Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரண்ட ஆந்திரா.. 10ம் வகுப்பு மாணவன் செய்த காரியம்.. பதறியடித்துக்கொண்டு ஓடிய ஆசிரியர்.. அந்த ஹைலைட்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஆந்திராவில் ஒரு விநோத சம்பவம் நடந்துள்ளது.. இதுதான் சோஷியல் மீடியாவில் 2 நாட்களாகவே வட்டமடித்து கொண்டிருக்கிறது.

கடந்த வருடம் நம்முடைய தமிழகத்தில் ஒரு பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.. அதாவது, பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்துதல் பணியின்போது, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தனியார் பள்ளி ஆசிரியர்கள் மதிப்பெண்களை குறைத்து வழங்குகிறார்கள் என்று அரசுப் பள்ளி ஆசிரியர்கள் புகார் கூறியிருந்தனர்.

Do you know what did 10th std School Student write in Public Exam Answer Paper what happened in Andhra Pradesh

அரசுப்பள்ளி: அரசுப்பள்ளி மாணவர்களின் விடைத்தாள் தமிழிலும், தனியார் பள்ளி மாணவர்களின் விடைத்தாள்கள் ஆங்கிலத்திலும் இருக்கும் என்பதால், இதைவைத்து விடைத்தாள்களை அடையாளம் கண்டு, அரசுப் பள்ளி மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் தனியார் பள்ளி ஆசிரியர்கள், குறைத்து மார்க் தந்து, பாரபட்சம் காட்டுகிறார்கள் என்று கூறியிருந்தனர்.

ஆனால், இந்த குற்றச்சாட்டை தனியார் பள்ளி ஆசிரியர்களும், தேர்வுத்துறை அதிகாரிகளும் மறுத்திருந்தனர். "பொதுவாக தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்துதல் முறை சற்று கண்டிப்புடனே இருக்கும்... சரியான பதில்கள் இருந்தால் மட்டுமே முழுமதிப்பெண் வழங்குவர். திட்டமிட்டு மதிப்பெண்களை குறைத்து வழங்க முடியாது.

விளக்கம்: எனினும், அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்கள், ஒரு மாணவர் 33 மதிப்பெண் பெற்றிருந்தால் கூட, கீ வேர்டு விடைகளுக்கு முழு மதிப்பெண் அளித்து, அவர்களை தேர்ச்சி பெற வைப்பார்கள்.. ஆனால் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அதுபோல் செய்வதில்லை" என்று விளக்கம் தந்திருந்தார்.

மாணவர்களுக்கு மார்க் வழங்குவது தொடர்பாக இப்படியெல்லாம் விவாதங்கள் சீரியஸாக எழுந்துவரும்நிலையில், திடீரென ஒரு மாணவன் ஆசிரியருக்கு மிரட்டல் விடுத்திருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது.

ஆந்திரா: ஆந்திர மாநிலத்தில், கடந்த மார்ச் மாதம் 10ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடந்து முடிந்தது. இதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணிகளும் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன..

அந்தவகையில், ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டத்தில் பாபட்லா மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் மாணவர்கள் எழுதிய தேர்வுத்தாள்கள் திருத்தப்பட்டது. அப்போது மாணவன் ஒருவனின், பேப்பரை ஆசிரியர் திருத்த முயன்றுள்ளார்..

தெலுங்கு தேர்வில், ராமாயணம் பற்றி எழுதுமாறு கேள்வி கேட்கப்பட்டிருந்தது.. ஆனால், அந்த மாணவனுக்கு விடை தெரியவில்லை போலும்.. அதற்கு பதிலாக, "என்னுடைய விடைத்தாளை திருத்தும் ஆசிரியருக்கு ஒன்று சொல்லி கொள்கிறேன், எனக்கு அதிகமாக மார்க் போட வேண்டும்... இல்லாவிட்டால் என்னுடைய தாத்தாவிடம் சொல்லி, மாந்திரிக பூஜை செய்து, உங்களுக்கு சூனியம் வைத்துவிடுவேன்" என்று எழுதி இருந்தான். இதை பார்த்த ஆசிரியர் அதிர்ச்சியடைந்தார்.

விடைத்தாள்: உடனே அந்த, அந்த பேப்ரை எடுத்துக்காண்டு மேலதிகாரிகளிடம் ஓடினார்.. மாணவனின் விடைத்தாளை அவர்களிடம் ஒப்படைத்தார்.. அதை படித்துப்பார்த்த ஆபீசர்களும் அதிர்ந்து போய்விட்டார்களாம்.. இந்த தகவல்தான் 2 நாட்களாகவே ஆந்திராவில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இதில் ஹைலைட் என்னவென்றால், அந்த மாணவனின் முழு பேப்பரையும் ஆசிரியர் திருத்திவிட்டார்.. 100க்கு 70 மார்க் எடுத்திருக்கிறாராம் அந்த மாணவன்...!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+