"ஆட்டுத்தலை" போல சீவி.. மருமகளின் "தலை" ஒரு கையில்.. கத்தி மறுகையில்.. அலறவிட்ட சுப்பம்மா.. பின்னணி
மருமகளின் தலையை துண்டித்து வெட்டி, சரணடைந்த மாமியார் வாக்குமூலம் தந்துள்ளார்
ஹைதராபாத்: மருமகள் தலையை வெட்டி கையில் எடுத்துக்கொண்டு, போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்த மாமியார் கைதாகி உள்ளார்.. இந்த சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ள நிலையில், என்ன நடந்தது என்ற பின்னணி தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆந்திரப் பிரதேச மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் கொத்தப்பேட்டை ராமாபுரம் என்ற பகுதி உள்ளது.. இங்கு வசித்து வந்தவர் சுப்பம்மா.
இவருடைய மருமகள் பெயர் வசுந்தரா.. அவருக்கு 35 வயதாகிறது.. மாமியார் - மருமகளுக்கும் அடிக்கடி குடும்ப சண்டை வந்து கொண்டே இருக்குமாம்.

தலை - மருமகள்
அப்படித்தான் நேற்றும் தகராறு வெடித்துள்ளது.. அப்போது ஆத்திரம் அடைந்த மாமியார் மருமகள் வசுந்தராவை அரிவாளால் குத்தி கொன்றார்.. பிறகு, அவரது தலையை தனியாக வெட்டி எடுத்துக் கொண்டு, வீட்டை விட்டு வெளியே வந்தார்.. நடுரோட்டில் கூலாக, ஒருகையில் மருமகள் தலையை எடுத்துக் கொண்டே வேக வேகமாக நடந்து சென்றார்.. கையில் ரத்தம் வழிந்தபடி தலையை பார்த்ததும், பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் அலறி அடித்து கொண்டு ஓடினார்கள்.. ஆனால், மாமியார், நேராக தலையுடன் போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்து சரணடைந்தார்..

ரத்தம்
குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகியிருந்தது.. சொத்து பிரச்சனை இருந்து வந்துள்ளது.. ஒருவேளை தங்கள் குடும்பத்தின் சொத்தை வேறு யாருக்காவது மருமகள் எழுதிவைத்து விடுவாரோ என்று மாமியார் பயந்துள்ளார்.. அதனால், வசுந்தராவை தீர்த்துக்கட்ட சுப்பம்மா முடிவு செய்து, மதிய சாப்பாட்டுக்கு வருமாறு அழைத்துள்ளனர். வசுந்தராவும், விருந்து சாப்பிட வந்தபோது, அவரை அரிவாளால் வெட்டி கொன்று, தலையையும் துண்டித்துள்ளார்.

வாக்குமூலம்
போலீசில் சரணடைந்த மாமியாரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவர் தந்த வாக்குமூலத்தில் பல்வேறு தகவல்கள் மட்டுமல்லாமல் வேற விதமான தகவல்களையும் சொல்லி உள்ளாராம்.. சுப்பம்மாளின் மகன் ராஜா... இவரது மனைவிதான் கொலை செய்யப்பட்டவர். அவர் பெயர் வசுந்தரா.. 30 வயதாகிறது. 10 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி உள்ளது.. இந்த தம்பதிக்கு 9 மற்றும் 6 வயதில் 2 பெண் குழந்தைகள் இருக்கிறர்கள்..

கள்ளக்காதல்
ராஜாவுக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதால், சில வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டார்.. இதனால், வசுந்தரா அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் டீச்சராக வேலை பார்த்து வந்திருக்கிறார்.. தினமும் ஸ்கூலுக்கு போகும்போதும், வரும்போது, வசுந்தராவுக்கு வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது... இதனால், குழந்தைகளையும் சரியாக கவனிக்காமல் இருந்துள்ளார்.. எந்நேரமும் ஆண் நண்பருடன் ஊர் சுற்றி வந்துள்ளார்... குழந்தைகளையும், வீட்டையும் கவனிக்காமல் ஊர் சுற்றுவதை அறிந்த சுப்பம்மாள், அவரை கண்காணித்துள்ளார்.. அப்போதுதான், கள்ளக்காதல் விவகாரம் தெரியவந்துள்ளது.

மாமியார்
இதனால், மாமியார் சுப்பம்மா, வசுந்தராவை எச்சரித்திருக்கிறார்.. ஆனால், அதை வசுந்தரா காதிலேயே போட்டுக் கொள்ளாமல், தொடர்ந்து கள்ளக்காதலுடன் ஊர்சுற்றி வந்துள்ளார்.. மேலும் தன்னுடைய கள்ளக்காதலை கண்டித்தால், கொலை செய்து விடுவேன் என்று மாமியாரையும் திரட்டியிருக்கிறார்.. இந்நிலையில்தான், நேற்று மதியம் ஸ்கூலில் இருந்து வீட்டிற்கு வந்த வசுந்தராவுக்கும் அவரது மாமியாருக்கும் இடையே மறுபடியும் தகராறு வந்துள்ளது.

பிளான் - சந்திரபாபு
அதனால், ஆத்திரம் அடைந்த சுப்பம்மா தனது தம்பி சந்திரபாபுடன் சேர்ந்து வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து வசுந்தராவை வெட்டி கொலை செய்துள்ளார்.. அப்போது ஆத்திரம் தீராத மாமியார், மருமகளின் தலையை தனியாக வெட்டி எடுத்துவிட்டார்.. வசுந்தராவின் துண்டித்த தலையை ஒரு கையிலும், கத்தியை இன்னொரு கையிலும் பிடித்தபடி 6 கிலோமீட்டர் தூரத்திற்கு ஆவேசமாக நடந்து வந்து, ராய் சோட்டி போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்துள்ளார்.

ஆவேசம்
பெண் ஒருவர் இப்படி ரத்தம் சொட்ட சொட்ட துண்டித்த தலையை கையில் பிடித்தபடி செல்வதை கண்ட பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர்... போலீஸ் ஸ்டேஷனுக்குள் அதற்கு மேல் அலறினார்கள்.. பிறகு சுப்பம்மாவிடம் விசாரணை நடத்தியபோதுதான் அனைத்து உண்மைகளையும் சொல்லி உள்ளார்.. "மருமகள் கள்ளக்காதலனுடன் சேர்ந்து ஊர் சுற்றி கொண்டு இருந்தாள்.. குழந்தைகளை கவனிப்பதே இல்லை. கள்ளக்காதலை கைவிடுமாறு பலமுறை சொன்னேன்.. ஆனால், என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டினாள்..

வாக்குமூலம்
எனக்கு ஆத்திரம் அதிகமானது.. அதனால், ஏற்கனவே கொலை செய்ய நினைத்தேன்.. மருமகளை கொலை செய்து விட்டால் குழந்தைகள் அனாதையாகிவிடுமே என்று நினைத்துதான் இவ்வளவு நாள் பொறுமை காத்து வந்தேன்... இனியும் அவளை உயிருடன் விட்டு வைத்தால் கள்ளக்காதலனுடன் சேர்ந்து என்னை கொலை செய்து விடுவாள்.. அதனால்தான், அவளை நான் முந்திக்கொண்டு கொலை செய்துவிட்டேன்" என்று கூறியுள்ளார் சுப்பம்மா. இதையடுத்து சுப்பம்மாவின் தம்பி சந்திரபாபுவையும் போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications