கொள்ளிக்கட்டையோடு வந்துட்ட ஆபீசர்.. போலீஸின் சக்ஸஸ் "ஆபரேஷன்".. இது விறகுக்கட்டை அதிரடி.. இனி ஹேப்பி
ஹைதராபாத்: இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி கொண்டிருக்கிறது.. கொள்ளிக்கட்டையுடன் நிற்கும் இந்த பெண் அதிகாரிக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து கொண்டிருக்கிறார்கள்.
தெலங்கானா மாநிலத்தில் நாளுக்கு நாள், கஞ்சா நடமாட்டம் பெருகி வருகிறது.. எனவே, கஞ்சாவுக்கு எதிரான ஆபரேஷன்களை போலீசார் கையில் எடுத்துள்ளனர்.. அதன்படி, கடத்தப்படும் கஞ்சாக்களை பறிமுதல் செய்து , அவைகளை அழித்து வருகிறார்கள்.

அந்தவகையில், கடந்த மாதம், தெலுங்கானாவின் பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டத்தில், 11,545 கிலோ கஞ்சாக்கள் கைப்பற்றப்பட்டன. அதன் மொத்த மதிப்பு 28 கோடி ரூபாயாகும்.. இதற்கு பிறகு, கோர்ட் அனுமதியுடன், ஹேமச்சந்திரபுரம் கிராமத்தை ஒட்டியிருக்கும் காட்டுப்பகுதியில், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாக்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன..
தயவு தாட்சண்யம்: அதேபோல, கஞ்சா கடத்தலில் ஈடுபடுபவர்களையும் தயவுதாட்சண்ய பார்க்காமல் கைது செய்து வருகிறார்கள்.. இப்படித்தான் 2 நாளைக்கு முன்புகூட நீது பாய் என்ற தாதா பெண்ணை தெலுங்கானா போலீசார் கைது செய்திருந்தனர்.. கஞ்சா ராணி என்று இவரை எல்லாரும் சொல்வார்கள்..
சாப்ட்வேர் என்ஜினியர்கள் , உள்ளூர் இளைஞர்கள் முதல் அரசியல் பிரமுகர்கள் வரை நீதுபாய், கஞ்சா விற்பனையை செய்து வந்திருக்கிறார்.. அரசியல் பிரமுகர்களிடம் நெருங்கி பழகி வருவதால், கஞ்சா கடத்தலை ஜரூராக இந்த பெண் செய்து வந்துள்ளார்.. இதனால், ஒரு நாளைக்கு ரூ.20 லட்சம் வரை வருமானம் பார்த்துவிடுவாராம் நீது பாய்..
வங்கிகள்: அதுமட்டுமல்ல, மொத்தம் 16 வங்கிகளில், 1.53 கோடி ரூபாய், தன்னுடைய பெயரில் டெபாசிட் செய்து வைத்திருக்கிறார். எத்தனையோ முறை கைது செய்யப்பட்டும் நீது பாய் வெளியே வந்துவிடுகிறாராம். இப்போது மீண்டும் ஜெயிலுக்கு சென்றிருக்கிறார்.
ஆனாலும், மாநில போலீசார் கஞ்சாவுக்கு எதிரான ஆபரேஷனில் அதிரடியை விடவேயில்லை.. நேற்றைய தினம், நல்கொண்டா மாவட்டத்தில் அதிரடி ரெய்களை நடத்தி, 2,043 கிலோ கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.. இதன் மதிப்பு சுமார் ரூ.5 கோடி என்கிறார்கள்.
Nalgonda SP Chandana Deepthi sets 2 tonnes of Ganja on fire.
— Sudhakar Udumula (@sudhakarudumula) April 26, 2024
5 crore worth of ganja, weighing 2043 kg seized in 39 NDPS cases in Nalgonda, was burned in the presence of the Drug Destruction Committee.#Telangana #Nalgonda pic.twitter.com/AxKKRx5YBg
வீடியோ: இதையடுத்து, கைப்பற்றப்பட்ட இந்த கஞ்சா பொருட்கள் அங்கிருந்த காட்டுப்பகுதியில் எரிக்கப்பட்டன... இந்த கஞ்சாக்களை அழித்து ஐடிக்கவே ஒருநாள் முழுவதும் ஆயிற்றாம்.. நல்கொண்டா போலீஸ் பெண் எஸ்.பி. சந்தா தீப்தி, இந்த கஞ்சாக்களுக்கு தீ வைத்தார். குபுகுபுவென எரியும் விறகுக்கட்டையுடன், கஞ்சாவுக்கு தீப்தி நெருப்பு வைக்கும் இந்த வீடியோதான் இணையத்தில் பரவி வருகிறது.
மூட்டை மூட்டையாக பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை போலீசார் கைப்பற்றுவதைம், அதை எரிப்பதையும் பார்த்து தெலுங்கானா மக்கள் அதிர்ந்து போயிருக்கிறார்களாம்.












Click it and Unblock the Notifications