லுங்கியுடன்.. காலை தலைக்கு மேலே சுழற்றி சுழற்றி.. அலறிய பெண்கள்.. இப்படி கூட நடக்குமா.. மகா கொடூரன்
2 மகள்களையும் கொடூரமாக தாக்கிய தந்தையை, ஆந்திர போலீசார் தேடி வருகிறார்கள்
ஹைதராபாத்: இதயத்தை நொறுக்கக்கூடிய வீடியோ ஒன்று இணையத்தில் தொடர்ந்து பரவி வருகிறது.. இப்படியெல்லாம்கூட நடக்குமா? என்று பொதுமக்கள் அதிர்ந்து போய் கேட்கிறார்கள்.
ஆந்திர மாநிலத்தில் மேற்கு கோதாவரி பகுதி அருகே உள்ளது வீர பாளையம் என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் தாவீத்... இவரது மனைவி பெயர் நிர்மலா.
இந்த தம்பதிக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.. தாவீதுக்கு குடிப்பழக்கம் உள்ளது.. இதனால் எவ்வளவு சம்பாதித்தாலும், அவைகளை குடித்தே அழித்து விடுவார்.. வீட்டிற்கு பணம் தருவில்லை..

கண்ணீர் நிர்மலா
இதனால், 3 குழந்தைகளையும் வளர்க்க முடியாமல் நிர்மலா கண்ணீர் வடித்துள்ளார்.. பிள்ளைகளுக்கு கூட சாப்பாடு போட முடியாத நிலைமை வந்துவிட்டதால், அந்த பகுதியிலேயே சிறு சிறு வேலை செய்ய ஆரம்பித்தார்.. பிறகு, ஒரு ஏஜென்ட் மூலம் துபாய்க்கு வீட்டு வேலைக்கு சென்றார் நிர்மலா... வீட்டுவேலை செய்து, அந்த சம்பளத்தை குடும்ப செலவுக்கு அனுப்பி வந்துள்ளார். ஆனால் தாவீது, அந்த பணத்தை வைத்துக் கொண்டு தண்ணி அடிக்க ஆரம்பித்தார்.. குழந்தைகளை கவனிப்பது கிடையாது..

திடீர் டவுட்
போதாக்குறைக்கு நிர்மலாவின் நடத்தை மீது திடீரென சந்தேகமும் வந்துவிட்டது.. அதனால், "துபாயில் நீ இதுவரை சம்பாதித்தது எல்லாம் போதும்.. ஊருக்கு வந்து சேர்" என்று நச்சரிக்க ஆரம்பித்துள்ளார்.. . ஆனால், ஊருக்கு சென்றுவிட்டால், உடனே வேலை கிடைக்காமல் போனால் என்னாவது? இருக்கும் வேலையை அவசரப்பட்டு விட்டுவிட்டால் குழந்தைகளின் நலன் பாதிக்கப்படுமே, அதனால், அவர்களின் எதிர்காலத்திற்காகவாவது துபாயில் வேலை செய்தாக வேண்டும்" என்று தாவீதிடம் எடுத்து சொல்லி உள்ளார்..

கதறல்
ஆனாலும் தாவீது கேட்கவில்லை.. மனைவியை எப்படியாவது ஊருக்கு வரவழைத்துவிட வேண்டும் என்று முடிவு செய்தார்.. அதற்காக விபரீதமாக யோசித்தார்.. தினமும் தன்னுடன் குடிக்கும் ஒரு கூட்டாளியை வீட்டுக்கு வரவழைத்தார்.. அந்த கூட்டாளியை வீடியோ எடுக்க சொல்லிவிட்டு, தன்னுடைய 2 மகள்களையும் திடீரென தாக்க ஆரம்பித்தார்.. அவர்களின் காலை பிடித்துக் கொண்டு தலைக்கு மேலே சுழற்றி சுழற்றி அடித்தார்.. அந்த குழந்தைகள் வலி தாங்க முடியாமல் அலறினார்கள்.. அவர்கள் கதறுவதை வீடியோவாக எடுத்து, நிர்மலாவுக்கும் அனுப்பி வைத்தார்.. "நீ உடனே ஊருக்கு வராவிட்டால், மகள்களை இப்படித்தான் அடித்து கொல்வேன்" என்று மிரட்டி உள்ளார்.

எஸ்கேப்
இந்த வீடியோவை பார்த்து பதறிப்போன நிர்மலா, உடனடியாக ஊர் பஞ்சாயத்து தலைவருக்கு அந்த வீடியோவை அனுப்பிவைத்தார்.. தன் மகள்களை எப்படியாவது மீட்குமாறும் கெஞ்சினார்.. ஊர் பஞ்சாயத்து தலைவரும், போலீசில் சென்று இதை பற்றி புகார் சொன்னார்.. நிர்மலா அனுப்பிய வீடியோவையும் போலீசில் ஒப்படைத்தார்.. போலீசுக்கு விஷயம் தெரிந்துவிட்டது என்பது தாவீதுக்கு தெரியவந்தது.. இதனால், அவசர அவசரமாக மகள்களை உறவினர் வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டு, தலைமறைவாகி விட்டார்.. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி 2 சிறுமிகளையும் மீட்டு உள்ளனர்... தாவீதையும் தேடிக் கொண்டிருக்கின்றனர்.

நொறுங்கிய இதயம்
இது தொடர்பான வீடியோவும் வைரலாகி வருகிறது.. பார்ப்பதற்கு சிறிய வீடு போல இருக்கிறது.. அங்கே லுங்கியுடன் கட்டிலில் தாவீது உட்கார்ந்திருக்கிறார்.. அந்த கட்டிலுக்கு கீழே ஸ்கூல் யூனிபார்மில் 2 சிறுமிகளும் பயந்து நடுநடுங்கியபடியே உட்கார்ந்திருக்கிறார்கள்.. திடீரென்று எழுந்த தாவீது, மகள்களை அடித்து உதைத்து ஒரு காலை பிடித்துக் கொண்டு தலைக்கு மேலே சுழற்றி சுழற்றி அடிக்கிறார்... சிறுமிகளின் கதறல்கள் வீடியோவை பார்ப்போரின் இதயத்தை நொறுங்க வைத்து வருகிறது.. உடனடியாக தாவீது மீது விசாரணை தேவை என்றும் கோரிக்கைகளை எழுப்பி உள்ளனர்..!
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications