பிரபல நடிகையுடன்.. ஹோட்டல் ரூமில் "டாப்" நடிகர்.. சிரித்துகொண்டே வெளியே வந்து.. இப்ப இன்னொரு வீடியோ
ஹைதராபாத்: உதட்டோடு உதடு வைத்து முத்தமிடும் ஒரு வீடியோவை வெளியிட்டு, விரைவில் நடிகை பவித்ராவை 4வது திருமணம் செய்து கொள்ள போவதாக, நடிகர் நரேஷ் அறிவித்துள்ள நிலையில், அதற்கு 3வது மனைவி கொந்தளித்துள்ளார்.. இந்த சம்பவம்தான் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தெலுங்கின் பிரபலமான நடிகர் நரேஷ்.. இவர் ஹீரோவாகவும், கேரக்டர் நடிகராகவும் வலம் வருபவர்.. இவர் அங்குள்ள சீனியர் நடிகரான கிருஷ்ணா - சீனியர் நடிகை விஜயநிர்மலாவின் மகன் ஆவார்.
தெலுங்கு ஹீரோ மகேஷ்பாபுவின் சகோதரரும் கூட... குடும்பமே நட்சத்திர பின்னணி கொண்டது என்பதால், ஆரம்பம் முதலே பிரபலமானவராக திகழ்ந்தார்.. தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை சம்பாதித்து உள்ளார்.

பிரபல நடிகர்
இவருக்கு திருமணம் முடிந்துவிட்டது.. ஆனால் மனைவியை பிரிந்துவிட்டார்.. பிறகு 2வது திருமணம் நடந்தது.. அந்த மனைவியையும் பிரிந்துவிட்டார்.. பிறகு 3வது திருமணம் நடந்தது.. அந்த மனைவி பெயர் ரம்யா.. இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார்.. ஆனால், ரம்யாவுடனும் தகராறு செய்து வருகிறார் நரேஷ்.. சமீப நாட்களாக தம்பதி இடையே விரிசல் ஏற்பட்டது.. இப்போது 4வது கல்யாணத்துக்கு ரெடியாகி வருவதாகவும் சொல்லப்படுகிறது.

கையும் களவுமாக
தெலுங்கு, கன்னடத்தில் பிரபலமான நடிகையான பவித்ராவை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது.. பவித்ராவும் இந்த திருமணத்துக்கு தயாராகி வருகிறார் போலும்.. இந்நிலையில், கடந்தசில மாதங்களுக்கு முன்பு, நரேஷும், பவித்ரா லோகேஷும், மைசூரின் ஹுன்சூர் சாலையில் உள்ள, ஹோட்டலில் ஒரே ரூமில் தங்கியிருக்கிறார்கள்.. இந்த விஷயம், 3வது மனைவி ரம்யாவுக்கு தெரிந்துவிட்டது.. அதனால், கணவரையும், நடிகையையும் கையும், களவுமாக பிடிக்க வேண்டும் என்று முடிவு செய்து, நைட்டோடு நைட்டாக ஹோட்டலுக்கு வந்தார்..

காலிங் பெல்
அந்த ரூமின் காலிங் பெல்லை அழுத்தினார்.. ஆனால், கதவு திறக்கப்படவில்லை.. எந்நேரம் ஆனாலும் பரவாயில்லை, அங்கிருந்து போகக்கூடாது என்று முடிவு செய்து, இரவெல்லாம் ரூமுக்கு வெளியே நின்று கொண்டிருந்தார் ரம்யா.. இந்த விஷயம் அதற்குள் மீடியாவுக்கு தெரிந்துவிட்டது.. போலீசுக்கும் தெரிந்துவிட்டது.. இரு தரப்பினருமே ஹோட்டலுக்கு விரைந்து வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.. இது எதுவுமே தெரியாத, நரேஷூம், ரம்யாவும், மறுநாள் காலை ரூம் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தனர். அப்போது ரம்யா, கோபத்தில் சந்திரமுகியாக காட்சி தந்தார்..

பொய்க்காரி
காலில் கிடந்த செருப்பை கழட்டி, அவர்களை அடிக்க பாய்ந்தார்.. வாயில் வந்த கெட்ட வார்த்தையை எல்லாம் திட்டி தீர்த்தார்.. அங்கிருந்த போலீசாரோ, ரம்யாவை தடுத்து நிறுத்தினர்.. ஆனால், மனைவி கையும் களவுமாக பிடித்தும், போலீஸ், மீடியா அங்கு திரண்டும், நரேஷ் எதுவுமே ஷாக் ஆகவில்லை.. கூலாக இருந்தார்.. ரம்யாவை பார்த்து, "நீ மோசக்காரி, பொய்க்காரி" என்று சொன்னார்.. அதுமட்டுமல்ல, அங்கேயே டான்ஸ் ஆடி, விசில் அடித்தார். செருப்பால் அடிக்க வந்த ரம்யாவை பார்த்து நரேஷ் விசில் அடித்து கேலி செய்தபடி சென்றார். பிறகு பவித்ராவின் கையை பிடித்து கொண்டு, லிப்டில் கீழே வந்தார்... அவர் பாட்டுக்கு வெளியே வந்து, காரை எடுத்துக் கொண்டு, சிரித்துக் கொண்டே, பவித்ராவுடன் கிளம்பி சென்றுவிட்டார்..

விசில் சத்தம்
ரம்யா ஓட்டலை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்த இந்த வீடியோ, சமூக வலைதளத்தில் வைரலாக அப்போது வைரலாக பரவியது.இவ்வளவும் நடந்த பிறகு, ரம்யாவின் ஆத்திரம் அடங்கவில்லை.. "இதுகுறித்து செய்தியாளர்களிடம் ரம்யா சொல்லும்போது, "கையும், களவுமாக மாட்டிக்கிட்டார்.. அதனால் என்ன செய்வதென்று தெரியாமல் தர்மசங்கடம் அவருக்கு வந்துவிட்டது.. அதனால்தான் சிரித்து கொண்டே போகிறார்.. கீழே விழுந்தாலும், மீசையில் மண் ஒட்டவில்லை.. இதுதான் எனக்கு கிடைத்த முதல் வெற்றி.. எனக்கு டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்..நான் இதை எதிர்த்து கோர்ட்டில் சட்டரீதியாக போராடுவேன்.. இந்து மதத்தில் பிறந்தவள் நான்.. இந்த கலாசாரத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளேன்...

வைர நெக்லஸ்
எனக்கு விவாகரத்து தேவையில்லை. கஷ்டம், சுகங்களை அனுபவித்து வாழ்கிறேன். எனக்கு ஒரு மகன் இருக்கிறான். அவனுக்கு அப்பா-அம்மா 2 பேருமே வேண்டும். என் குடும்பத்தின் அரசியல் பின்னணியை பார்த்துதான் என்னை நரேஷ் திருமணம் செய்து கொண்டார்.. ஆனால் அவருக்கு அரசியல் ரீதியில் உதவவில்லை என்பதால், எனக்கு இன்று இந்த சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பவித்ரா கழுத்தில் போட்டிருந்த வைர நெக்லஸ், என்னுடைய மாமியாருடையது... 2014ல் அவர் இதை வாங்கினார்... ஒவ்வொரு பிறந்த நாளுக்கும், தங்க நகை வாங்குவார்... வைர நெக்லசை அவர் அணிந்திருந்தபோது, நான் பார்த்திருக்கிறேன்" என்று கூறியிருந்தார்.

கிஃப்ட் எங்கே
ஆனால், இநத் குற்றச்சாட்டை பவித்ரா மறுத்திருந்தார். "நான் ஒரு நடிகை. எனக்கு தேவையான பொருட்களை வாங்கும் சக்தி எனக்கு இருக்கிறது.. தங்க நகைகள் மட்டுமின்றி, பிளாட், வீட்டுமனைகள் போன்ற பல சொத்துகளையும் வாங்கியுள்ளேன்... இதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது... நான் பெங்களூரில் தான் தங்க நகைகளை வாங்குவேன். எனக்கு யாரும் பரிசளிக்கவில்லை.. நடிகர் நரேஷை, நான் நான்காவதாக திருமணமும் செய்யவில்லை; விவாகரத்தும் நடக்கவில்லை.. எங்கள் இருவர் இடையே இருப்பது வெறும் நட்பு மட்டுமே. ஆனால், அவரது மனைவி ரம்யா, என் மீது வேண்டும் என்றே பழி சுமத்துகிறார்... " என்று கூறியிருந்தார்.

முத்த வீடியோ
இந்த நிலையில்தான் நரேஷூம், பவித்ரா லோகேஷூம் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் சமீபத்தில் உதட்டோடு உதடு வைத்து முத்தமிடும் ஒரு வீடியோவை வெளியிட்டு விரைவில் தாங்கள் கல்யாணம் செய்து கொள்ளப்போவதாகவும் அறிவித்து இருந்தனர். இதுபற்றி கேள்விப்பட்டதுமே, 3வது மனைவி ரம்யா ஆவேசம் அடைந்துவிட்டார்.. இதை பற்றி செய்தியாளர்களிடம் சொல்லும்போது, எந்த காரணம் கொண்டும் நான் இந்த திருமணத்தை நடத்த விடமாட்டேன்...

முத்தம்
நான் இதுவரை உண்மையாக விவாகரத்து கொடுக்கவில்லை. கோர்ட்டில் விவாகரத்து வழக்கு நடந்து வருகிறது. அதனால், அவர்கள் 2 பேருமே இதுபோன்ற செயலை கைவிட வேண்டும். எந்த காரணத்திற்காகவும் நரேஷை விட்டுக்கொடுக்க நான் தயாராக இல்லை என்று கறாராக கூறியுள்ளார். இதனால் கன்னடம் மற்றும் தெலுங்கு திரைஉலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. நரேஷ் பாபுவைவிட 20 வயது குறைவானவர் ரம்யா என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications