ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

லீக்கான "ஸ்டைரீன்".. மிக கொடுமையான விஷ வாயு.. விசாகப்பட்டினத்தில் கொடூரம்.. வெளியாகும் விவரங்கள்!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் மிக மோசமான ஸ்டைரீன் (styrene) எனப்படும் வாயு வெளியாகி உள்ளது என்கிறார்கள்.

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் மிக மோசமான ஸ்டைரீன் (styrene) எனப்படும் வாயு வெளியாகி உள்ளது என்கிறார்கள்.

Recommended Video

    Major Gas Leak At Andhra Plant

    ஆந்திர பிரதேசத்தில் நடந்த விஷவாயு விபத்து தற்போது நாட்டையே உலுக்கி உள்ளது. உலக மீடியாக்களின் கவனத்தை இந்த விபத்து ஈர்த்து உள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருக்கும் எல்ஜி பாலிமர் ரசாயன தொழிற்சாலையில் இன்று அதிகாலை விபத்து ஏற்பட்டது.

    ஆலையில் ஏற்பட்ட விபத்து காரணமாக அதிகாலை 3 மணிக்கு விஷவாயு கசிந்தது. இந்த விஷவாயு கசிவு காரணமாக 5 பேர் பலியாகி உள்ளனர்.

    அடுத்தடுத்து மயங்கிய மக்கள்.. விலங்குகளும் பலி.. விசாகப்பட்டினத்தை உலுக்கிய விஷவாயு கசிவு.. வீடியோ! அடுத்தடுத்து மயங்கிய மக்கள்.. விலங்குகளும் பலி.. விசாகப்பட்டினத்தை உலுக்கிய விஷவாயு கசிவு.. வீடியோ!

    மோசம்

    மோசம்

    இந்த தாக்குதல் காரணமாக மக்கள் சாலையிலேயே விஷவாயு தாக்கி மயங்கி விழுந்தனர். அதிகாலை வெளியே வந்த பலர் மயங்கி விழுந்தனர். இந்த விஷவாயு கசிவுக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. ஸ்டைரீன் (styrene) என்ற வாயு கசிவு காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கிறது. இதனால் அங்கே மக்கள் வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    என்ன வாயு இது

    என்ன வாயு இது

    இந்த ஸ்டைரீன் (styrene) வாயுவை எத்தனைல் பென்சீன் என்றும் அழைக்கிறார்கள். இது பொதுவாக பிளாஸ்டிக் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் வாயு ஆகும். பிளாஸ்டிக் உருவாக்கத்தின் போது இதை அதிகமாக பயன்படுத்துவார்கள். பெரிய அளவில் இந்த வாயுவிற்கு கெட்ட மணமோ நல்ல மணமோ இருக்காது. ஆனால் இதை நேரடியாக சுவாசிப்பது மிகவும் கொடுமையானது. உயிருக்கே இந்த வாயு ஆபத்து விளைவிக்கும்.

    கவனம் முக்கியம்

    கவனம் முக்கியம்

    இந்த வாயு முதலில் கண்ணெரிச்சல் தொடங்கி மூச்சு விடுவது வரை பெரிய பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதிலும் நேரடியாக இந்த வாயு கண்ணில் பட்டால் பார்வை கூட பறிபோகும் நிலை ஏற்படலாம். தோல் வெந்து உரிவது கூட சிலருக்கு ஏற்படும். உலக நாடுகள் பல இந்த ஸ்டைரீன் (styrene) வாயுவை பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.

    கேன்சரை ஏற்படுத்தும்

    கேன்சரை ஏற்படுத்தும்

    அதேபோல் இந்த வாயு கேன்சரை உண்டாக்கும் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கிறது. பிளாஸ்டிக் தொழிற்சாலையில் இந்த வாயு வைக்கப்பட்டு இருக்கும் வெப்பநிலை இதை மேலும் கொடியதாக மாற்றுகிறது. அதனால் இந்த வாயு ஒருவருக்கு கேன்சரை ஏற்படுத்தும். நேரடியாக இதன் உடன் தொடர்பு ஏற்பட்டால் எதிர்காலத்தில் கேன்சர் வர வாய்ப்புள்ளது என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கிறது.

    English summary
    Heavily toxic Styrene gas leaked from Vishakhapatnam LG Polymers industry today early in the morning.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X