ரயிலில் லோயர் பெர்த்தில் போறீங்களா.. கனவில் கூட யாருக்கும் நடக்கக் கூடாத ஒன்று. பாருங்க
ஹைதராபாத்: ரயிலில் போறீங்களா.. அதுவும் லோயர் பெர்த்தில் போறீங்களா.. இந்த சம்பவம் ஹைதராபாத் முதல் கேரளா வரை உள்ளவர்களை..இப்படியும் நடக்குமா என்று யோசிக்க வைத்துள்ளது.
ரயிலில் அண்மைக் காலங்களில் நடந்த விபத்துக்கள் பலரையும் வருத்தத்தில் ஆழ்த்தி இருக்கும். அதேபோல் ரயிலில் பயணம் செய்தவர்கள், முன்பதிவு செய்த போதிலும் உட்கார முடியாமல் அவதிப்பட்டிருப்பார்கள். சிலர் ஏசி பெட்டிகளில் பயணிக்கும் போது, முன்பதிவு செய்யாத பயணிகளின் ஆக்கிரமிப்பால் அவதிப்பட்டிருப்பார்கள். இதெல்லாம் ரயில்கள் அடிக்கடி நடக்கும் நிகழ்வுகளாக உள்ளது..

அதேநேரம் ரயிலில் பெர்த் உடைந்து விழுவதை கேள்வி பட்டிருக்கிறீர்களா? தெலுங்கானா மாநிலத்தில் ரயில் பயணத்தின் போது மிடில் பெர்த் அறுந்து விழுந்ததில், கழுத்து எலும்பு உடைந்து கேரளாவைச் சேர்ந்த இறந்து போயிருக்கிறார். இந்த சம்பவம் ரயில் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரளா மாநிலம் மாரஞ்சேரி வடமுகில் பகுதியைச் சேர்ந்த 62 வயதாகும் முதியவர் மரத்திகா அலிகான். தனது மனைவி, மகன்கள் மற்றும் உடன் பிறந்தவர்களுடன் தனது ஊரிலேயே வசித்து வந்தார்.
இந்நிலையில், முதியவர் மரத்திகா அலிகான் வேலை விஷயமாக கடந்த வாரம் கேரள மாநிலம் மலப்புரத்திலிருந்து டெல்லிக்கு செல்லும் விரைவு ரயிலில் பயணித்திருக்கிறார். மரத்திகா அலிகான் சென்ற ரயில் அடுத்தத்து மாநிலங்களை கடந்து தெலுங்கானா மாநிலத்தில் பயணித்து கொண்டிருந்தது. முதியவர் மரத்திகா அலிகானுக்கு ரயிலில் கீழ் இருக்கை (லோயர் பெர்த்) ஒதுக்கப்பட்டிருந்தது. தான் சென்ற விரைவு ரயில் பயணத்தில் இரவு உணவை முடித்துக்கொண்டு தனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் மரத்திகா அலிகான் படுத்து தூங்கி கொண்டிருந்தார்
கேரளாவில் இருந்து சென்ற அந்த ரயிலானது தெலுங்கானா மாநிலம் வாரங்கல் என்ற இடத்தை கடந்து சென்று கொண்டிருந்தது, அப்போது எதிர்பாராதாவிதமாக மரத்திகா அலிகான் படுத்திருந்த இருக்கைக்கு மேல் இருந்த மிடில் பெர்த்தானது உடைந்து அவர் மேல் பயங்கரமாக விழுந்து இருக்கிறது. இதில் இவருக்கு கழுத்து எலும்புகள் உடைந்து நரம்பு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. மேலும் ரயிலில் மிடில் பெர்த் விழுந்த சில நிமிடங்களிலேயே அவருக்கு கை கால்கள் முழுமையாக செயலிழந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அவரை மீட்ட ரயில்வே மீட்பு படையினர் மரத்திகா அலிகானை வாரங்கலில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அதன்பின்னர் அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக ஹைதராபாத்தில் உள்ள கிங்ஸ் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கடந்த இரு தினங்களுக்கு முன் அவருக்கு கழுத்தி அறுவை சிகிச்சை செய்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி மரத்திகா அலிகான் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து பிரேத பரிசோதனைக்கு பின் அவரது உடல் உடன்வந்த உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ரயில் பயணத்தின் போது மிடில் பெர்த் அறுந்து விழுந்ததில், கழுத்து எலும்பு உடைந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் ரயில் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது












Click it and Unblock the Notifications