சாப்பிடலாம் வாங்க.. ஆசையாக கூப்பிட்டு அரிவாளால் போட்டு தள்ளிய அன்பு மனைவிகள்! தெலங்கானாவில் ஷாக்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: இரண்டு மனைவிகளுடன் வாழ்ந்து வந்த நபர் ஒருவர், மனைவிகளின் கையால் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான விசாரணையில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

தெலங்கானா மாநிலம் ஜனகாவ் மாவட்டத்தில் கடந்த திங்கட்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்திருக்கிறது. கனகையா என்பவர் குடெம் கிராமத்தில் வசித்து வந்தார். இவர் முதலில் கௌரம்மா எனும் பெண்ணை திருமணம் செய்திருக்கிறார்.

Telangana police crime

ஆனால் சில ஆண்டுகள் கழித்து அவர் சிரிஷா எனும் இளம் பெண்ணை இரண்டாம் திருமணம் செய்திருக்கிறார். 90ஸ் கிட்ஸ் இளைஞர்கள் திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் ஏக்கத்தில் இருக்கும் நிலையில்இவர் மட்டும் இரண்டாம் திருமணம் செய்திருப்பது, ஊருக்குள் அரசல் புரசலாக பேசப்பட்டு வந்திருக்கிறது.

என்னதான் இரண்டு திருமணம் செய்தாலும், நம்பி வந்தவர்களை வாழ வைக்க வேண்டாமா? இரண்டு குடும்பத்திற்கும் சேர்த்து உழைக்க வேண்டும். ஆனால் தலைவன் கனகையா, கிடைத்த வருமானத்தில் வாழ்க்கையை நகர்த்தி வந்திருக்கிறார். வருமானம் போதாமல் இருக்கும்போது குடும்பத்திற்குள் குழப்பம் வருவது இயல்பானதுதான். அப்படிதான் இவரது குடும்பத்திற்குள்ளும் சண்டைகள் வந்திருக்கிறது. பிரச்சனைகளை சமாதானம் செய்ய சாமர்த்தியமாக யோசிக்காத கனகையா, அதை மேலும் வளர்த்திருக்கிறார்.

குறிப்பாக குடும்பத்திற்குள், சிரிஷாவின் தாய்தான் சண்டையை ஏற்படுத்திவிடுவதாக சிரிஷாவிடம் கனகையாக கோபித்துக்கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் சிரிஷாவின் தாய்க்கும், கனகையாவுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியிருக்கிறது. இப்படியே போனால் உன்னை கொன்றுவிடுவேன் என்று கனகையா மிரட்டியிருக்கிறார்.

இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர், சிரிஷாவின் தாய் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சோதனையில் சிரிஷாவின் தாய் கொலை செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கனகையாதான் இந்த செயலை செய்தார் என்பதும் உறுதி செய்யப்பட்டது. ஆனால் போலீசார் அவரை கைது செய்வதற்கு முன்னர், அவர் தலைமறைவாகிவிட்டார்.

அப்போது தலைமறைவான கனகையா, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சிரிஷாவின் வீட்டை தேடி வந்திருக்கிறார். அங்கு இவரது முதல் மனைவி கௌரம்மாவும் இருந்துள்ளார். தனது தாயை கொன்றதற்காக சிரிஷா கோபமாக இருப்பார் என்று கனகையா நினைத்துக்கொண்டிருந்த நிலையில், சிரிஷா இதைப்பற்றி ஒரு கேள்விக்கூட கேட்காமல் இருந்தது கனகையாவுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்து. ஆசை வார்த்தை கூறி அழைத்த சிரிஷா, கனகையாவுக்கு உணவும் பரிமாறியுள்ளார்.

ஆனால், கனகையா தட்டில் கை வைக்கும்போது சிரிஷா, தனது தாய் கொலை குறித்த கேள்விகளை எழுப்ப தொடங்கியுள்ளார். கனகையா கொலையை தொடர்ந்து மறுக்க அங்கு பெரிய விவாதம் எழுந்திருக்கிறது. இறுதியாக, டென்ஷன் ஆன சிரிஷாவும், கௌரம்மாவும் கனகையாவை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார். இதனையடுத்து கனகையாவின் உடல் ஊருக்கு வெளியில் ஒதுக்குப்புறமாக போடப்பட்டிருக்கிறது.

கனகையாவை காணவில்லை என்று புகார் எழ, ஊருக்கு வெளியில் சடலம் அழுகிய நிலையில் இருப்பதாக தகவல் வர, போலீசார் நடத்திய விசாரணையில் அது கனகையாவின் சடலம்தான் என்பதும், அவரை இரண்டு மனைவிகளும் சேர்ந்து கொலை செய்ததும் வெளியில் வந்திருக்கிறது. கனகையாவை கொலை செய்ய அரிவாள், கடப்பாரை உள்ளிட்ட பொருட்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் போலீசார் கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+