அதிகாலை 3.30 மணிக்கு போலீஸ் நடத்திய ஆபரேஷன்.. 4 பேரும் நடு நெற்றியில் சுட்டு கொலை.. என்ன நடந்தது?
ஹைதராபாத் பெண் மருத்துவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரும் இன்று அதிகாலை 3.30 மணிக்கு என்கவுண்டர் செய்யப்பட்டனர்.
Recommended Video
ஹைதராபாத்: ஹைதராபாத் பெண் மருத்துவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரும் இன்று அதிகாலை 3.30 மணிக்கு என்கவுண்டர் செய்யப்பட்டனர். இவர்களின் என்கவுண்டர் குறித்த கூடுதல் விபரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.
ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவர் பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றவாளிகள் முகமது ஆரிப் 26, ஜொள்ளு சிவா 20, ஜொள்ளு நவீன் 20, சிண்டகுண்டா சென்னைகேஷ்வலு 20 என நான்கு பேரும் இன்று என்கவுண்டர் செய்யப்பட்டனர். தெலுங்கானா போலீஸ் இவர்களை என்கவுண்டர் செய்தது.
ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் வன்புணர் செய்யப்பட்டு கடந்த 27ம் தேதி புதன் கிழமை மாலை கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.ஹைதராபாத்தின் சத்தனபள்ளி டோல் கேட் அருகே இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது.

என்ன செய்வார்கள்
பொதுவாக ஒரு குற்றம் நடந்தால் குற்றவாளிகளை மறுநாளே சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று குற்றம் நடந்ததை போலீஸ் விளக்க சொல்வார்கள். குற்ற அறிக்கையில் இதை உடனே பதிவு செய்வார்கள். ஆனால் இந்த ஹைதராபாத் வழக்கில் போலீசார் அப்படி செய்யவில்லை. ஒரு வாரம் போலீசார் இதற்காக காத்து இருந்தனர்.

நேற்று இரவு விசாரணை
இந்த நிலையில் நேற்று இரவே போலீசார் இவர்கள் நான்கு பேரையும் சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று விசாரிக்க முடிவு செய்துள்ளனர். இதனால் நேற்று இரவு முழுக்க நான்கு குற்றவாளிகளையும் போலீசார் தீவிரமாக விசாரித்துள்ளனர். நான்கு பேரையும் தூங்க விடமால் போலீசார் கடுமையாக விசாரணை செய்துள்ளனர்.

யார் கமிஷ்னர்
சைபராபாத் கமிஷ்னர் சஜ்னார் கொடுத்த உத்தரவின் பெயரில் தனிப்படை போலீசார் இவர்களை தீவிரமாக விசாரணை செய்துள்ளனர். அதன்பின் இன்று அதிகாலை 3.30 மணிக்கு போலீசார் இவர்கள் நான்கு பேரையும் அழைத்து சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். அங்கு குற்றம் நடந்ததை விளக்க வேண்டும் என்றுள்ளனர்.

விளக்கினார்கள்
அங்கு 6 போலீசாருக்கும் மேல் சென்றுள்ளனர். முதலில் குற்றத்தை விளக்கிய நான்கு பேரும் பின் வேகமாக புதருக்குள் குதித்து தப்பி ஓட முயன்று உள்ளனர். ஒருவர் தேசிய நெடுஞ்சாலைக்குள் சென்று தப்பி ஓட முயன்று இருக்கிறார். இதனால் அங்கிருந்த போலீசார் வரிசையாக நான்கு பேரையும் சுட்டுக்கொன்றனர்.

யார் முதலில்
இந்த என்கவுண்டரில் முக்கிய குற்றவாளி முகமது ஆரிப் கடைசியாக சுட்டுக் கொலை செய்யப்பட்டார். நான்கு பேரின் நெற்றியிலும், அடிவயிற்றுப் பகுதியிலும் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் நேற்று இரவு முழுக்க போலீசார் இவர்களுக்கு கடுமையான விசாரணை டிரீட் மென்ட் கொடுத்துள்ளனர்.

தாக்கினார்கள்
மேலும் இந்த சம்பவம் நடந்த போது போலீசார் ஒருவரும் காயம் பட்டு இருக்கிறார். ஆனால் அவருக்கு கையில் மட்டும்தான் காயம் ஏற்பட்டது. பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications