இந்திக்கு ஆதரவாக வந்த பவன் கல்யாண்.. 2017ல் "கோ பேக்" இந்தி சொன்னவர்..வச்சு செய்யும் நெட்டிசன்கள்
ஹைதராபாத்: இந்தியாவுக்கு பல மொழிகள் தேவை இந்தி மொழியை எதிர்க்கும் தமிழகம் தமிழ் திரைப்படங்களை பிற மொழிகளில் டப்பிங் செய்யக்கூடாது என பேசிய ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு இந்தியா முழுவதும் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இந்த நிலையில் 2017 ஆம் ஆண்டில் வட இந்திய தலைமை பிற மாநிலங்களில் கலாச்சாரத்தை புரிந்து கொள்ள வேண்டும் என ஹிந்தி கோ பேக் என்ற 2017 இல் போட்ட பிட்டை வைத்து விளாசி வருகின்றனர் நெட்டிசன்கள்
தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அதற்கு நிதி வழங்கப்படாது என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பற்ற வைத்த நெருப்பு தற்போது தமிழகத்தில் பற்றி எரிகிறது.

தேசிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கை இருக்கும் நிலையில் அது மறைமுக இந்தி திணிப்பு என தமிழ்நாடு கடுமையான எதிர்வினை ஆற்றி வருகிறது. இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்த நிலையில் தமிழக எம்பிக்கள் நாகரிகமற்றவர்கள் என தர்மேந்திர பிரதான் பேச, அவரது உருவ பொம்மைகள் தமிழகம் முழுவதும் எரிக்கப்பட்டது. இதை அடுத்து அவர் மன்னிப்பும் கூறினார்.
பவன் கல்யாண்: தொடர்ந்து இந்த விவகாரம் தேசிய அளவில் பேசுபொருளாக மாறி இருக்கும் நிலையில் தேவையில்லாமல் தனது வாயை கொடுத்து வாங்கி கட்டிக் கொண்டிருக்கிறார் நடிகரும், ஜனசேனா கட்சி தலைவரும், ஆந்திர துணை முதலமைச்சருமான பவன் கல்யாண். காக்கிநாடாவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர்," இந்தியாவுக்கு பல மொழிகள் தேவை. அது சிறப்பு சேர்க்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அது தமிழகத்திற்கும் பொருந்தும். இந்தி மொழியை தமிழகம் எதிர்க்கும் நிலையில் தமிழ் திரைப்படங்களை பிற மொழிகளில் டப்பிங் செய்யக்கூடாது. நிதி ஆதாயத்திற்காக தமிழ் படங்கள் பல மொழிகளில் டப் செய்யப்படுகிறது.
இந்தி திணிப்பு: சமஸ்கிருதத்தை விமர்சிக்கிறார்கள். இந்தியையும் எதிர்க்கிறார்கள். இவை அனைத்துமே தேசிய மொழி தான். பணம் மட்டும் இந்தியில் இருந்து வரவேண்டும். ஆனால் இந்தி வேண்டாம் என்று சொன்னால் என்ன அர்த்தம். இதில் என்ன நியாயம் இருக்கிறது. வேலை செய்ய வட மாநிலங்களில் இருந்து இந்தி பேசும் ஆட்கள் வேண்டும். ஆனால் இந்தி வேண்டாம் என்றால் எப்படி? என பேசி இருந்தார்.
பவன் கல்யாணுக்கு எதிர்ப்பு: இதை அடுத்து நடிகர் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் பவன் கல்யாணின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அது மட்டும் அல்லாமல் தமிழக அளவிலும் இந்திய அளவிலும் பவன் கல்யாணுக்கு எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இந்த நிலையில் 2017 ஆம் ஆண்டு பவன் கல்யாண் போட்ட எக்ஸ் பதிவை வைத்து தற்போது விமர்சித்து வருகின்றனர் நெட்டிசன்கள். 2017 ஆம் ஆண்டில் இந்தி திணிப்பு விவகாரம் தொடர்பாக கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் ஹிந்தி கோ பேக் என்ற கட்டுரை பிரபல நாளிதழ் ஒன்றில் வெளியாகி இருந்தது.
இந்திக்கு எதிர்ப்பு: அதனை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்த பவன் கல்யாண் "இந்தியாவில் பன்முக கலாச்சாரம் இருக்கும் நிலையில் அதனை வட இந்திய அரசியல் தலைமை புரிந்து கொள்ள வேண்டும்" என கூறியிருந்தார். அந்த கட்டுரையில் இந்தி திணிப்பதை ஒரு காலும் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இந்தி திணிப்புக்கு எதிராக உருது பேசும் மக்களும் வங்காள மொழி பேசும் மக்களும் கிளர்ந்து எழுந்திருக்கிறார்கள். ஹிந்தி இணைப்பு மொழியாக இருக்கும் என கூறினாலும் அது பல மொழிகளை அழித்திருக்கிறது. இந்தி திணிப்பு பாரம்பரிய மிக்க இந்தியாவின் ஒருங்கிணைப்பை குலைத்து விடும் என அந்த கட்டுரையில் கூறப்பட்டிருந்தது.
இரட்டை நாக்கு: அப்போது இந்த பதிவை பகிர்ந்திருந்தார் பவன் கல்யாண். மேலும் அப்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அவர் வெளியே வந்திருந்த நேரம் பாஜகவுக்கு எதிராக பலமாக கருத்துக்களை முன் வைத்திருந்தார். தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் பவன் கல்யாண் கட்சி மண்ணை கவ்வியது. அதற்குப் பிறகு சந்திரபாபு நாயுடு பாஜக உடன் கூட்டணி சேர்ந்து நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்று துணை அமைச்சராக பதவி ஏற்றிருக்கிறார். இந்த நிலையில் பதவியில் இல்லாத போது ஒரு பேச்சு பதவியில் இருக்கும் போது ஒரு பேச்சா இது இரட்டை நாக்கு பவன் கல்யாண் என விமர்சித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.












Click it and Unblock the Notifications