ஆடைகளை களைந்து அதிர்ச்சி.. ஏரிக்கரைக்கே ஓடிய டாக்டர்கள்.. போலீஸூக்கு தண்ணி காட்டிய நபர்.. ஐயோ டீச்சர்
ஹைதராபாத்: மிக கொடூரமான முறையில் ஒரு பள்ளி ஆசிரியை கொலை செய்யப்பட்டுள்ளார்.. கிட்டத்தட்ட 20 நாட்கள் கழித்து போலீசார் சம்பந்தப்பட்ட குற்றவாளியை கைது செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் பொண்டலவாடா கிராமத்தை சேர்ந்தவர் அந்த டீச்சர்.. 24 வயதாகிறது.. டீச்சர் டிரெயினிங் முடித்துள்ளார்.. நர்பாலாவில் உள்ள, பிரைவேட் ஸ்கூலிலேயே ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.
பள்ளிக்கு தினமும் ஆட்டோவில்தான் சென்று வந்துள்ளார்.. அப்போது, பக்கத்து கிராமத்தை சேர்ந்த ஜாபர்வாலி என்பவர்தான், டீச்சரை ஆட்டோவில் தினமும் பள்ளிக்கு அழைத்து சென்று வந்துள்ளார்.. ஜாபர்வாலிக்கு 30 வயதாகிறது.

ஆட்டோ காதல்
இவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு, காதலாகவும் கனிந்துள்ளது.. இருவரும் அடிக்கடி தனிமையிலும் சந்தித்துள்ளனர்.. கல்யாணம் செய்தால் உன்னைத்தான் செய்வேன் என்று ஆசைக்காட்டி, ஆசிரியையுடன் ஜாபர்வாலி நெருக்கமாக பழகி வந்துள்ளார்.. பலநாட்கள் இப்படியே சென்ற நிலையில், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு, இளம்பெண் கேட்டுள்ளார். அதற்கு ஜாபர்வாலி, ஏதேதோ காரணத்தை சொல்லி தட்டிக்கழித்தபடியே வந்துள்ளார்.. நாளடைவில் இளம்பெண் திருமணத்துக்கு வற்புறுத்தியதால், அவரை சந்திப்பதையே தவிர்த்துள்ளார்.. செல்போனையும் சுவிட்ச்ஆப் செய்துவிட்டாராம்.

டீச்சர் லவ்
இதனால், மனமுடைந்த டீச்சர், சில நாட்களுக்கு முன் ஜாபர்வாலியின் வீட்டிற்கே சென்றுள்ளார்... அங்கிருந்த அவரது உறவினர்களிடம் நடந்த சம்பவத்தை எல்லாம் சொல்லி கதறியுள்ளார்.. ஜாபர்வாலிக்கு எப்படியாவது அறிவுரை சொல்லி, தன்னை திருமணம் செய்துகொள்ள ஏற்பாடு செய்யும்படியும் அழுதுள்ளார்.. அதைக்கேட்டு அதிர்ந்த உறவினர்கள், ஜாபர்வாலிக்கு ஏற்கனவே கல்யாணமாகிவிட்டதே.. 2 குழந்தைகளும் இருக்கிறார்களே.. நாங்கள் எப்படி உன்னை திருமணம் செய்ய சொல்ல முடியும்? என்று கேட்டனர். இதைகேட்டதுமே டீச்சருக்கு தூக்கிவாரிப்போட்டது.. ஜாபர்வாலிக்கு கல்யாணமான விஷயமே அப்போதுதான் தெரியவந்தது..

சாய்பாபா கோவில்
கடுமையான அதிர்ச்சி அடைந்த அவர், "என்னால் வேறு ஒரு கல்யாணம் செய்ய முடியாது, அதனால் ஜாபர்வாலியுடன் 2வது கல்யாணம் செய்து வையுங்கள், அதுவரை நான் என்னுடைய வீட்டுக்கு போகமாட்டேன்.. இங்கேயே இருப்பேன்" என்று சொல்லி கதறி அழுதுள்ளார். இதையடுத்து, ஜாபர்வாலியின் உறவினர்கள் அவருக்கு ஆறுதல் சொல்லி வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதற்கு பிறகு வீட்டுக்கு வந்த ஜாபர்வாலியிடம் நடந்த சம்பவத்தை எல்லாம் உறவினர்கள் சொல்லியுள்ளனர்.. இதனால் கடும் ஆத்திரமடைந்த ஜாபர்வாலி, காதலியை கொலை செய்ய முடிவு செய்தார்..

தாலி கட்டுங்கள்
இதற்காக, 20 நாட்களுக்கு முன்பு, டீச்சருக்கு போனை செய்து, "இந்து முறைப்படியே கல்யாணம் செய்துகொள்கிறேன். நாம் அடிக்கடி சந்திக்கும் புக்கராயசமுத்திரம் செருவுகட்டாவில் உள்ள சாய்பாபா கோயிலுக்கு வா" என்று அழைத்துள்ளார்.. டீச்சரும் அங்கு சென்றதும், ஆட்டோவில் மறைவான இடத்திற்கு அழைத்துச்சென்றுள்ளார்.. பிறகு உல்லாசமாக இருக்கும்படி சொல்லவும், அதற்கு டீச்சர் மறுத்துள்ளார்.. முதலில் தாலி கட்டுங்கள் என்று கறாராக கூறியுள்ளார்.. இதனால் ஆத்திரமடைந்த, ஜாபர்வாலி, இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்துள்ளார். பிறகு கழுத்தை நெரித்து கொலையும் செய்து, அவர் அணிந்திருந்த துணிகளை கழற்றிவிட்டு, நிர்வாண சடலத்தை அங்குள்ள ஏரிக்கரையில் புதைத்துவிட்டு தப்பியுள்ளார்.

மெசேஜ் மெசேஜ்
பின்னர், இந்த கொலையை, தற்கொலையாக மாற்ற வேண்டும் என்பதற்காக, அந்த பெண்ணின் செல்போனில் இருந்து, அவரது தங்கைக்கு ஒரு மெசேஜ் அனுப்பியுள்ளார். அதில் "நான் ஒருவரை காதலிக்கிறேன்... அவரைதான் கல்யாணம் செய்ய போகிறேன்.. ஆனால் அவரை திருமணம் செய்ய எதிர்ப்பு ஏற்படும் என்பதால், நான் செருவுகட்டாவில் உள்ள சாய்பாபா கோயில் அருகே தற்கொலை செய்து கொள்கிறேன். எல்லாருக்கும் குட்பை" என்று ஜாபர்வாலியே மெசேஜ்ஜை அனுப்பினார். இதனிடையே, மகள் மாயமானதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை தேட துவங்கினர்.. போலீசிலும் புகார் தந்தனர்.. அப்போதுதான், டீச்சரின் தங்கைக்கு இந்த மெசேஜ் வந்தது.. இதனால் மேலும் சந்கேமடைந்த பெற்றோர், மறுபடியும் போலீசாரிடம் இதை பற்றி சொல்லினர்..

நிர்வாண சடலம்
இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தியபோதுதான், ஸ்கூலுக்கு டீச்சர் ஆட்டோவில் சென்றுவந்ததையறிந்து, ஜாபர்வாலி மீது சந்தேகம் திரும்பியது.. அவரை பிடித்து விசாரித்தபோதுதான், மொத்த உண்மையையும் சொன்னார்.. இதையடுத்து ஜாபர்வாலி கொடுத்த தகவலின்பேரில், ஏரிக்கரையில் புதைக்கப்பட்டிருந்த, நிர்வாண சடலத்தை தோண்டி எடுத்தனர். 20 நாள் ஆகிவிட்டதால் சடலம் அழுகிய நிலையில் கிடந்தது.. அதனால் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முடியாததால், அனந்தபூர் அரசு மருத்துவமனை டாக்டர்களே, ஏரிக்கரைக்கு ஓடிவந்தனர்.. அங்கேயே போஸ்ட் மார்ட்டத்தையும் செய்தனர்.. இப்போது, ஜாபர்வாலியை போலீசார் கைது செய்து, விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications