ஒரு நொடியில் வீழ்ந்த தலைவி.. நெல்லூரில் திருநங்கை ஹாசினியை சுற்றிவளைத்த கும்பல்! அதிகார மோதல் காரணமா
ஹைதராபாத்: திருநங்கைகளின் தலைவியை கார்களில் வந்த மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி கொன்ற விவகாரத்தில், ஆந்திராவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.. இதற்கு கண்டனம் தெரிவித்து, திருநங்கைகள் ஒன்றுகூடி தங்கள் போராட்டத்தை துவங்கியிருப்பதால், அம்மாநிலத்தில் ஆங்காங்கே பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் கொடவலூர் மண்டலம் தபதோபு கிராமத்தை சேர்ந்த திருநங்கை ஹாசினி.. 35 வயதாகிறது.. இவர் திருப்பதி, நெல்லூர் பகுதிகளை சேர்ந்த திருநங்கைகளுக்கு தலைவியாக இருந்து வந்தார்.

சாமி தரிசனம்: இவர் நேற்றைய தினம், பர்லப்பள்ளி கிராமத்திலுள்ள கோயிலுக்கு சென்றிருந்தார்.. அங்க சாமி தரிசனம் செய்துவிட்டு மறுடிபயும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென கார்களில் மர்மநபர்கள் வழிமறித்தனர்..
ஹாசினியை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டினார்கள்.. இதனால் நிலைகுலைந்து போன ஹாசினி அவர்களிடமிருந்து தப்பியோட முயன்றார். ஆனால் மர்ம ஆசாமிகள் அவரை சூழ்ந்து நின்று, சரமாரி வெட்டி சாய்த்துவிட்டு, அவரவர் கார்களில் ஏறி தப்பி சென்றுவிட்டனர்.. படுகாயமடைந்த ஹாசினி ரத்த வெள்ளத்திலேயே கீழே விழுந்தார்..
ஆம்புலன்ஸ்: இதைபார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், உடனடியாக கொடவலூர் போலீசாருக்கு தகவல் தந்தனர்.. போலீசாரும் விரைந்துவந்து ஹாசினியை அங்கிருந்து மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால், அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஹாசினி ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.. இதையடுத்து போலீசார், போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக நெல்லூர் அரசு மருத்துவமனைக்கு சடலத்தை அனுப்பி வைத்து, இந்த கொடூர கொலைக்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.. திருநங்கைகளின் தலைவியை மர்ம கும்பல் வெட்டி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெட்டி சாய்த்தனர்: கொடவலூர் மண்டலம் தபதோப்பு என்ற இடத்தில், ஹாசினியை மர்மநபர்கள் வெட்டி வீழ்த்தியிருக்கிறார்கள்.. மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை இந்த சம்பவம் ஏற்படுத்தி வருகிறது..
பிரபல திருநங்கை சமூகத்தின் தலைவியாக பொறுப்பில் இருந்தவர் கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, நெல்லூர், தமிழ்நாடு, திருப்பதி, விஜயவாடா மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் உள்பட ஏராளமான திருநங்கை மருத்துவமனையில் திரண்டு போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.. ஏராளமான திருநங்கைகள் அங்கு குவிந்திருப்பதால் பதற்றம் நிலவி வருகிறது. இதனால், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
அதிகார மோதல்: இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ள முக்கிய குற்றவாளிகளை விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று காவல்துறை, திருநங்கை சமூகத்திற்கு உறுதி தந்துள்ளது.. திருநங்கைகளுக்கு இடையே நிலவும் அதிகார மோதல் காரணமாக, இந்த கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.. எனவே, இதுகுறித்த துரித விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications