படுக்கையறை விருந்தாளி.. யாரந்த பிரபல நடிகை? குளிக்க போறதா சொல்லி, அசிங்கமா சிக்கி.. இதெல்லாம் தேவையா
ஹைதராபாத்: பழகிய வீட்டிற்கே பச்சை துரோகம் செய்திருக்கிறார் இந்த நடிகை... மிகப்பெரிய செலிபிரிட்டியாக இருந்துக்கொண்டு, இவ்வளவு கேலவமான வேலையை செய்துவிட்டாரே என்று இந்த நடிகையின் ரசிகர்களே நொந்துபோய் உள்ளார்கள்.
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் தொண்டபர்த்தி பகுதியில் வசித்து வருபவர் பிரசாத் பாபு.. இவர் ஓய்வு பெற்ற அதிகாரி ஆவார்.. தன்னுடைய குடும்பத்தினருடன் இந்த பகுதியிலிருக்கும் அப்பார்ட்மென்ட் ஒன்றில் வசித்து வருகிறார்.

நகைகள்: இந்நிலையில், கடந்த மாதம் 23ம் தேதி இவர் வீட்டில் திருடு போயுள்ளது.. பீரோவில் வைத்திருந்த 1 கிலோ 750 கிராம் எடையுள்ள தங்க நகைகள் மாயமாகியிருந்தது.. இதனால், அதிர்ச்சியடைந்த பிரசாத் பாபு, உடனடியாக போலீசில் புகார் தந்தார்..
போலீசாரும், இந்த புகாரின்பேரில் விசாரணையை துவங்கினார்கள்.. நேரடியாகவே பிரசாத்பாபு வீட்டிற்கு வந்து, சோதனை மேற்கொண்டனர்.. மேலும், பீரோவில் பதிவாகியிருந்த கைரேகைகளையும் சேகரித்தனர்.
அப்பார்ட்மென்ட்: அதற்கு பிறகு, அந்த அப்பார்ட்மென்ட் வெளியே பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர்... மேலும் அந்த வீட்டிற்கு யாரெல்லாம் வந்தார்கள் என்ற லிஸ்ட்டும் எடுக்கப்பட்டது.
அப்போது மொத்தம் 11 பேர் மீது போலீசுக்கு வந்தேகம் எழுந்தது.. எனவே, அந்த 11 பேரையும் விசாரிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.. அந்த 11 பேரில் 3 பேர் மீது கூடுதல் சந்தேகம் வந்தது.
தோழி நடிகை: அதில் ஒருவர்தான் நடிகை சௌமியா ஷெட்டி.. இவர் கோபாலப்பட்டினத்தை சேர்ந்தவர்.. இன்ஸ்டா பிரபலமாக திகழ்பவர்கள்.. ஏகப்பட்ட இன்ஸ்டா வீடியோக்களை பதிவிட்டு, அதன்மூலம் லட்சக்கணக்கான ரசிகர்கள் பெற்றவர்.. இந்த புகழை வைத்து, 2 சினிமாவில் நடிக்கவும் செய்துவிட்டார்.

இப்படிப்பட்ட சூழலில்தான், பிரசாத்தின் மகள் மௌனிகாவுடன் சௌமியாவுக்கு நட்பு ஏற்பட்டது.. கிட்டத்தட்ட 8 வருடங்களாகவே இவர்கள் நெருங்கி பழகி வருகிறார்கள்.. தோழி என்ற உரிமையில், அடிக்கடி மெளனிகாவின் வீட்டிற்கு சென்று வருவார் சௌமியா.
படுக்கையறை: அதாவது, மெளனிகா வீட்டிலிருக்கும் பெட்ரூமிற்கே நேராக செல்வாராம். கிச்சனுக்குள் நுழைந்து சமைப்பாராம். சிலசமயம் மெளனிகா வீட்டிலேயே குளித்து, தூங்கி தங்கியும் வந்துள்ளார். அந்தவகையில், அவர்கள் வீட்டிலிருக்கும் எல்லா ரூம்களையும் பயன்படுத்தி வந்துள்ளார்.
மெளனிகா வீட்டில், பெட்ரூமிலேயே பாத்ரூம் அட்டாச் செய்யப்பட்டுள்ளதால், பெட்ரூம் கதவை உள்பக்கமாக தாழிட்டுக் கொண்டுதான் குளிக்க செல்வாராம் சௌமியா.
படுக்கையறை கதவுகள்: எப்போதெல்லாம் குளிப்பதற்காக படுக்கறை கதவுகளை மூடிகொள்கிறாரோ, அப்போதெல்லாம் பல மணிநேரம் கதவை திறக்க மாட்டாராம்.. உள் பக்கமாக நீண்ட நேரம் பூட்டிக் கொள்வாராம்.. இந்த பெட்ரூமில்தான் பீரோக்கள் இருந்துள்ளன.. பீரோக்களில் லாக்கர்களும் இருந்துள்ளன.. எனவே, வீட்டிற்குள் நகைகள் எங்கே இருக்கின்றன? பீரோவில் என்னென்ன பொருட்கள் உள்ளன? என்ற மொத்த விவரங்களம் இவருக்கு அத்துப்படியாக இருந்திருக்கிறது.
இப்படித்தான், ஜனவரி 29ம் தேதியும், பிப்ரவரி 19ம் தேதியும் மெளனிகா வீட்டிற்கு வந்துள்ளார் செளமியா.. 2 நாட்களிலுமே, பீரோவை திறந்து நகைகளை திருடி கொண்டுபோயுள்ளார்.. கிட்டத்தட்ட 1 கிலோ நகைகளை திருடியிருக்கிறார் சௌமியா.
கடந்த 23ம் தேதி, சொந்தக்காரர் ஒருவரின் கல்யாணத்துக்கு மௌனிகாவின் குடும்பத்தினர் செல்ல வேண்டியிருந்தது. அதனால், நகை எடுப்பதற்காக பீரோவை திறந்தபோதுதான், லாக்கருக்குள் நகைகளை இல்லாமல் இருப்பதை கண்டு திடுக்கிட்டனர்.. போலீசுக்கும் ஓடினார்கள்.
விசாரணை: இவ்வளவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளதைடுத்து, கோவாவில் இருந்த சௌமியாவை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.. தற்சமயம், நடிகையிடம் 74 கிராம் தங்கம் மட்டுமே இருந்துள்ளது. மிச்ச நகைகளை அவர் எங்கு வைத்திருக்கிறார்? என்ன செய்தார் என்று தெரியவில்லை. கையிலுள்ள நகைகளை போலீசார் பறிமுதல் செய்து, மற்ற நகைகளையும் மீட்க முயன்று வருகிறார்கள்..
ஆனால், இவ்வளவு பெரிய தவறை செய்துவிட்டு, போலீஸையே மிரட்டுகிறாராம் நடிகை சௌமியா.. நகைகள் குறித்து வலுக்கட்டாயமாக கேட்டால், தற்கொலை செய்து கொள்வேன் என்றும் மிரட்டுகிறாராம்.. இப்போதைக்கு சௌமியா ஜெயிலில் உள்ளார்.. இனிமேல்தான் அவரிடம் விசாரணை நடக்க போகிறது..
விசாரணை: இளம்பெண், அதுவும் பிரபலமான பெண், அதுவும் லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்ற பெண், சினிமா சான்சு அடுத்தடுத்து கிடைத்துள்ள நிலையில், இப்படி திருட்டு கேஸில், உள்ளே போயிருப்பது பரபரப்பை தந்து வருகிறது.
தகுதிக்கு மீறிய "ஆசைகள்" எதுவானாலும் ஆபத்தில்தான் முடியும் என்பதில் சந்தேகமில்லை.. அதுமட்டுமல்ல, உழைக்காமல் பெறும் எதுவுமே, இங்கே நிலைத்து நின்றதாக சரித்திரமும் இல்லை.. ஒரு படித்த பெண்ணுக்கு இதுகூட எப்படி தெரியாமல் போய்விட்டது என்பதுதான் ஆச்சரியமாக உள்ளது!!












Click it and Unblock the Notifications