"உல்லாசம்.." மனைவியின் ஆபாச வீடியோவை பார்த்த கணவர் தற்கொலை! சைக்கோ இளைஞரை கொன்ற பெண்ணின் குடும்பம்
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் தனது காதலியுடன் நெருக்கமாக இருந்த வீடியோவை அந்த இளைஞர் காதலியின் கணவருக்கே அனுப்பிய பகீர் சம்பவம் நடந்துள்ளது.
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான மற்றும் பெண்களைக் குறிவைத்து நடத்தப்படும் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. அதிலும் குறிப்பாகப் பெண்களைக் குறிவைத்து நடத்தப்படும் பாலியல் ரீதியாலான குற்றங்கள் அதிகரித்தே வருகிறது.

அப்படியொரு மோசமான சம்பவம் தான் தெலங்கானா மாநிலத்தில் நடந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
வீடியோ: தெலுங்கானா மாநிலம் மஞ்சிரியாலா பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ்.. 24 வயதான இவர் அதே பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இருவரும் அடிக்கடி தனிப்பட்ட முறையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இதை மகேஷ் யாருக்கும் தெரியாமல் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
இதற்கிடையே இவர்களின் காதல் வாழ்க்கையில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. மகேஷுக்கும், அந்த இளம்பெண்ணுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் மகேஷுடன் அந்த இளம்பெண் பிரேக்அப் செய்துள்ளார். இருவருக்கும் செட் ஆகாது என்பதால் தன்னை விட்டுச் செல்லும்படி மகேஷ் வற்புறுத்தியுள்ளார்.
இருப்பினும் இதற்குச் சம்மதிக்காத மகேஷ், தன்னை காதலிக்குமாறு அவளைத் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். இந்தச் சூழலில் அந்த பெண்ணின் பெற்றோர் வேறு ஒரு இளைஞருடன் அந்த பெண்ணுக்குத் திருமணம் செய்து வைத்தனர்.

பகீர் வீடியோ: இதனால் ஆத்திரமடைந்த மகேஷ், காதலியுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோவை அவரது கணவருக்கே அனுப்பியுள்ளார். தனது மனைவி மற்றொரு இளைஞருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோவை பார்த்த அந்த இளைஞர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.
இப்படியொரு கொடூர சம்பவம் நடந்த பின்னரும் கூட அந்த பெண்ணை, மகேஷ் விட்டுவிடவில்லை. அதன் பின்னரும் தனது ஆசைக்கு இணங்க வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். அந்த பெண்ணால் மகேஷை ஒரு கட்டத்திற்கு மேல் சமாளிக்க முடியவில்லை.
கொடூர கொலை: இதையடுத்து அந்த பெண் தனது பெற்றோரிடம் இது குறித்துக் கூறியுள்ளார். மகளை இந்த பிரச்சினையில் இருந்து விடுவிக்க வேண்டும் என நினைத்த அவரது குடும்பத்தினர் மகேஷை பொது இடத்திற்கு அழைத்துப் பேசியுள்ளனர். இருப்பினும், அப்போது இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண்ணின் பெற்றோர், மகேஷை நடுரோட்டில் வெட்டி சாய்த்துள்ளனர். இது குறித்த தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் இருந்த மகேஷ் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அந்த பெண்ணின் பெற்றோர், சகோதரர்கள் உள்பட 4 பேரைக் கைது செய்தனர்.
தற்கொலை: எந்தவொரு பிரச்சினைக்கும் தற்கொலை செய்து கொள்வது தீர்வு இல்லை. தற்கொலை தொடர்பான எண்ணங்கள் எழுந்தால் கீழ்க்கண்ட எண்களைத் தொடர்பு கொள்ளலாம்
மாநிலத்தின் சுகாதார உதவி எண் 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044-24640050 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு உதவிகளைப் பெறலாம்.












Click it and Unblock the Notifications