நீங்க எங்களின் ஹீரோ.. என்கவுண்டர் நடந்த பாலத்திலிருந்து போலீசை மலர் தூவி வரவேற்ற மக்கள்.. மாஸ்!
ஹைதராபாத்தில் வன்புணர்வு குற்றவாளிகளை என்கவுண்டர் செய்த போலீசாருக்கு அப்பகுதி மக்கள் மலர் தூவி மரியாதை செய்துள்ளனர்.
Recommended Video
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் வன்புணர்வு குற்றவாளிகளை என்கவுண்டர் செய்த போலீசாருக்கு அப்பகுதி மக்கள் மலர் தூவி மரியாதை செய்துள்ளனர்.
யாரும் எதிர்பார்க்காத வகையில் ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவர் பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றவாளிகள் அனைவரும் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகள் நான்கு பேரையும் போலீசார் என்கவுண்டர் செய்தனர்.
முகமது ஆரிப் 26, ஜொள்ளு சிவா 20, ஜொள்ளு நவீன் 20, சிண்டகுண்டா சென்னைகேஷ்வலு 20 என நான்கு பேரும் இன்று என்கவுண்டர் செய்யப்பட்டனர். தெலுங்கானா போலீஸ் இவர்களை என்கவுண்டர் செய்தது. இதற்கு அப்பகுதி மக்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

என்ன செய்தனர்
அங்கு கூடிய மக்கள் எல்லோரும் போலீசுக்கு கை கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். தெலுங்கானா போலீஸ் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறது. இப்படி தான் அவர்களை கொலை செய்ய வேண்டும். அவர்களுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்று மக்கள் தெரிவித்துள்ளனர்.

எப்படி சம்பவம்
அதோடு சம்பவம் நடைபெற்ற பாலத்தில் இருந்து மக்கள் மலர் தூவி வருகிறார்கள். கீழே கொல்லப்பட்ட பெண்ணுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், போலீசை பாராட்டும் வகையிலும் அவர்கள் மலர் தூவி வருகிறார்கள். இந்த நிகழ்வு வீடியோவாக வெளியாகி உள்ளது.

போலீஸ் கமிஷ்னர்
அதேபோல் சைபராபாத் கமிஷ்னர் சஜ்னாருக்கு மக்கள் பெரிய அளவில் வரவேற்பு கொடுத்துள்ளனர். ஏசிபி சிந்தாபாத், டிசிபி சிந்தாபாத் என்று அவர்கள் கோஷம் எழுப்பி வருகிறார்கள். அதோடு கமிஷ்னர் சஜ்னார்தான் எங்கள் ஹீரோ என்று மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

என்கவுண்டர் செய்தது
இன்னொரு பக்கம் இந்த என்கவுண்டரை அப்பகுதி மாணவர்கள் கொண்டாடி வருகிறார்கள். சாலைகளில் பலருக்கும் சுவீட் கொடுத்து, மாணவர்கள் கோஷம் எழுப்பி வருகின்றனர். போலீஸ் செய்ததில் எந்த தவறும் கிடையாது, அவர்களுக்கு நாங்கள் ஆதரவு அளிக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications