ஒரு பிரபல நடிகர் அசிங்கமா சிக்கிட்டாரு.. இப்படி எங்காச்சும் நடக்குமா? தெரு தெருவா "மொட்டை தலை" மனைவி
ஹைதராபாத்: ஒரு நடிகரை போலீஸார் வலைவீசி தேடிக் கொண்டிருக்கிறார்கள்.. அப்படி என்ன செய்தார் தெரியுமா அந்த நடிகர்?
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ளது பெடகொண்டேபுடி கிராமத்தை சேர்ந்தவர் அபிராம் என்கிற ராம்பாபு.. 33 வயதாகிறது.. இவர் தெலுங்கு சினிமாவில் நடிகராக உள்ளார்.. நிறைய கேரக்டர்களில் துணை நடிகராகவும், முக்கிய நடிகராகவும் நடித்து வருகிறார்..

ஆஷா: இவரது மனைவி பெயர் ஆஷா.. 26 வயதாகிறது.. ஆஷாவும் சினிமா துறையை சேர்ந்தவர்தான்.. தன்னுடன் பணியாற்றும்போது, ஆஷாவை காதலித்து கல்யாணம் செய்து கொண்டுள்ளார் அபிராம்.. நெல்லூரை சேர்ந்தவராம் ஆஷா.
இப்போது இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை ஒன்று உள்ளது.. தற்சமயம், ஹைதராபாத்தில் இருவரும் வசித்து வருகிறார்கள். இந்நிலையில், திடீரென ராம்பாபுவுக்கு ஆஷாவை பிடிக்காமல் போய்விட்டது. அதனால், தேவையில்லாமல் ஆஷா மீது எரிந்து எரிந்து விழுந்தார்.. வம்பிழுத்து தகராறு செய்தார்.. ஒருகட்டத்தில், 2வது கல்யாணம் செய்து கொள்ள போவதாகவும் அதிரடியாக சொன்னார் ராம்பாபு.
நடிகர் ராம்பாபு: இதைக்கேட்டு ஆஷா அதிர்ந்து போனார்.. தன்மீதான கோபத்தில் ராம்பாபு இப்படி சொல்வதாக நினைத்தார்.. ஆனால், ராம்பாபு நிஜமாகவே 2வது கல்யாணம் செய்து கொள்ள போவதாகவும, அதற்கு உடனே சம்மதம் தெரிவிக்க வேண்டும் என்றும் ஆஷாவை கட்டாயப்படுத்தி உள்ளார். இதைக்கேட்டு ஆத்திரமடைந்த ஆஷா, கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனாலும், ராம்பாபு, ஆஷாவை கொடூரமாக அடித்து கொடுமைப்படுத்தியிருக்கிறார்.
நாளுக்கு நாள் ராம்பாபு தொல்லை அதிகமாகவும், இதுகுறித்து புகார் சொல்ல ஹைதராபாத் போலீசுக்கு சென்றார் ஆஷா.. நடந்த சம்பவத்தையெல்லாம் புகாராக எழுதி தந்தார்.. இந்த புகாரின்பேரில் போலீசாரும், ராம்பாபு மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்..
வாபஸ் கேஸ்: விஷயத்தை கேள்விப்பட்ட ராம்பாபுவின் பெற்றோர், மருமகள் ஆஷாவை சமாதானம் செய்தார்கள்.. தன் மகன் மீதான வழக்கை திரும்ப வாபஸ் பெறும்படி சொன்னார்கள்.. பிறகு தம்பதி 2 பேரையும் பெடகொண்டேபுடிக்கு கிராமத்திற்கு அழைத்து வந்தார்கள். ராம்பாபு ஒரு அதிகாரியிடம் கார் டிரைவராக வேலைக்கு சேர்த்து விட்டார்கள்.
இந்த பிரச்சனை கொஞ்ச நாள் ஓய்ந்திருந்த நிலையில், மறுபடியும் ராம்பாபு ஆஷாவை கொடுமைபடுத்த துவங்கினார்.. மறுபடியும் ஆஷா, போலீசில் புகார் தந்தார்.. மறுபடியும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இறுதியில் ஆஷா, ராம்பாபுவை பிரிந்து, குழந்தையையும் தூக்கி கொண்டு, ஹைதராபாத்துக்கே வந்துவிட்டார்.
2வது திருமணம்: இதுதான் சாக்கு என்று முடிவுசெய்த ராம்பாபு, 2வது கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்தார்.. கல்யாண வேலைகளை இழுத்து போட்டுக் கொண்டு செய்தார்.. இதை கேள்விப்பட்ட ஆஷா, ராம்பாபுவிடம் சென்று, "சட்டப்படி விவகாரத்துக்கு செய்யுங்கள்.. முறைப்படி டைவர்ஸ் செய்துவிட்டு, கல்யாணம் செய்து கொள்ளுங்கள்.. நான் கொடுத்த பணம், என் மகனுக்கான இழப்பீடு தொகை என மொத்தத்தையும் தந்துவிட்டு கிளம்புங்கள்" என்று கேட்டுள்ளார்.
உடனே ராம்பாபு, இழப்பீடு தருகிறேன். ஆனால் போலீசில் தந்த புகாரை வாபஸ் பெற வேண்டும் என்று கண்டிஷன் போட்டுள்ளார்.. ஆனால், இதற்கு ஆஷா மறுப்பு தெரிவித்ததால், தம்பதி இடையே கடுமையான தகராறு ஏற்பட்டது. ஒருகட்டத்தில் ஆவேசம் அடைந்த ராம்பாபு, ஆஷாவை வீட்டிற்குள் தரதரவென இழுத்து சென்றார்.. ஆஷாவுக்கு முழு மொட்டை அடித்தார்.. கொலை மிரட்டலையும் விடுத்து, மொட்டை அடித்த கோலத்துடன், தெரு, தெருவாக ஆஷாவை இழுத்து சென்றார்.
புகார்கள்: இதையெல்லாம் பார்த்து கொந்தளித்து போன அந்த பகுதி மக்களே, நேரடியாக போலீசுக்கு போய்விட்டார்கள்.. பொதுமக்கள் சார்பில் ராம்பாபு மீது புகார் தரப்பட்டது..
இதற்கு பிறகு, விரைந்து வந்த போலீசார், உடம்பெல்லாம் அடிபட்டு ரத்த காயத்தில் கிடந்த ஆஷாவை மீட்டு ராஜமுந்திரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. அங்கு ஆஷாவுக்கு சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது.. இதுகுறித்து போலீசாரும் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.. ஆனால், நடிகர் ராம்பாபு எஸ்கேப்...!!!
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications