ஹைதராபாத்தில் அதிகாலையிலேயே குவிந்த அதிகாரிகள்.. நாகர்ஜுனாவின் பிரம்மாண்ட கட்டிடம் அதிரடியாக இடிப்பு
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடிகர் நாகர்ஜுனாவுக்கு சொந்தமான கட்டிடத்தை அதிகாரிகள் அதிரடியாக இடித்து தள்ளினார்கள். ஹைதராபாத்தில் உள்ள மாதாப்பூர் என்ற பகுதியில் தம்மி செருவு என்ற ஏரி இருக்கிறது. இந்த ஏரியை ஒட்டியுள்ள பகுதியில் என் கன்வின்சன் என்ற பெயரில் அரங்கம் ஒன்றை நடிகர் நாகர்ஜுனா கட்டியிருந்தார். இது 3.5 ஏக்கர் நீர் நிலையை ஆக்கிரமித்த புகாரில் இடிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநில தலைநகரான ஹைதரபாத் ஐடி தொழிலுக்கு புகழ் பெற்ற நகரமாகும். அது மட்டுமின்றி, ஒருங்கிணைந்த ஆந்திராவில் எங்குமே இல்லாத அளவிற்கு தொழில் நிறுவனங்கள், பல்வேறு வகையான தொழிற்சாலைகள் அமைந்துள்ள மாநிலம் ஆகும். மன்னர் காலத்து நகரமான ஹைதராபாத் சுமார் 60 கிமீ துரத்திற்கு மிகப்பெரிய சுற்றளவில் பரந்து விரிந்த நகரமாக உள்ளது.

இங்கு தெலுங்கு சினிமா திரையுலகின் ஜாம்பவான்கள் பலர் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்துள்ளனர். குறிப்பாக ஹைதராபாத்தின் ஹைடெக் சிட்டி அமைந்துள்ள மாதாப்பூரில் ஏராளமானோர் முதலீடு செய்துள்ளனர். அந்த வகையில மாதப்பூரில் உள்ள ஹைடெக் சிட்டியில் நடிகர் நாகார்ஜுனா அக்கினேனி இடம் வாங்கி போட்டு அங்கு என் கன்வின்சன் என்ற பெயரில் பெயரில் கட்டிடத்தை கட்டியிருந்ததார். இந்த கட்டிடத்தை ஹைதராபாத் மாநகராட்சி அதிகாரிகள் இன்று ஜேசிபியுடன் சென்று இடித்து அகற்றினார்கள்.
முன்னதாக ஹைதராபாத்தின் மாதாப்பூரில் தம்மிடி குந்தா ஏரி இருக்கிறது. சுமார் 3.30 முதல் 3.40 ஏக்கர் ஏரி நிலத்தை ஆக்கிரமித்து நடிகர் நாகார்ஜுனா மண்டபம் கட்டியிருந்தாக கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த மண்படம் குறித்த சர்ச்சை திடீரென ஏற்பட்டது இல்லை. பல ஆண்டுகளாக ஏரியின் உள்ளதாக புகார்கள் உள்ளது.
இது தொடர்பாக பாஸ்கர் ரெட்டி உள்பட பலர் அளித்தனர். மேலும் ஆக்கிரமிப்பு கட்டிடத்தை இடித்து தம்மிடி குந்தா ஏரி சீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஹைதராபாத் மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு அளித்தனர். இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தி அதிகாரிகள் கட்டிடத்தை இடித்து அகற்ற முடிவு செய்தனர். இதன்படி காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புடன், ஜேசிபி இயரங்களுடன் அதிகாரிகள் சென்றனர். மேலும் பாதுகாப்பு கருதி என் கன்விக்சன் மையத்திற்கு செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டன. இடிக்கப்படுவது தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற செய்திட ஊடகங்கள் கூட தளத்திற்குள் நுழைய அனுமதிக்கவில்லை
இந்த கட்டிடத்தை இடிக்க பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஜேசிபி இயந்திரகங்களுடன் சனிக்கிழமை அதிகாலையே அதிகாரிகள் வந்ததாக கூறப்படுகிறது. சர்ச்சைக்குள்ளான என் கன்விக்சன் மண்டபம் என்பது அதிநவீன உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டிருந்தது. மொத்தம் மூன்று கல்யாண மஹால்கள் இருந்தன. இங்கு திருமணம், நிச்சயதார்த்தம், குடும்ப விழாக்கள் மற்றும் அரசியல் கட்சி நிகழ்வுகள் நடந்து வந்தன. இந்த அரங்குகள் அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் திருமணம், நிச்சயதார்த்தம் மற்றும் பிற நிகழ்ச்சிகளுக்காக வாடகைக்கு விடப்பட்டு இருந்தது.
குறிப்பிட்ட தம்மிடி குந்தா ஏரி 29 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு, வருவாய், நீர்ப்பாசனம் மற்றும் கிரேட்டர் ஹைதராபாத் முனிசிபல் கார்ப்பரேஷன் (ஜிஹெச்எம்சி) குழுவினர் தம்மிடி குண்டாவின் முழு ஏரியின் அளவை ஆய்வு செய்தனர். அதில் நாகர்ஜுனா கட்டிய மண்டபம் அமைந்துள்ள இடம் 6.69 ஏக்கர் ஆகும். இதில், சுமார் 3.30 ஏக்கர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை கண்டனர். இதையடுத்தே அதனை இன்று இடித்துள்ளனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications