சிறகடிக்கும் சிறுமி சிகரத்தில் ஏறினார்.. கிளிமஞ்சாரோவில் ஏறி சாதனை படைத்த 13 வயது சிறுமி.. எப்படி?

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: பட்டாம்பூச்சிப் போல பறந்து திரிந்து சந்தோஷமா இருக்க வேண்டிய வயதில் சிகரம் ஏறி சாதனை படைத்துள்ளார் தெலுங்கானாவை சேர்ந்த 13 வயது சிறுமி.

பொதுவாக வளர்ந்து வரும் குழந்தைகளிடம் நீ என்னவாக ஆசைப்படுகிறாய் என்று கேட்போம், அந்த குழந்தையும் டாக்டர் ஆவேன், கலெக்டர் ஆவேன் என்று பெற்றோர் சொல்லிக் கொடுத்ததை அப்படியே சொல்லும். அந்த மனதோடுதான் படித்து வரும் குழந்தைகள் அவர்களுக்கென உள்ள இலக்கத்தை அடைய முயற்சி செய்வார்கள்.

ஆனால் தெலுங்கானாவைச் சேர்ந்த 13 வயது சிறுமி இந்தியாவில் இமய மலை போல உள்ள ஒரு மலையில் ஏறி சாதனைப்படைத்து உலகத்தையே தன்னை கவனிக்க வைத்துள்ளார். சிறுமி ஹஸ்வி ஏறி சாதனை படைத்துள்ளது ஆப்பிரிக்காவில் உள்ள கிளிமஞ்சாரோ மலையில்தான்.

13 வயது பள்ளிச் சிறுமி

13 வயது பள்ளிச் சிறுமி

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 13 வயதான சிறுமி முறிக்கி புலாகிதா ஹஸ்வி. இவருக்கு படிப்பில் மட்டும் ஆர்வம் அல்ல. புதியதாக ஏதாவது சாதனை படைக்க வேண்டும் என்பதும் நீண்ட நாள் ஆசை. எனவே உயரமான மலையில் ஏறி சாதனை படைக்கலாம் என முடிவெடுத்த ஹஸ்வி, மலையேறுதல் தொடர்பான வீடியோக்கள், திரைப்படங்களை திரும்ப திரும்ப பார்த்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அதற்கான டிரெக்கிங் பயிற்சியும் எடுத்துள்ளார். இவரது ஆர்வத்தை கண்டு பெற்றோரும் மகிழ்ச்சியுடன் ஆதரவு தெரிவித்துள்ளனர். கொரானா காலத்தில் பள்ளி விடுமுறை என்பதால் ஹஸ்விக்கு பயிற்சி எடுக்க நிறைய அவகாசம் கிடைத்தது.

கிளிமாஞ்சாரோ மலை

கிளிமாஞ்சாரோ மலை

இதையடுத்து ஆப்பிரிக்கா நாட்டில் உள்ள கிளிமஞ்சாரோ மலையை தேர்ந்தெடுத்து அதில் ஏறுவதென முடிவு செய்துளளார். இதற்காக பல பயிற்சிகள் எடுத்த ஹஸ்வி அதன் மீதேறி சாதனை படைத்துள்ளார். தான் இந்தியாவை சேர்ந்தவர் என்பதற்காக அவர் இந்திய தேசியக் கொடியையும் கையில் வைத்து புகைப்படம் எடுத்துள்ளார். மேலும் இந்த சாதனைக் குறித்து பேட்டி அளித்துள்ள சிறுமி ஹஸ்வி நிறைய திரைப்படங்களை பார்த்து மலையேற பயிற்சி பெற்றதாகவும், இதேபோல் உலகத்தில் உள்ள 7 உயரமான மலைகளில் ஏறி சாதனை படைக்க ஆசை எனவும் தெரிவித்துள்ளார்.

இளம் வயது சாதனையாளர்

இளம் வயது சாதனையாளர்

இந்த மலையில் ஏறிய இளம் வயதுடையவர்கள் சாதனை படைத்தவர்களில் இவர் 3வது நபர் எனக் கூறலாம், ஏனெனில் கடந்த மார்ச்சில் ஆந்திராவை சேர்ந்த 9 வயது சிறுமி ரித்விகா ஸ்ரீ இந்த மலையில் ஏறியதன் மூலம் 2வது நபர் என கணக்கெடுக்கப்பட்டுள்ளது. கிளிமஞ்சாரோ மலை ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான டான்சானியா நாட்டின் வடகிழக்குப் பகுதியில் உள்ளது. எரிமலை வகையில் மிக உயரமானது இதுவே.

மலையின் புகழ்

மலையின் புகழ்

கிளிமாஞ்சாரோ மலையின் உயரம் கடல் மட்டத்திலிருந்து 19,340 அடி. இமயமலைத் தொடர்களில் உள்ள மலைகளை ஒப்பிட்டுப் பார்த்தோமேயானால் கிளிமஞ்சாரோவின் உயரம் அதிகம் இல்லை என்றாலும் ஆப்பிரிக்க கண்டத்தை பொறுத்தவரை இது பெரியமலை. 3 நண்பர்கள் கிடைத்தாலே செல்போனை எடுத்து வைத்து பப்ஜி போன்ற எதிர்காலத்தை சீரழிக்கும் விளையாட்டுகளை ஆடும் மாணவர்கள் மத்தியில் மலையேறி சாதனை படைத்து தெலுங்கானா மாநிலத்திற்கும் இந்தியாவிற்கும் உலக அளவில் பெருமை சேர்த்துள்ள ஹஸ்வியை பாராட்ட வேண்டியது அரசாங்கம் மட்டும் அல்ல நாமும்தான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+