கல்யாணத்தை நிறுத்துங்க.. 2 நிமிஷத்திற்கு முன் முடிவு எடுத்த மாப்பிள்ளை.. கலங்கிய பெண்.. ஷாக் காரணம்!
அந்த பெண்ணின் குடும்பம் மிகவும் வறுமையான குடும்பம் என்று கூறப்படுகிறது.
ஹைதராபாத்: தெலுங்கானாவில் இளைஞர் ஒருவர் மண மேடையிலேயே தனது திருமணத்தை நிறுத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தற்போது சமூக வலைத்தளங்களில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
ஹைதராபாத்தில் இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது. ஹைதராபாத் அருகே தனியார் ஆம்னி பேருந்து நிறுவனம் ஒன்றில் அந்த இளைஞர் பணியாற்றி வருகிறார்.
இவருக்கு பெரிதாக வருமானம் இல்லாத காரணத்தால் பெண் பார்ப்பதில் சிக்கல் இருந்துள்ளது. அதேபோல் இவருக்கு பல்வேறு தோஷங்களும் இருந்துள்ளது. இதற்கு ஏற்றபடி அவருக்கு பெண் தேடி வந்துள்ளனர்.

பெண்
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் அந்த இளைஞருக்கு பெண் பார்க்கப்பட்டது. அந்த பெண்ணிடம் பல லட்சங்களுக்கு வரதட்சணை கேட்டு இருக்கிறார் அந்த இளைஞர். ஒரு பைக். வீட்டிற்கு தேவையான அனைத்துவிதமான பர்னிச்சர்கள். பாத்திரங்கள். 50 பவுன் நகை கேட்டு இருக்கிறார். இது போக ரொக்கமாகவும் பணம் கேட்டுள்ளார். நிச்சய செலவுகளை எல்லாமே பெண்ணின் குடும்பமே பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அந்த இளைஞர் கேட்டுள்ளார்.

வரதட்சணை
அந்த பெண்ணின் குடும்பம் மிகவும் வறுமையான குடும்பம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில வருடங்களாகவே அந்த பெண்ணிற்கு திருமணம் தள்ளி போய் இருந்துள்ளது. இந்த முறையும் விட்டால் திருமணம் நடப்பது கடினம் என்று அந்த பெண்ணிற்கு இந்த இளைஞரையே திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். அங்கே இங்கே கடன் வாங்கி திருமணத்திற்கும் ஏற்பாடு செய்துவிட்டனர். இதையடுத்து 3 மாதங்களுக்கு முன் அந்த பெண்ணிற்கு நிச்சயம் நடந்தது. இதற்கான அனைத்து செலவுகளையும் பெண்ணின் குடும்பத்தினர்தான் செய்தனர். அதேபோல் பெண்ணிற்கு போடுவதற்காக வரதட்சணையையும, தங்கத்தையும் ஏற்பாடு செய்துவிட்டனர்.

மேடைக்கு வரவில்லை
இந்த நிலையில்தான் நேற்று முதல்நாள் திருமணம் நடக்க வேண்டிய நிலையில் மேடைக்கு வந்த மாப்பிள்ளை சோகமாக இருந்துள்ளார். மேடையில் சோகமாக அவர் அமர்ந்து இருந்துள்ளார். அருகே இருந்த மணப்பெண்ணிடமும் அவர் பேசவில்லை. பின்னர் உடை மாற்ற உள்ளே சென்றவர் அதன்பின் மீண்டும் மேடைக்கு வரவில்லை. உள்ளேயே இருந்தவர்.. அப்படியே திருமணத்தையும் நிறுத்தி உள்ளார். அவரின் இந்த செயல் கடும் விமர்சனங்களை சந்தித்து உள்ளது. இதை பற்றி பெண்ணின் குடும்பத்தினர் விசாரித்ததில், நாங்க கேட்ட பர்னிச்சரை நீங்க கொடுக்கவில்லை. நீங்க கொடுத்திருக்கும் பர்னிச்சர் எல்லாம் பழசு. அதெல்லாம் உங்க வீட்டில் பயன்படுத்தப்பட்டது.

முடியாது
கேட்ட வரதட்சணையை கொடுத்தால்தான் கல்யாணம். இல்லையென்றால் கல்யாணம் செய்து கொள்ள முடியாது என்று கூறியதாக குறிப்பிட்டு உள்ளனர். உடை மாற்ற சென்ற போது அவர் பர்னிச்சர்களை பார்த்து உள்ளார். ஜன்னல் வழியாக பர்னிச்சகர்களை பார்த்த அவர் அது பழையது என்று கண்டுபிடித்துள்ளார். இதனால் கோபம் அடைந்த மாப்பிள்ளை திருமணத்தையே நிறுத்தி உள்ளார். இதையடுத்து நேற்று அந்த பெண்ணின் குடும்பத்தினர் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் இது பற்றி விசாரணை செய்து வருகின்றனர். வரதட்சணை தடுப்பு சட்டத்தின் கீழ் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. மாப்பிள்ளையிடம் விசாரணை நடத்திய பின் போலீசார் அவரை கைது செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications