ஹைதராபாத் என்கவுண்டர்.. 8 நாட்கள் நடந்த விசாரணை.. போலீசை கோபத்திற்கு உள்ளாக்கிய அந்த வாக்குமூலம்!
ஹைதராபாத்தில் என்கவுண்டர் நடப்பதற்கு முன் போலீசார் நடத்திய விசாரணையில் குற்றவாளிகள் அதிர்ச்சி அளிக்க கூடிய வாக்குமூலங்களை அளித்தனர்.
Recommended Video
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் என்கவுண்டர் நடப்பதற்கு முன் போலீசார் நடத்திய விசாரணையில் குற்றவாளிகள் அதிர்ச்சி அளிக்க கூடிய வாக்குமூலங்களை அளித்தனர். இந்த வாக்குமூலம் காரணமாக , போலீசாருக்கு அந்த குற்றவாளிகள் மீது கடுமையான கோபம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
யாரும் எதிர்பார்க்காத வகையில் ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவர் பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றவாளிகள் அனைவரும் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். முகமது ஆரிப் 26, ஜொள்ளு சிவா 20, ஜொள்ளு நவீன் 20, சிண்டகுண்டா சென்னைகேஷ்வலு 20 என நான்கு பேரும் இன்று என்கவுண்டர் செய்யப்பட்டனர்.
இன்று அதிகாலை இந்த என்கவுண்டர் சம்பவம் நடைபெற்றது. இந்த என்கவுண்டர் குறித்து அதிர வைக்கும் உண்மைகள், பின்னணிகள் வெளியாகி வருகிறது.

என்ன சொன்னார்கள்
ஹைதராபாத்தில் என்கவுண்டர் நடப்பதற்கு முன் போலீசார் நடத்திய விசாரணையில் குற்றவாளிகள் அதிர்ச்சி அளிக்க கூடிய வாக்குமூலங்களை அளித்தனர். இந்த வாக்குமூலம் காரணமாக, போலீசாருக்கு அந்த குற்றவாளிகள் மீது கடுமையான கோபம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதுதான் என்கவுண்டரை தூண்டியது என்கிறார்கள்.

எப்படி இணைத்த
போலீசாரிடம் அந்த குற்றவாளிகள் அன்று நடந்த சம்பவம் குறித்து வாக்குமூலம் அளித்துள்ளனர்.அதன்படி அந்த பெண் பைக்கை டோல் கேட் அருகே நிறுத்திய 20 நிமிடத்தில் அவரின் பைக்கை பஞ்சர் செய்துள்ளனர். பின் அந்த பெண் வர வேண்டும் என்று காத்து இருந்துள்ளனர்.
அதன்பின் அந்த பெண் இரவு 9.25 மணிக்கு அங்கு வந்த பின், உதவி செய்வது போல முக்கிய குற்றவாளியான லாரி டிரைவர் பைக்கை வாங்கிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

மற்ற மூவர்
மற்ற மூன்று ஆண்களும் அந்த பெண்ணை தாக்கிவிட்டு, அருகில் இருந்த புதருக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு முதலில் அந்த பெண்ணின் போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளனர்.அதற்கு பிறகு அந்த பெண்ணை வன்புணர்வு செய்துள்ளனர். ஆனால் அந்த பெண் தொடர்ந்து கத்திகொண்டே இருந்தார் என்பதால், அவரின் வாயில் மதுவை ஊற்றி கொடுத்துவிட்டு, பின் தலையில் கல்லால் அடித்துள்ளனர்.

கொலை செய்தனர்
கடைசியில் கொலை செய்துவிட்டு அங்கிருந்து 27 கிமீ அவரின் உடலை லாரியில் வைத்து கொண்டு சென்றுள்ளனர். 27 கிமீ தூரத்தில் இரண்டு செக் போஸ்ட்டுகளை அவர்கள் கடந்து சென்றுள்ளனர். ஆனால் அவர்களை போலீஸ் அப்போது சந்தேகப்படவே இல்லை . பின் அதிகாலை 2.30 மணிக்கு அந்த பெண்ணின் உடலை பாலத்திற்கு கீழ் வைத்து எரித்துள்ளனர்.

போலீசாருக்கு கோபம்
அந்த பெண்ணுக்கு மது கொடுத்து கொடுமைப்படுத்தியது போலீசாருக்கு பெரிய அளவில் கோபத்தை உருவாக்கி உள்ளது. அந்த பெண்ணை அவர்கள் சாகும் வரை கொடுமைப்படுத்தி உள்ளனர். இதெல்லாம் கேட்ட பின் போலீசார் அவர்கள் மீது கடும் கோபம் அடைந்துள்ளனர்.

அப்போதே பிளான்
அப்போதே இவர்கள் என்கவுண்டர் பிளானை போட்டு இருக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். இதனால் விசாரணையின் போதே போலீசார் 4 குற்றவாளிகளையும் தாக்கி உள்ளனர். விசாரணையின் போதே இதில் இரண்டு பேரின் கைகள் உடைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

என்ன வாய்ப்பு
ஆம், அப்போதே இவர்களை என்கவுண்டர் செய்ய முடிவு செய்துவிட்டு, சரியாக நேரம் வரும் போது தற்போது என்கவுண்டர் செய்து இருக்கிறார்கள். போலீசுக்கு இந்த வாக்குமூலம்தான் என்கவுண்டர் செய்யும் எண்ணத்தை ஏற்படுத்தி இருக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். ஆனால் போலீஸ் தரப்பு அவர்கள் தப்பி ஓடும் போது என்கவுண்டர் செய்தோம் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications