ரியல் எஸ்டேட் மோசடி: நடிகர் மகேஷ் பாபுவுக்கு சம்மன்; நாளை நுகர்வோர் மன்றத்தில் ஆஜராக உத்தரவு
ஹைதராபாத்: ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் நிதி மோசடி விவகாரத்தில், நடிகர் மகேஷ் பாபுவுக்கு ₹3.4 கோடி வழங்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அவர் நாளைக்குள் நுகர்வோர் மன்றத்தில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு சினிமாவின் முன்னணி நட்சத்திரமான மகேஷ் பாபு, 'சொர்ணா குரூப்ஸ்' மற்றும் 'சாய் சூர்யா டெவலப்பர்ஸ்' ஆகிய இரு ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பரத் தூதராக இருந்து வருகிறார். இந்த இரு நிறுவனங்களும் ஒரே இடத்தை பலருக்கு விற்று மோசடியில் ஈடுபட்டது அண்மையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, இந்த இரு நிறுவனங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அப்போதுதான் மகேஷ் பாபு விளம்பரத் தூதராக இருப்பது தெரியவந்தது.

மோசடி மற்றும் நிதிப் பரிமாற்ற விவரங்கள்
ஹைதராபாத்தில் உள்ள இந்த இரு நிறுவனங்களும் அனுமதியே பெறப்படாத வீடுகளை விற்றது, ஒரே பிளாட்டை பலருக்கு விற்றது, போலியான பத்திரப் பதிவு வாக்குறுதிகளைக் கொடுத்தது எனப் பல மோசடிகளில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. இதனால், இந்த நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அமலாக்கத்துறை இதுகுறித்துத் தெரிவித்ததாவது: "மகேஷ் பாபு, இந்த இரு ரியல் எஸ்டேட் நிறுவனங்களிடம் இருந்து ₹5.9 கோடி பெற்றுள்ளார். அதில் ₹3.4 கோடி காசோலையாகவும், ₹2.5 கோடி ரொக்கமாகவும் அவருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பணம் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை மூலம் கிடைத்திருக்க வாய்ப்புள்ளது. இதனால், ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளர்கள் மீது சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்குத் தொடரப்பட்டுள்ளது."
அமலாக்கத்துறையின் விசாரணை மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கை
நடிகர் மகேஷ் பாபு இந்த மோசடியில் நேரடியாக ஈடுபடாவிட்டாலும், அவர் விளம்பரத் தூதராக இருந்தமைக்காக ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் இருந்து பெற்ற பணம் குறித்து அமலாக்கத்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இரு ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்களும், ரொக்கப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், ₹100 கோடி அளவுக்குக் கணக்கில் வராத பணம் குறித்த கேள்வியும் எழுந்துள்ளது. சட்டவிரோத பணப் பரிவர்த்தனை மூலம் சம்பாதித்த ரியல் எஸ்டேட் நிறுவனர்களின் சொத்துகளை முடக்க அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில், இந்த வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளது. நடிகர் மகேஷ் பாபு நாளைக்குள் நுகர்வோர் மன்றத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மகேஷ் பாபுவின் பொதுநலப் பணிகள்
இந்திய சினிமாவில் அதிக அளவில் ஊதியம் வாங்கும் நடிகர்களில் மகேஷ் பாபுவும் ஒருவர். அவர் 'மகேஷ் பாபு என்டர்டெயின்மென்ட்' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவின் இளைய மகனான மகேஷ் பாபு, 'மகேஷ் பாபு அறக்கட்டளை'யைத் தொடங்கி பலருக்கு நிதி உதவி செய்து வருகிறார். குறிப்பாக, குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய உதவி வருகிறார். இதற்காக ரெயின்போ மருத்துவமனை மற்றும் ஆந்திரா மருத்துவமனை ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுகிறார்.
மேலும், ஆந்திராவிலும் தெலங்கானாவிலும் தலா ஒரு கிராமத்தைத் தத்தெடுத்துள்ளார். அந்தக் கிராமங்களில் பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், நூலகங்கள், சாலைகள், வடிகால்கள், திறன் மேம்பாட்டுப் பயிற்சி உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி வருகிறார். கொரோனா காலத்தில் அந்தக் கிராமங்களில் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடவும் ஏற்பாடு செய்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications