Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தனி அறையில் உறங்கிய கணவன்.. புதுப்பெண் இருந்த கோலம்.. புதுமணத்தம்பதிகள் அறிய வேண்டிய பெரிய பாடம்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் முசா பேட்டை ஆஞ்சநேய நகரில் வெங்கடசாயி யஷ்வந்த்- சந்தனா ஜோதி தம்பதி வசித்து வந்தனர். சந்தனா ஜோதி வீட்டில் இருந்தபடியே சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். யஸ்வந்த் மருந்துகடையில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு கடந்த 4 மாதம் முன்பு தான் திருமணம் நடந்தது. வீட்டிலேயே பணியாற்றி வந்த மனைவி சந்தனா ஜோதியுடன் வெங்கடசாயி யஷ்வந்த்போதிய நேரம் செலவிடவில்லை என்று கூறப்படுகிறது. மனைவி எடுத்த முடிவு ஆடிப்போக வைத்துள்ளது.

புதிதாக திருமணம் ஆன தம்பதிகள், திருமணம் ஆன புதில் தான் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நெருக்கமாக இருப்பார்கள். அப்போது தான் அவர்களுக்கு பல்வேறு விஷயங்களை விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். ஒருவரை ஒருவர் மதித்து நடக்க வேண்டும். பிரச்சனைகளை எப்படி கையாள வேண்டும்..

Husband slept in a separate room A big lesson newlywed couples need to learn

குடும்பத்தில் ஏற்படும் வாக்குவாதங்களை கையாள கற்றுக்கொள்வதும் இந்த காலக்கட்டத்தில் தான்.. எதிர்பார்ப்புகள் சரியாக இல்லாமல் ஏமாற்றமாக இருந்தால் அதனை எப்படி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது என்பதும் அறிவதும் திருமணம் ஆன புதிதில் தான். ஆனால் இதனை சரியாக புரிந்து கொள்ளாத தம்பதிகள், ஈகோ, கோபம், முன்கோபம், ஆத்திரம் போன்றவற்றால் வாழ்க்கையில் தவறுகளை செய்கிறார்கள்.

அதேபோல் துணையை மதிக்காமல் அவமரியாதையுடன் நடத்துவது, நேரம் செலவிடாமல் இருப்பது என தவறுகளை செய்கிறார்கள். ஆனால் சரி செய்ய தெரியாத துணை, அந்த சூழ்நிலையை கையாளத் தெரியாமல், பெற்றவர்களிடம் சொல்லி நிவாரணம் பெற முடியாமல் தவறான முடிவெடுக்கிறார்கள். ஆந்திராவிலும் அப்படித்தா புதிதாக திருமணம் ஆன பெண் முட்டாள்தனமான முடிவெடுத்துள்ளார்

ஆந்திர மாநிலம் முசா பேட்டை ஆஞ்சநேய நகரில் வெங்கடசாயி யஷ்வந்த்- சந்தனா ஜோதி (வயது 25) தம்பதி வசித்து வந்தார்கள். சந்தனா ஜோதி வீட்டில் இருந்தபடியே சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். யஸ்வந்த் அந்த ஊரிலேயே உள்ள ஒரு மருந்துகடையில் பணியாற்றுகிறார்.

வெங்கடசாயி யஷ்வந்த்- சந்தனா ஜோதி தம்பதிக்கு 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. வீட்டிலிருந்து பணியாற்றிய சந்தனாவுக்கு, தனது கணவர் தன்னுடன் அதிக நேரம் செலவிடவில்லை என்று கூறி அடிக்கடி வாக்குவாதம் செய்து வந்தாராம். இந்த சண்டையால் கடந்த ஒரு வாரமாக அவர்கள் தனித்தனி அறையில் படுத்து உறங்கி வந்துள்ளார்கள். இவர்களின் ஈகோ காரணமாக பிரச்சனை அதிகமாகி இருக்கிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் யஷ்வந்த் வழக்கம்போல வேலைக்கு கிளம்பிவிட்டு, மனைவி இருந்த அறை கதவை தட்டியபோது அவர் திறக்கவில்லை. சந்தேகம் அடைந்த அவர் கதவை உடைத்து சென்று பார்த்த பொழுது சந்தனா ஜோதி மின்விசிறியில் தூக்குபோட்டு தொங்கிக்கொண்டிருந்தார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மனைவியை இறக்கி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பொழுது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தார்கள். தகவல் அறிந்து வந்த போலீசார் யஷ்வந்திடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணம் ஆன நான்கு மாதத்தில் புதுப்பெண் வாழ்க்கையை முடித்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்கொலை எண்ணம் இருந்தால் அல்லது மன அழுத்தத்தில் இருந்தால், உடனடியாகத் தொடர்புகொள்ள வேண்டிய இலவச உதவி எண்கள்

Tele MANAS (தேசிய உதவி எண்)14416 : மத்திய அரசின் 24/7 மனநல உதவி மற்றும் ஆலோசனை எண். (1-800-891-4416 என்றும் அழைக்கலாம்).

மாநில உதவி எண் (104) 104 தமிழ்நாடு அரசின் சுகாதார உதவி சேவை (இதுவும் மனநல ஆதரவு வழங்குகிறது).

ஸ்னேகா (Sneha) 044-24640050 சென்னையில் உள்ள தற்கொலை தடுப்பு உதவி அமைப்பு.

AASRA +91-22-27546669 தற்கொலை தடுப்பு மற்றும் ஆலோசனைக்கான 24/7 சேவை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+