ளார்.
வீடியோ: அந்த வீடியோவில் கணவர் ரமேஷ் போதையில் பேசியதாவது, "என் பொண்டாட்டி ரொம்ப தெளிவானவள்.. படிப்பறிவு அவ்வளவாக இல்லை.. ஆனால், சரியாக வழிகாட்டினால் போதும், அதை சிறப்பாக செய்துமுடித்து விடுபவள்.. என் பொண்டாட்டியே என்னுடைய வாழ்க்கை.. நான் இருக்கும்வரை ரொம்ப தைரியமாக இருப்பாள்.. ஆனால், நான் இறந்தாலும் அவள் தைரியமாக இருக்க வேண்டும்.. இதுதான் என் ஆசை.. என் மனைவிதான் பெஸ்ட் என்று ஷிவானி தன் கணவனை பேச வைத்துள்ளார்.
அதற்கு பிறகு, ரமேஷை பெட்ரூமுக்கு அழைத்து சென்று படுக்க வைத்துள்ளார். அதற்கு பிறகு கள்ளக்காதலனை வரவழைத்து கொன்றுள்ளார் ஷிவானி. அங்கிருந்த சிசிடிவி கேமராவிலும், ராமாராவ் மற்றும் நீலா ஆகியோர் வீட்டுக்குள் வந்து செல்வதும் பதிவாகியிருக்கிறது. போலீஸ்கார கணவனை போதையில் ஷிவானி பேச வைத்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
பரிதாப பிஞ்சுகள்: 3 பேருமே இப்போது ஜெயிலில் கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்கள்.. அம்மாவும் இல்லாமல், அப்பாவும் இல்லாமல், அந்த 2 பெண் குழந்தைகளோ அழுது கொண்டிருக்கின்றன.












Click it and Unblock the Notifications