ஏற்கனவே ரெண்டு.. 3வதாக வந்த ஆஞ்சநேயலு.. சொப்னா இப்போ கர்ப்பம்.. அதிரடியாக கைது.. பகீர் காரணம்!

3 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய போலி ஐபிஎஸ் பெண் கைது செய்யப்பட்டார்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: சொப்னாவுக்கு ஏற்கனவே 2 புருஷன்கள், 3வதாக வாக்கப்பட்டவர் ஆஞ்சநேயலு.. இப்போது சொப்னா கர்ப்பமாக இருக்கிறாராம்.. ஆனால் கைதாகியும் இருக்கிறார்!

ஆந்திர பிரதேச மாநிலம் பிரகாச மாவட்டத்தை சேர்ந்தவர் ஆஞ்சநேயலு.. இவர் டென்மார்க்கில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார்.. இவருக்கு வீட்டில் கல்யாணம் செய்து வைக்க பெண் தேடி வந்தனர்.

அந்த வகையில் மேட்ரிமோனியலிலும் பெண்ணை தேடியபோது, சொப்னா என்ற பெண் கிடைத்தார்.. இவர் திருப்பதியை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி என்பதால், சொப்னாவை பார்த்ததுமே, ஆஞ்சநேயலுக்கு கல்யாணம் செய்து வைத்துவிட்டனர். கடந்த டிசம்பர் மாதம் இவர்கள் கல்யாணம் நடந்துள்ளது.

 சொப்னா

சொப்னா

கல்யாணத்துக்கு 3 மாசம் லீவு போட்டுவிட்டு ஹைதராபாத் வந்திருந்தார் ஆஞ்சநேயலு.. 3 மாசம் தம்பதிகள் சந்தோஷமாக இருந்தனர்.. மறுபடியும் டென்மார்க்குக்கு கிளம்பும்போது சொப்னாவைதான் தன்னுடன் வருமாறு ஆஞ்சநேயலு வேண்டி வேண்டி சொப்னாவை கூப்பிட்டார், ஆனால் தான் ஒரு ஐபிஎஸ் அதிகாரி என்பதால் வேலைதான் முக்கியம் என்று சொல்லி மறுத்து, ஹைதராபாத்திலேயே தங்கிவிட்டார்.

 பணம்

பணம்

ஆஞ்சநேயலு, டென்மார்க் போய் சேர்ந்ததுமே சொப்னா பிரச்சனையை கிளப்பினார்.. அவரது மாமனார், மாமியாரிடம் சென்று, "உங்க பையன் என்னை ஏமாத்திவிட்டார்.. எனக்கு நஷ்ட ஈடா பணம் இல்லேன்னா மானம், மரியாதையை வாங்கிவிடுவேன் என்று மிரட்டி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த தம்பதி, மருமகளை சமாதானம் செய்ய முயன்றனர்.. ஆனால் முடியவில்லை.

புகார்

புகார்

சொப்னா தொடர்ந்து மிரட்டி கொண்டும், டார்ச்சர் செய்து கொண்டுமிருந்ததால், டோணகொண்டா போலீஸ் ஸ்டேஷனில் புகார் தந்தனர். இதையடுத்து போலீசாரும் புகாரை பதிவு செய்தனர்.. அப்போதுதான் சொப்னாவின் ஒவ்வொரு விஷயமும் வெளியே வந்தது. அவர் ஒரு ஐபிஎஸ் அதிகாரியே கிடையாதாம்.. சொப்னா என்பது அவர் பெயரே கிடையாதாம்.. சொந்த பெயர் ரம்யா.. ஏற்கனவே 2 கல்யாணம் ஆனவர்.. அந்த 2 பேரிடம் வேறு வேறு பெயர்களில் கல்யாணம் செய்து பணத்தை சுருட்டி உள்ளார்.

கர்ப்பம்

கர்ப்பம்

3வது புருஷன்தான் ஆஞ்சநேயலு.. இவ்வளவும் விசாரணையில் தெரியவந்தபோதுதான், சொப்னாவை அதாவது ரம்யாவை கைது செய்தனர். அப்போது இன்னொரு அதிர்ச்சி போலீசாருக்கு காத்திருந்தது.. ரம்யா 3 மாசம் கர்ப்பமாக இருக்கிறாராம்.. அதனால் கைது செய்ய முடியாமல், காப்பகம் ஒன்றில் தங்க வைத்துள்ளனர் போலீசார்.. இன்னும் எத்தனை பேரை, என்னென்ன பெயர்களில் இவர் ஏமாற்றினார், அவர்களிடம் எவ்வளவு சுருட்டினார் என்று தெரியவில்லை.. விசாரணை நடந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+