2030 குண்டு குழிகள் சீரமைப்பு.. ரூ 40 லட்சம் சொந்த செலவில் அசத்தும் தம்பதி.. யார் இந்த சாலை டாக்டர்?
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த வயதான தம்பதி தங்கள் சொந்த செலவில் சாலைகளில் உள்ள குண்டு குழிகளை அடைத்து சாதனை படைத்து வருகிறார்கள். இதுவரை 2000-க்கும் மேற்பட்ட குழிகளை சீரமைத்துள்ளனர்.
ஹைதராபாத்தை சேர்ந்தவர் கங்காதர் திலக் கட்னம் (73). இவர் சாலை மருத்துவர் என அனைவராலும் அன்போடு அழைக்கப்படுகிறார். அவரது மனைவி வெங்கடேஷ்வரி கட்னம் (64).
இவர்கள் இருவரும் சேர்ந்து ஹைதராபாத் நகரில் 2000-க்கும் மேற்பட்ட குண்டு குழிகளை தங்கள் சொந்த செலவில் சரி செய்துள்ளனர்.

குண்டு குழிகளால் ஏற்படுகிறது
இதுகுறித்து கங்காதர் கூறுகையில் சாலைகளில் பல விபத்துகள் சாலைகளில் உள்ள குண்டு குழிகளால்தான் ஏற்படுகிறது என்பதை உணர்ந்தேன். இந்த விஷயத்திற்கு தீர்வு காண எதையாவது செய்ய வேண்டும் என முடிவு செய்தேன்.

மாநகராட்சி அதிகாரிகள்
ஆரம்பத்தில் இதுகுறித்து போலீஸாரிடமும் மாநகராட்சி அதிகாரிகளிடமும் புகார் தெரிவித்திருந்தேன். ஆனால் அவர்கள் யாரும் இதுகுறித்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து இனி யாரையும் எதிர்பார்க்காமல் குண்டு குழிகளை நானே சீரமைப்பது என முடிவு செய்தேன் என்றார்.

வெங்கடேஸ்வரி
இவருடன் மனைவி வெங்கடேஸ்வரியும் இணைந்து சாலைகளை சீரமைக்கிறார். இதுவரை இருவரும் சேர்ந்து 2000-க்கும் மேற்பட்ட சாலை பள்ளங்களை மூடியுள்ளனர். இதற்கான பணத்தை தங்கள் ஓய்வூதியத்திலிருந்து எடுத்து சாலை குழிகளை அடைக்க பொருட்களை வாங்குகிறார்கள். சுமார் 11 ஆண்டுகளாக இந்த பணியில் ஈடுபட்ட இவர்கள் இதுவரை தங்கள் சொந்த பணம் 40 லட்சம் செலவிட்டுள்ளார்கள்.

அரசு அதிகாரிகள்
இதையடுத்து இவரது பணிகளை பார்த்த அரசு அதிகாரிகள் இவர்களை பாராட்டி குண்டு குழிகளை அடைக்க தேவையான பொருட்களை தருகிறார்களாம். அது போல் ஏராளமான தொண்டு நிறுவனத்தினரும் இவர்களுக்கு உதவி வருகிறார்கள். இதை வைத்து இந்த சீரிய பணியை செய்து முடிக்கும் தம்பதியின் கடமையுணர்வை நாமும் பாராட்டுவோம்!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications