தேர்தல் பேக்கேஜ்.. உள்ளே பணம், பாட்டில், தங்கம்.. நாட்டையே உலுக்கிய ஆந்திர பிரதேச மாடல்.. நடுங்குதே
ஹைதராபாத்: தேர்தலுக்கு பணம் கொடுக்கும் வழக்கத்தில் புதிய உச்சத்தை ஆந்திர பிரதேசம் அடைந்து உள்ளது. இப்படி எல்லாம் கூட பணம் கொடுக்க முடியுமா.. வாக்குகளை வாங்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தில் பொதுத் தேர்தல்கள் மற்றும் சட்டமன்றத் தேர்தல்கள் இரண்டும் இன்று தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு வரை கூட அங்கு வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டு உள்ளது. பொதுவாக தேர்தலில் பணம் கொடுக்கும் வழக்கம் தமிழ்நாட்டில்தான் அதிகம் என்ற குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் இந்த லோக்சபா தேர்தலில் பெரிய அளவில் கட்சிகள் பணம் கொடுக்கவில்லை.

லோக்சபா தேர்தல் பணம்; இந்த முறை லோக்சபா தேர்தலுக்கு பெரிய அளவில் தமிழ்நாட்டில் கட்சிகள் பணம் கொடுக்கவில்லை. தமிழ்நாட்டில்தான் பணம் விநியோகம் செய்வது வழக்கம் என்ற குற்றச்சாட்டு இருந்த நிலையில் அதை எல்லாம் ஆந்திர பிரதேசம் உடைத்து நொறுக்கி உள்ளது. பென்னாகரம் பார்முலா, ஆர் கே நகர் பார்முலா போன்ற பார்முலாக்களை எல்லாம் உடைத்து நொறுக்கி இருக்கிறது "அக்கட தேசத்து" பார்முலா.
தமிழ்நாட்டில் தேர்தலுக்கு பணம் கொடுப்பதில் ஒரு வழக்கம் இருக்கும். தேர்தலுக்கு 1 அல்லது 2 நாட்களுக்கு முன் பணம் இறக்கப்படும். வீட்டிற்கு இரவு நேரத்தில் இருட்டிய பின் அல்லது மின்சாரம் போன பின் வந்து பணம் கொடுக்கப்படும். சில இடங்களில் சூடம் ஏற்றி சத்தியம் கூட வாங்கப்படும். ஆனால் ஆந்திராவில் இதெல்லாம் மிஞ்சி பணம் கொடுத்துள்ளனர்.
புதிய மாடல்; அங்கே பணம் கொடுக்க பேக்கேஜ் முறையை பிரதான கட்சிகள் அறிமுகம் செய்துள்ளன. ஆண் வாக்காளர்களான பேக்கேஜில் ஒரு பாக்சில் 2000 ரூபாய் பணம், ஒரு குவாட்டர் பாட்டில், அதற்கு சைடு டிஷ், வாட்டர் பாட்டில், சுவீட் பாக்ஸ் என்று மொத்தமாக வைத்து பேக்கேஜாக கொடுத்துள்ளனர். இன்னொரு பக்கம் பெண்கள் பேக்கேஜில் ஒரு சிறிய தங்க மோதிரம், 1000 ரூபாய் பணம் வைத்து கொடுத்துள்ளனர்.
ஒரு சில அரசியல் இதை விட கூடுதல் பணத்தை கொடுத்துள்ளனர். சில இடங்களில் வாக்காளர்களுக்கு ரூ. 5000 வரை கூட யுபிஐ மூலம் தேர்தலுக்கு சில நிமிடங்களுக்கு முன்பு வரை கொடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் தேர்தலுக்கு 1 அல்லது 2 நாட்களுக்கு முன் பணம் இறக்கப்படும். ஆனால் ஆந்திராவில் வாக்காளர்களை சைக்காலஜி ரீதியாக கவர தேர்தலுக்கு 2 மணி நேரத்திற்கு முன் அதிகாலையில் கூட பணம் விநியோகம் செய்துள்ளனர்.
சில இடங்களில் டோக்கன் முறையிலும் கூட டோக்கன் தரப்பட்டு அருகே உள்ளே மளிகை கடையில் பணம், பொருட்கள் வழங்கப்படுகின்றன. பணம் மட்டுமின்றி அரிசி பேக்கேஜ், மளிகை சாமான் பேக்கேஜ் போன்ற பேக்கேஜ்களையும் வாரி வழங்கி உள்ளனர். இதெல்லாம் பணம் போக கூடுதலாக வழங்கப்படும் "லஞ்சம்" ஆகும். இதன் மூலம் : தேர்தலுக்கு பணம் கொடுக்கும் வழக்கத்தில் புதிய உச்சத்தை ஆந்திர பிரதேசம் அடைந்து உள்ளது.
இப்படி எல்லாம் கூட பணம் கொடுக்க முடியுமா.. வாக்குகளை வாங்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இப்படி பணம் கொடுப்பதன் மூலம் 100க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டு சிலர் கைதும் செய்யப்பட்டு உள்ளனர். ஆனாலும் பெரிய அளவில் அங்கே பணம் கொடுப்பது தடுக்கப்படவில்லை.
இந்திய தேர்தலிலேயே பணம் கொடுப்பதில் புதிய முறையை ஆந்திர பிரதேச தேர்தல் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த ஆந்திர பிரதேசத்து மாடல் அங்கே எந்த அளவில் முடிவுகளை மாற்றும் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications