மேடம், கிட்ட போகாதீங்க.. இடுப்பளவு நீரில், கையில் பயிரை எடுத்து.. யார்னு பாருங்க? நாயுடுக்கு தலைவலி
ஹைதராபாத்: ஆந்திராவில் விவசாயிகளின் பிரச்சனைக்கு விரைவில் விடிவு ஏற்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு வருகிறது.. அத்துடன், ஒய்.எஸ். ஷர்மிளாவின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. என்ன காரணம்?
கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆந்திர முதல்வரானார் ஜெகன்.. அதற்கு பிறகு ஜெகன் மற்றும் அவரது சகோதரி ஷர்மிளா இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. இதனால், ஷர்மிளா தன்னுடைய அம்மா விஜயலட்சுமியுடன் ஹைதராபாத்தில் குடியேறி, ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சியை தொடங்கினார்.

புது கட்சி: எனினும், சமீபத்தில் நடந்த தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில், ஷர்மிளா கட்சி, போட்டியிடாமல் காங்கிரஸுக்கு ஆதரவு கொடுத்தது. பிறகு ஷர்மிளா தன்னுடைய ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சியை கலைத்து விட்டு, அதன் நிர்வாகிகளுடன் காங்கிரஸில் இணைந்தார்.
இதனை தொடர்ந்து, ஆந்திராவில் காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் கொடுப்பதற்காகவே, ஷர்மிளாவுக்கு தலைமை பதவியை வழங்கியது.
கேள்விகள்: ஷர்மிளா கட்சியின் தலைவராகியதால், இனி அடுத்தடுத்து நடக்கப் போகும் தேர்தல்களில் அண்ணன், தங்கை இடையே போட்டி ஏற்படும் சூழல் உருவாகும் என்றே கணிக்கப்பட்டது.. ஆனால் ஜெகன் மட்டுமல்ல, சந்திரபாபு நாயுடுவையும் சேர்த்தே சரமாரியாக விமர்சித்து கேள்வி எழுப்பி வருகிறார் ஷர்மிளா..

"நாட்டிலேயே தலைநகரம் இல்லாத மாநிலமாக ஆந்திரா உள்ளது. வாஷிங்டன் மாதிரி சிறந்த தலைநகரை உருவாக்குவதாக முதல்வர் ஜெகன் வாக்குறுதி தந்தாரே? அது என்னாச்சு?
கேள்விகள்: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் பல தொழிற்சாலைகள் காணாமல் போனது. ஆந்திராவில் வளர்ச்சி ஸ்தம்பித்து விட்டது. தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டதால், வேலை இல்லா திண்டாட்டம் தலைதூக்கிவிட்டது" என்றெல்லாம் குற்றச்சாட்டை முன்வைத்ததுமே ஒட்டுமொத்த அரசியல் களமும் அனலடித்தது.
இப்படிப்பட்ட நிலையில், மீண்டும் ஆந்திர அரசியலை விமர்சித்திருக்கிறார் ஷர்மிளா.
பயிர்கள்: ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் தாடேப்பள்ளி குடேம் நந்தமுரு கிராமத்தில், கடந்த சில நாட்களாகவே கடுமையான மழை பெய்து வருகிறது.. அத்துடன், கோதாவரியில் வெள்ளம் வந்துவிட்டதால், விவசாய நெற்பயிர்கள் எல்லாமே வெள்ளத்தால் மூழ்கிவிட்டன..

தங்கள் கண்ணெதிரே விவசாய பயிர்கள் நீரில் மூழ்குவதை கண்டு, விவசாயிகள் கதறி அழுதனர்.. இந்த விவசாய பயிர்களை ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா கட்சியினருடன் நேரில் சென்று பார்வையிட்டார்.. வெள்ளப்பாதிப்பு விவரங்களை விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.
அதிர்ச்சி: அப்போதுதான், விவசாய நெற்பயிர்கள் மொத்தமும் நீரில் மூழ்கி, பெரிய குளம் போல இருப்பதை பார்த்தது ஷர்மிளா அதிர்ந்து போனார்.. பிறகு, அவைகளை அருகில் சென்று பார்வையிடுவதற்காக ஷர்மிளா, விவசாய நிலத்தில் இறங்க போனார் .
ஆனால், அங்கிருந்த கட்சியினரோ, வேண்டாம் எனக்கூறி தடுத்தார்கள்.. எனினும், ஷர்மிளா, வெள்ள நீர் சூழ்ந்த விவசாய பயிர்களுக்குள் இறங்கினார் . இடுப்பளவு நீரில் ஷர்மிளா நின்றுகொண்டு, மிதந்து கிடந்த நெற்பயிர்களை கையில் ஏந்தி போராட்டம் செய்தார். இதைப் பார்த்ததுமே விவசாயிகளும் வெள்ள நீரில் இறங்கி போராட்டம் செய்தனர்.. இதனால் அங்கு பரபரப்பு பெரும் ஏற்பட்டது.
வேண்டுகோள்: அப்போது ஷர்மிளா செய்தியாளர்களிடம் சொல்லும்போது, விவசாயிகள் கடுமையாக இங்கு பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.. இப்படியே நிலைமை நீடித்தால், யாருமே விவசாயம் செய்ய முடியாது. அரசு உடனடியாக விவசாயிகளுக்கு உதவ வேண்டும். இந்த தொகுதியில் மட்டும் 40 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.
விவசாயிகள் இதுபோன்ற கஷ்டத்தில் இருந்தாலும் அரசு கண்டுகொள்ளவில்லை. தெலங்கானாவில் விவசாய கடன்களை ரேவந்த் ரெட்டி அரசு தள்ளுபடி செய்தது. அதேபோன்று சந்திரபாபு நாயுடு அரசும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்" என்றார்.
ஆவேசம்: இடுப்பளவு வெள்ள நீரில் இறங்கி, கையில் நெற்பயிருடன் ஆவேசமாக காட்சியளிக்கும் ஷர்மிளாவின் இந்த போராட்ட வீடியோ தான் ஆந்திர அரசியலின் கவனத்தை திரும்பி பார்க்க வைத்து வருகிறது.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications