"மீன் பிரசாதம்".. ஆஸ்துமாவுக்கு "மீன் மருந்து" தந்த ஹரிநாத்.. மறக்க முடியாத சேவை.. கண்ணீர் ஹைதராபாத்
ஹைதராபாத்: ஆஸ்துமா நோயை குணப்படுத்துவதற்கான மீன் பிரசாதம் வழங்கி வந்த குடும்பத்தை சேர்ந்த மூத்தவரான ஹரிநாத் கவுட், வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் காலமானார்.. அவருக்கு வயது 84.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் மீன் பிரசாதம் என்றாலே படுஃபேமஸ்.. ஆஸ்துமா நோயை குணப்படுத்துவதற்காகவே, பாதினி குடும்பத்தாரால் கிட்டத்தட்ட 170 வருடங்களாக மீன் பிரசாதம் எனப்படும் மீன் மருந்து வழங்கப்பட்டு வருகிறது.

மீன் மருந்து: இந்த பிரசாதத்தை ஒருமுறை சாப்பிட்டாலே, ஆஸ்துமா நோய் சுத்தமாக குணமாகி விடுவதாக நம்பப்படுகிறது.. ஆனால், வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே இந்த பிரசாதம் தரப்படும். அதனால், இந்த மீன் பிரசாதத்தை வாங்குவதற்காகவே, லட்சக்கணக்கானவர்கள் பொதுமக்கள் திரண்டு வருவார்கள்.
ஒருநாள் தரப்படும் மீன் பிரசாதம் என்றாலும், இதற்கும் கால நேரம் குறித்து வைக்கப்பட்டுள்ளது.. அதாவது, தென்மேற்கு பருவமழை துவங்கும் காலமான, ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில், மிருகசீரிஷ கார்த்திகை நட்சத்திர நாளில், இந்த மீன் மருந்து தரப்படுகிறது.. மீன் பிரசாதம் வழங்கும் நிகழ்வு ஹைதராபாத், நம்பல்லி கண்காட்சி மைதானத்தில் நடைபெறுவது வழக்கம்..
போக்குவரத்து : நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான ஆஸ்துமா நோயாளிகள் இந்த மீன் பிரசாதத்தைப் பெற அங்கே கூடுவதால், அன்றைய தினம் மட்டும், போக்குவரத்து நெரிசல் சற்று அதிகமாகவே ஏற்படுவது வழக்கம்..

இந்த நிகழ்வில், விரால் மீனின் வாயில் மஞ்சள் நிற மூலிகை பேஸ்ட்டை வைத்து, ஆஸ்துமா நோயாளிகளுக்கு தரப்படும்.. சைவ உணவுக்காரர்களுக்கு, இந்த மருந்தை வெல்லத்தோடு சேர்த்து தருவார்கள்.. தொடர்ந்து 3 வருடங்களுக்கு இதை சாப்பிட்டாலே ஆஸ்துமா நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும் என்பதால், மீன் மருந்தின் மவுசு கூறிக்கொண்டே வருகிறது.
பாதினி குடும்பத்தை சேர்ந்த ஹரிநாட் கவுட், கடந்த 60 வருடங்களுக்கு மேலாகவே, மீன் மருந்து வழங்கி வந்தார்.. இந்த பாரம்பரியமான மருத்துவத்தை, இவருக்கு, அவரது முன்னோர்கள் கற்றுத்தந்தார்களாம்..
மீன் பிரசாதம்: 60 வருடம் விடாமல் மருத்துவம் பார்த்து வந்த நிலையில், ஹரிநாட் கவுட்.. ஆனால், கொரோனா பரவல் சமயத்தில் மட்டும், 3 ஆண்டுகளாக இந்த மீன் பிரசாதம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தொற்று குறைய துவங்கி, பொது போக்குவரத்தும் இயல்பு நிலைக்கு வந்தபிறகு, மீண்டும் கடந்த ஜுன் மாதம் மீன் மருந்து தரப்பட்டது.

கடந்த சில வருடங்களாவே நோய்வாய்ப்பட்டு காணப்பட்டார்.. அதனால், அவருக்கு பதிலாக, அவரது குடும்பத்தினர், தொடர்ந்து மீன் மருந்து வழங்கி வருகின்றனர். இந்நிலையில், முதுமை காரணமாக, உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஹரிநாத் கவுட் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
கண்ணீர் காணிக்கை: அவரது இறுதிச் சடங்குகள் ஹைதராபாத்தில் நடக்க போகிறது.. காலம் காலமாக எத்தனையோ உயிர்களை காப்பாற்றி வந்த, ஹரிநாட் கவுட்டின் மரண செய்தி, பொதுமக்களை பெருத்த கவலையிலும், வருத்ததிலும் ஆழ்த்தி வருகிறது. இவரால் உயிர் பெற்ற நோயாளிகள், ஹரிகவுட்டின் மறைவுக்கு தங்கள் நெஞ்சார்ந்த நன்றிகளை கண்ணீருடன் காணிக்கையாக்க வருகிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications